தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து 3 மாதங்கள் முடிய போகின்றன. இந்நிலையில் விஜய் அரசுக்கு முக்கியமான நாட்களாக ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகள் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான அரசு அமைந்து சர்ச்சைகளும் விமர்சனங்களும் பாராட்டுகளும் என கலவையான கருத்துகளை காண முடிகிறது. ஒருபுறம் இவர்கள் அனைவரும் ஆட்சிக்கு புதியவர்கள் , எதுவும் தெரியவில்லை என திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் பதிலடியும் தரப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு முதல் டெஸ்டாக வந்துள்ளது மாநில பட்ஜெட். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த திமுக ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. புதிதாக அமையும் அரசு தான் இந்த நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் விஜய் அரசு தனது முதல் பட்ஜெட்டை இந்த வாரம் தாக்கல் செய்ய உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 5ஆம் தேதி காலை 10 மணிக்கு 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசிப்பார். அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ’AI நகரம்’: விஜய் அரசின் மாஸ்டர் பிளான்..!! அதுவும் இந்த ஊரில்..!!
இதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அறிவிக்கப்படும். அதன் பின் பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அறிவிப்புகளாக இதில் இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மாண்புமிகு மகளிர் திட்டமாக மாற்றி 2,500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்காக பெண்கள் காத்திருக்கின்றனர்.
ரூ.3 கோடி முதலீட்டில் ரூ.30 கோடி லாபம்.. விக்ரம் பிரபு செய்த தரமான சம்பவம்..!!
அதே போல பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், திருமணத்தின் போது தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக ஏஐ நகரம், அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவையும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டில் எல்நினோ பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் தலைமையிலான அரசு மக்களிடையே பெற்றுள்ள நன்மதிப்பை தக்க வைக்க சிறந்த வாய்ப்பாக பட்ஜெட் பார்க்கப்படுகிறது. இதனால் என்னென்ன விஷயங்களில் விஜய் அரசு அறிவிப்பு வெளியிடும் என ஆர்வம் அதிகரித்துள்ளது.
More Articles
- தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ’AI நகரம்’: விஜய் அரசின் மாஸ்டர் பிளான்..!! அதுவும் இந்த ஊரில்..!!
- நச்சுன்னு நாலு.. விஜய் முன்னிலையில் நடந்த மெகா ஒப்பந்தம்..!!
- விஜய் போட்ட புதிய கமிட்டி.. ரூ.13 லட்சம் கோடி கடனை தீர்க்க முதல் படி!
- விஜய் சார் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! பாக்ஸ்கான் பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறது!
- விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா நடிகர் தனுஷ்? ரசிகர்களிடம் பேசிய வீடியோ வைரல்..!!
- முதலமைச்சர் அலுவலகத்தை இடம் மாற்றும் விஜய்..!! இனி முதலமைச்சரை பார்க்க இங்க தான் போகனும்..!!