தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பட்ஜெட் அறிக்கை 5ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விஜய் தலைமையிலான அரசுக்கு முக்கிய கொள்கை ஆலோசகராக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசின் முக்கிய இலக்குகள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட் வெளியிடும் நேரத்தில் பிரவீன் சக்கரவர்த்தியின் தகவல்கள் இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. விஜய் தலைமையிலான அரசு தற்போது இரு முக்கியமான விஷயத்தில் மாட்டிக்கொண்டு உள்ளது..
ஒருப்பக்கம் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொண்டு உள்ளது. மறுமுனையில் விஜய் தலைமையிலான அரசு அதிகப்படியான மக்கள் நில திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டிய காட்டாயத்தில் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான் CAPEX-க்கான முதலீட்டை ஒதுக்க வேண்டும்.
இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் பொருட்டு இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருமானத்தை அதிகரிப்பது தான் முக்கியமான இலக்காக இருக்கும். இதை உறுதி செய்யும் வகையில் தான் பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசின் முக்கிய இலக்காக மாநிலத்தின் வருமானத்தை அதிகரிப்பது தான், மாநிலத்தின் சொந்த வரி வருமானம் GSDPயில் 5.5 சதவீதமாக குறைந்துல்ளது. இது 15 வருடங்களுக்கு முன்பு 8 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. இதை மேம்படுத்துவதற்காவே மான்டெக் சிங் தலைமையிலான சிறப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுபானம் மீதான கலால் வரி வசூல் அளவு 35000 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சிறப்பான நிர்வாகமின்மையும் ஊழலும் தான் முக்கியமான காரணம் என பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இதை தாண்டி சொத்து வரி வசூல், அரசுக்கு சொந்தமான இடங்களையும், சொத்துக்களையும் முறையாக பயன்படுத்தி பணமாக்கும் முயற்சியையும் விஜய் தலைமையிலான அரசு எடுக்க உள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கான மாற்றங்களை இந்த பட்ஜெட் அறிக்கையில் இருந்து தெரிய வரும் என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். இதுநாள் வரையில் தமிழ்நாடு அரசு நல திட்டம் மற்றும் செலவுகள் அடிப்படையிலான பட்ஜெட் கொள்கை முறையை இந்த பட்ஜெட்டில் இருந்து முதலீடு, நிதியியல் சீரமைப்பு, வருமானத்தை உருவாக்குதல் என நீண்ட கால அடிப்படையிலான கொள்கை அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- அனைத்து பயிர்க்கடன்களும் தள்ளுபடி? விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுமா விஜய் அரசு?
- பரந்தூர் ஏர்போர்ட்ட விடுங்க.. ராமேஸ்வரம் ஏர்போர்ட் வரப் போகுது..! தமிழக அரசுக்கு வந்த முக்கிய கடிதம்..!!
- விஜய் அரசுக்கு முதல் டெஸ்ட்..!! ஆகஸ்ட் 5 மற்றும் 6 முக்கியமான தேதி..!! மக்கள் நினைப்பது நடக்குமா?
- தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ’AI நகரம்’: விஜய் அரசின் மாஸ்டர் பிளான்..!! அதுவும் இந்த ஊரில்..!!
- நச்சுன்னு நாலு.. விஜய் முன்னிலையில் நடந்த மெகா ஒப்பந்தம்..!!
- விஜய் போட்ட புதிய கமிட்டி.. ரூ.13 லட்சம் கோடி கடனை தீர்க்க முதல் படி!