வீட்டுக்கடன் ஈஎம்ஐ மீதான கேஷ்பேக் ஆஃபர் லாபமா..? நஷ்டமா..?

தனியார் பிரிவு கடன் வழங்குனரான ஐசிஐசிஐ வங்கி ஒரு சிறப்பு வீட்டுக்கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இது வங்கிக்கு அதன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் மற்றும் அவர்களைச் சிறந்த வட்டி விகிதங்களுக்காக இதர வங்கிகளைத் தேடிப் போகாமலும் தடுக்கின்றது.

இந்த வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முதல் ஈஎம்ஐ (சமமாகப் பிரிக்கப்பட்ட மாதாந்திரத் தவணைத் தொகை) யின் தொடக்கத்திலிருந்தே 1% பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாக (கேஷ்பேக்) வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் அது வெவ்வேறு நிலைகளில் அவர்களது கணக்கில் வைப்பில் வைக்கப்படும்.

36 ஈஎம்ஐ

முதல் தொகுதியாக 36 ஈஎம்ஐ க்களுக்குப் பிறகு, முதல் வைப்பு நிகழும். அதன்பிறகு ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும். வாடிக்கையாளர்களை முதல் மூன்று வருடங்களுக்குத் தங்கள் வங்கியுடனேயே ஒட்டியிருக்கச் செய்ய வேண்டும் என்பதே வங்கியின் திட்டமாகும்.

கேஷ்பேக்

முதல் வைப்புக்குப் பிறகு, ஒவ்வொரு ஈஎம்ஐ மீதான 1% பணம் 12 வது ஈஎம்ஐ நிறைவடைந்த பிறகு வாடிக்கையாளருக்குச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் வழியாக வங்கி வெளிப்படையான தள்ளுபடிகளைத் தள்ளிப் போட முயற்சிக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் இதர வங்கிகளுக்கு இடமாற்றமடைவதை தடுக்க முனைகிறது.

தள்ளுபடிகளே சிறந்தது

நிதி ஆலோசகர்கள் வெளிப்படையான தள்ளுபடிகள், கேஷ்பேக்குகளை விடச் சிறந்தது என்று கூறுகின்றனர். முன்கூட்டி பணம் செலுத்தியதற்கான அபாராதங்கள் இல்லாமலிருத்தல் சிறந்த வட்டி விகிதங்களுக்காக வாடிக்கையாளர்கள் இதர வங்கிகளுக்கு விரைவாக இடம் பெயராமலிருப்பதை உறுதி செய்கிறது.

புதிய வாடிக்கையாளர்கள்

ஏனென்றால், வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது பொதுவாக அதன் புதிய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே செய்கிறது, பழைய வாடிக்கையாளர்கள் பழைய வட்டி விகிதங்களையே சுமக்கின்றனர். இதனால் பழைய வாடிக்கையாளர் அதிக அளவு வட்டி விகிதத்தைக் கடன் காலம் முழுவதும் சுமக்க நேரிடுகிறது.

தொடர் கண்காணிப்பு

வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பதில் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்து முந்தைய தள்ளுபடிகளை விட ஏதேனும் வெளிப்படைத் தள்ளுபடிகள் சலுகையாக வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

நிதியியல் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். சில குறிப்பிட்ட கால வரையறைகளின் முடிவில் கேஷ்பேக்குகளை விடச் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறுவது சிறந்தது.

 

இதுதான் உண்மை

முன்னணி முதலீட்டு ஆலோசகரான ஹர்ஷ் ரூங்த்தா, கூறுகையில் "பணத்தைத் திரும்பச் செலுத்தும் கேஷ்பேக் திட்டங்கள் கடனளிப்பவர்களைத் தள்ளுபடிகளை ஒத்திவைக்க அனுமதிக்கிறது. மேலும் சிறந்த வட்டி விகிதங்களுக்காக வாடிக்கையாளர்கள் இதர வங்கிகளுக்கு இடமாற்றமடைவதை நிறுத்துகிறது. இப்பொதெல்லாம், வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் சிறந்த வட்டி விகிதங்களைத் தேடுவதால், சில வருடங்களுக்கு மேல் ஒரே கடனளிப்பவருடன் ஒட்டியிருப்பதில்லை. இந்தத் திட்டங்கள் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் இட மாற்றமடையாமல் தடுப்பதில் உதவுகிறது. ஆனால், கடனாளிகளுக்கு, முந்தைய திட்டத்தை விட வெளிப்படையான தள்ளுபடிகளைப் பெறுவதே சிறந்தது." என்கிறார்.

கடன் காலம்

இந்தத் திட்டத்தின் கீழ் கடனின் கால வரையறை 15 முதல் 30 வருடங்களாகும். வாடிக்கையாளர்கனள் அவர்களுடைய வீட்டுக்கடனின் செலுத்தப்படாத அசலுக்கு எதிராகக் கேஷ்பேக் தொகையைச் சரிக்கட்டுவதையோ அல்லது அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடி வைப்பாகப் பெற்றுக் கொள்வதையோ தேர்ந்தெடுக்கலாம்.

Read more about: cashback home loan emi loan

Have a great day!
Read more...

English Summary

Do cashbacks on home loan EMIs work?