ரூ.10,000 முதலீட்டில் நீங்களும் பிஸ்னஸ் மேன் ஆகலாம்!

பிஸ்னஸ் ஒன்றைத் துவங்க வேண்டும் என்றால் அதற்குக் கண்டிப்பாக முதலீடாகப் பணம் வேண்டும். இன்றைய அளவில் மிகப் பெரிய பிசினஸ் மேனாக இருக்கும் பலரும் துவக்கத்தில் முதலீட்டிற்காக் கஷ்டப்பட்டவர்கள் தான்.

தற்போதைய சூழலில் ஒரு பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்றால் லட்சக் கணக்கில் பணம் வேண்டும் என்பதில்லை. எனவே சிறிய அளவில் வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் துவங்க கூடிய பிஸ்னஸ்களின் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

டிபன் செண்ட்டர்

உங்கள் ஊரின் முக்கிய ஜெங்ஷன்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிப்பன் செண்ட்டர் ஒன்றை எளிதாக 10,000 ரூபாய் முதலீட்டில் துவங்கலாம். காலை அல்லது மாலை நேரங்களில் டிபன், டீ, காப்பி என்று விற்றாலும் கூடத் தினமும் நல்ல லாபத்தினைப் பெற முடியும்.

ஆன்லைன் பேக்கரி

விட்டில் இருந்த படியே உங்களுக்குக் கேக், சாக்லேட் போன்றவற்றைத் தயாரிக்கத் தெரியும் என்றால் 10,000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.

ஜூஸ் கடை

அன்மை காலமாகப் பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களைத் தவிர்த்து இயற்கையான பழ இரசங்களைக் குடிக்க மக்கள் விரும்புகின்றனர். எனவே பழரசம் விற்கும் கடைகளையும் எளிமையாகக் குறைந்த முதலீட்டில் துவங்கலாம். ஜூஸ் மட்டும் இல்லாமல் டீ, காப்பிப் போன்றவற்றையும் விற்கலாம்.

பிளாக் எழுதுதல்

டிஜிட்டல் உலகில் உங்கள் வீட்டில் இணையதளம் மற்றும் கணினி இருந்து கட்டுரை எழுந்தும் திறன் இருந்தால் குறைந்தது 500 ரூபாய் முதலீட்டில் தொழிலை துவங்க முடியும். தனித்துவமாக உங்களது பிளாக் இருக்கும்போது சில மாதங்களில் நீங்கள் நல்ல வருமானத்தினைப் பெற முடியும்.

கிராப்பிக் டிசைனர்ஸ் / கட்டுமான வடிவமைப்பாளர்கள்

கிராப்பிக் டிசைன், கட்டுமான வடிவமைப்பு போன்றவை உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் முதலில் தனி ஒரு ஆளாக இருந்து குறைந்த முதலீடு செய்து தொழிலைத் துவங்க முடியும்.

சமையல் வகுப்பு

வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் பலருக்கு சமையல் தெரியாத நிலை உருவாகியுள்ளது. எனவே சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் சமையல் வகுப்பைத் தேடி நிறைய நபர்கள் பயிற்சிக்கு செல்கின்றனர்.இவர்களுக்காகச் சமையல் வகுப்பைக் குறைந்த முதலீட்டில் துவங்கலாம்.

ஆடைத் தையல்

வீட்டில் இருந்தபடியே 10,000 ரூபாய் முதலீட்டிற்குள் ஆடைகளைத் தைக்கும் தொழிலைத் துவங்கலாம். பின்னர் 4 அல்லது 5 நபர்களாகச் சேர்ந்து பொட்டிக் போன்ற கடைகளைத் திறக்கலாம். அல்லது வேலைக்கு ஆட்களை வைத்தும் சம்பாதிக்கலாம்.

தபால் நிலையம் / கொரியர்

கொரியர் நிலையங்கள் பொன்று தபால் நிலயங்களும் பிராஞ்சிஸ் சேவையினை அளிக்கின்றன. குறைந்த முதலீட்டில் தபால் நிலையத்திற்கான பிராஞ்சிஸ் பெற்று எளிதாக உங்கள் பிஸ்னஸை துவங்கலாம்.

யூடியூப் சேனல்

கேமராவுடன் ஒரு மொபைல் போன் மற்றும் விடியோக்கல் எடுக்கும் திறன் உங்களுக்கு இருந்தால் யூடியூப் வைத்துப் பணம் ஏதும் செலவு செய்யாமல் தொழிலை துவங்கலாம்.

ஆன்லைன் வகுப்புகள்

டியூஷன் போன்றே உங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பம் குறித்து இணையதளம் மூலமாக வகுப்புகள் எடுக்க முடியும் என்றால் பகுதி நேரமாகவும் தொழில் செய்து உங்களால் வருமானத்தினை ஈட்டமுடியும்.

சமுக வலைத்தள உத்தியாளர்

சமுக வலைத்தளங்கள் மூலமாக ஒருவரின் வணிகத்திற்காக உங்களால் உதவ முடியும் என்றால் அதனையே ஒரு சேவையாகவும் அளித்துப் பிஸ்னஸ் துவங்க முடியும்.

நடனம் / இசைப் பள்ளி

டியூஷன் போன்றே நடனம், இசை, பாடல் வகுப்புகள் போன்றவற்றைக் கற்று தரும் தொழிலையும் சொந்தமாகக் குறைந்த முதலீட்டில் துவங்கலாம்.

ஹேண்டிமென் சர்வீஸ்

எலெக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் சேவைகளை அளிக்கும் வணிகத்தினையும் குறைந்த முதலீட்டில் துவங்க முடியும். இணையதளச் சேவைகள் மூலமாக எளிதாக அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும்.

மொழி பெயர்ப்பு சேவை

மொழிபெயர்ப்பு சேவை மூலமாகத் தனி ஒருவராக வீட்டில் இருந்தபடியே மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதுவே ஒரு தொழிலாகத் துவங்கி வேலைக்கு ஆட்கள் எடுத்துச் செய்யும் போது அல்லது பிரிலான்ஸ் மூலம் வர்த்தகம் செய்யும் போது ஒவ்வொரு மாதமும் லட்சம் கணக்கில் சம்பாதிக்கலாம்.

டியூஷன் செண்ட்டர்

டியூஷன் செண்ட்டர் துவக்குவது மிகவும் எளிது. அதுவும் பகலில் இரு இடத்தில் வேலை செய்வது மட்டும் இல்லாமல் காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டில் இருந்தபடியே பகுதி நேரமாகவும் குறைந்த விலையில் டியூஷன் செண்ட்டர் ஒன்றைத் துவங்க முடியும். அது மட்டும் இல்லாமல் அனைத்துப் பாடங்களையும் எடுக்கத் தேவையான ஆசிரியர்களைப் பகுதி நேரமாகப் பணிக்கு எடுத்தும் வேலை வாங்கலாம்.

டிராவல் ஏஜென்சி

இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலென்றால் டிராவல் ஏஜென்சி ஆகும். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், விமான டிக்கெட் புக் செய்தல் போன்ற சேவையினை வெறும் 10,000 ரூபாயில் அளிக்க முடியும். இதற்கான பிராஞ்சிஸ் சேவைகளை ஆக்ஸிஜென் போன்ற பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

Have a great day!
Read more...

English Summary

16 profitable businesses you can start in India within Rs 10,000