தங்கத்தில் முதலீடு செய்ய அரசு வழங்கும் சிறப்பான வழிகள்..!

இந்தியர்களின் சேமிப்பு வழிகளில் முதன்மையாகக் கருதப்படுவது தங்கத்தில் செய்யும் முதலீடு. தங்கம் மீதான இந்திய மக்களின் மோகம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. தங்கம் மீதான முதலீடு என்பது தங்க நகைகள் வாங்கி வீட்டில் இருப்பு வைப்பது அல்லது வங்கி லாக்கர்களில் வைப்பது என்ற வகையிலும் உள்ளது. ஆனால் இது சரியான வழிதானா? தங்கத்தில் முதலீடு செய்ய வேறு வழிகள் உள்ளனவா? வாருங்கள் பாப்போம்.

தங்க முதலீடு

பாரம்பரிய வழிகளிலான முதலீட்டால் தங்கத்தின் தேவை அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்கவே அரசு சில திட்டங்கள் வைத்துள்ளது.

ஒன்று, தங்கத்தை வாங்கி இருப்பில் வைப்பதைத் தவிர்ப்பது
இரண்டு, கையிருப்பிலுள்ள தங்கத்தை வைத்து வருமானம் வர வைப்பது,
மூன்று, தங்க நாணயத்தில் முதலீடு செய்வது.

இவற்றில் எவ்வாறு முதலீடு செய்வது என்று காண்போம்:

 

1. சவரன் தங்க சேமிப்புப் பத்திரங்கள்

ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்பட்ட தங்கத்திற்கான மதிப்புடைய சேமிப்புப் பத்திரங்கள் இவை. இதனால் தங்கத்தை இருப்பு வைப்பதன் தேவை தவிக்கப்பதுகிறது. இதனால் உங்களுக்குத் தங்கத்தின் அப்போதைய மதிப்பு உறுதி செய்யப்படுவதோடு வட்டியும் சேர்த்துக் கிடைக்கின்றது. இவற்றை வங்கிகளிலும் இந்திய பங்கு முதலீடு குழும அலுவலகங்களிலும் (Stock Holding Corporation of India Limited), தேந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களிலும், பங்கு வர்த்தக மையங்களிலும் (NSE, BSE) பெறலாம்.

2. தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் (Gold Monetisation Scheme)

இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு தங்க அடிப்படையிலான சேமிப்பு கணக்கு வைக்க முடியும் . ஒரு வழக்கமான சேமிப்பு கணக்கு போன்றே, நீங்கள் இதில் வைப்பு வட்டி சம்பாதிக்க முடியும், ஆனால் இங்கே உங்கள் சேமிப்பாகத் தங்கம் இருக்கும். தங்க நகை, நாணயங்கள் அல்லது தங்கக்கட்டிகளாக வைக்க முடியும். நீங்கள் பயன்படுத்த முடியாத அல்லது உடைந்த நகைகளையும் நீங்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தலாம் . மற்றொரு நன்மை தங்கம் பாதுகாப்பாக வங்கியில் சேமிக்கப்படுகிறது.

குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கான வைப்புகளை இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்கிறது.

 

3. தேசிய தங்க நாணயங்கள்:

தங்கத்தை நாணயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தங்க நாணய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை விற்க இந்தியாவில் வங்கிகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் முதல் தேசிய நாணயம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கத்தில் அசோக சக்கரமும், மற்றொரு பக்கத்தில் மகாத்மா காந்தியின் முகமும் இதில் உள்ளது. இவை 5 மற்றும் 10 கிராம்களில் கிடைக்கின்றன. 20 கிராமுக்குத் தங்கக்கட்டிகள் கிடைக்கின்றன.

இந்தத் தங்க நாணயங்கள் உலோகங்கள் மற்றும் மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Metals and Minerals Trading Corporation of India) மூலம் விநியோகிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இவை கிடைக்கின்றன.

 

Have a great day!
Read more...

English Summary

3 Government Gold Schemes in India - Tamil Goodreturns | தங்கத்தில் முதலீடு செய்ய அரசு வழங்கும் சிறப்பான வழிகள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்