சமீபகாலமாக ஐடி துறையில் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. அதோடு தொடர் பணி நீக்கங்களும் ஒரு புறம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் நிறுவனங்களோ ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை காரணம் காட்டுகின்றன. தற்போது புதிய பிரச்சினையாக பாரம்பரிய பட்டப்படிப்புகளுக்கு பதிலாக நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோடிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்பவர்களுக்கே முன்னுரிமை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுபோன்ற திறமை உள்ளவர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்கி பணியமர்த்த முன் வருவதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நாஸ்காம் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான AI வேலை வாய்ப்புகள் இன்னும் காலியாக இருப்பதாகவும், AI வேலை வாய்ப்புகளின் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 41% வரை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் கூறியுள்ளது.
ஐடி துறை மட்டுமின்றி உற்பத்தி துறை, லாஜிஸ்டிக்ஸ், விவசாயம் இப்படி பல துறைகளில் AI சார்ந்த ஊழியர்களுக்கு டிமாண்ட் இருக்கிறதாம். காலத்திற்கு ஏற்ப AI தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு பணியில் சேர்ப்பவர்கள் 147 சதவீதம் வரை சம்பள உயர்வு பெற்று சிறப்பாக வேலை செய்கின்றனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உங்க பிஎப் கணக்கில் முதலில் இதை செக் பண்ணுங்க.. தப்பா இருந்தா PF பணம் கிடைப்பதில் சிக்கல் வரும்!
இதில் சுவாரசியம் என்னவென்றால் AI திறன்களை கற்றுக் கொண்ட ஃபிரஷர்களாக இருந்தாலும் அவர்களுக்கு 155 சதவீதம் வரை அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் AI ஏஜென்ட்களுக்கான தேவை இரட்டிப்பாகியுள்ளது. இந்தியா மட்டுமல்ல யுகே போன்ற நாடுகளிலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் இன்ஜினியர்களின் சம்பளம் பிற ஊழியர்களை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கிறது.
யுனிவர்சல் AI யூனிவர்சிட்டியின் துணைவேந்தரான சைமன் மேக் இது குறித்து கூறுகையில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் ஐடி துறைக்கு மட்டுமே உரித்தான விஷயமாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதன் பயன்பாடு எல்லா துறைகளிலும் இருக்கிறது. குறிப்பாக மருத்துவம், உற்பத்தி, கல்வி, கலைத்துறை என அனைத்து துறைகளிலும் அடிப்படையான விஷயமாக மாறி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் பட்டதாரிகள் IT படிப்பை முடிக்கின்றனர். ஆனால் அவர்களில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களிடம் மட்டுமே நிறுவனங்கள் எதிர்பார்க்கும் AI மற்றும் மெஷின் லேர்னிங் திறன்கள் இருக்கிறது. எனவே ஐடி துறைக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பல்கலைக்கழகங்கள் கண்டிப்பாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற முக்கியமான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். அதேபோல அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் அதை கற்றுக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பணியில் சேர்ப்பவர்களிடம் நிறுவனங்கள் வெறும் தொழில்நுட்ப அறிவை மட்டும் பார்ப்பதில்லை. அவர்களிடம் பிராப்ளம் சால்விங் திறன் இருக்கிறதா? அனலெட்டிக்கல் திங்கிங் இருக்கிறதா? என்ற அனைத்தையும் எதிர்பார்க்கின்றனர்.எனவே AI, சைபர் செக்யூரிட்டி போன்ற திறன்களை படிக்கும் போதே வளர்த்துக் கொள்ளும் திறமையானவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சம்பளத்தை விட 15 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதாகவும் சைமன் தெரிவித்திருக்கிறார்.
காலத்திற்கு ஏற்ப மாணவர்களாக இருந்தாலும் சரி.. ஊழியர்களாக இருந்தாலும் சரி.. புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் தங்களுக்கென ஒரு வேலை வாய்ப்பை பெற முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
More Articles
- AI-ஐ வைத்து ரிமோட் ஜாப் வாங்கிய பெண்! ரூ.10 லட்சம் சம்பளத்தை ரூ.80 லட்சமாக மாற்ற உதவிய ChatGPT!
- 2 ஆண்டுகளில் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.26 லட்சம் வருமானம்.. பெங்களூரு டெக்கியின் அசுர வளர்ச்சி..!!
- ரூ.75 லட்சம் வேண்டாம்.. சொந்த ஊருக்கே நடையை கட்டிய இளம்பெண்.. இப்போ எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
- ரூ.2.4 லட்சம் சம்பளம் டூ ரூ.1 கோடி சொத்து.. பெங்களூரு டெக்கியின் அசுர வளர்ச்சி..!!
- 10 வருடத்துக்கு முன் இந்த வேலை இல்லவே இல்ல! ஆனா இப்போ இதுக்கு தான் அதிகப்படியான சம்பளம்!
- இளைஞர்களே இன்டர்ன்ஷிப் வழங்கி மாதம் ரூ.5000 உதவித்தொகை.. 90,800 காலி இடங்கள்.. உடனே ஜாயின் பண்ணுங்க!