மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் முடிவெடுக்கும் போது முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளவேண்டுமா?

பொதுவாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய கடந்த கால முதலீட்டின் செயல்திறன், முதலீட்டு மேலாளர்களின் ஆவணங்கள், சில தரநிர்ணயங்கள், கடன், பங்குகள் மற்றும் அரசு பத்திரங்கள் கலந்த முதலீட்டு தொகுப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பர்.

இந்நிலையில் மியூச்சுவல் பண்ட்-ஐ தேர்வு செய்யும் போது கண்டிப்பாக முதலீட்டின் அளவு மற்றும் இதுவரை அதில் செய்த முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டுமா என்பதை இங்கே காணலாம்.

முதலீட்டின் அளவு அல்லது மேலாண்மையை கருத்தில் கொண்டு சொத்துக்களை மதிப்பிடுதல்

கூட்டுத்தொகை என்பது மியூச்சுவல் பண்ட் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து திட்டம் சார்ந்து சேகரித்த முதலீடு அல்லது முதலீடுகளின் மொத்த சந்தைமதிப்பு அல்லது மியூச்சுவல் பண்டின் மொத்த சொத்துமதிப்பு.

கடந்த கால செயல்பாடு

பொதுவாக மியூச்சுவல் பண்ட் ஆலோசகர்கள் கடந்த காலத்தில் நன்கு செயல்பட்டு அதிக வளர்ச்சியடைந்த பெரிய அளவிலான முதலீட்டை தேர்ந்தெடுக்க முதலீட்டாளர்களை ஊக்குவிப்பார்கள். மேலும் குறைந்த கூட்டுத்தொகை கொண்ட சிறிய திட்டங்களை காட்டிலும் பெரிய முதலீடுகள் குறைந்த கட்டணங்களை வசூலிப்பதால் பணத்தை சேமிக்கலாம்.

மேலும், முதலீட்டின் அளவு தரும் நன்மைகள் பங்கு, கடன் போன்ற பல்வேறு மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்து மாறுபடும்.

 

பங்குகளுடன் கூடிய மியூச்சுவல் பண்ட்

இவ்வகை திட்டத்தில், முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளாமல் நிலையான அதிக ஆபத்துடன் கூடிய லாபத்தை பல்வேறு சந்தை சுழற்சிகளில் பெறலாம். எனவே, முதலீட்டாளர் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை தேர்வு செய்யும் போது வெறுமனே முதலீட்டை அளவை வைத்து முடிவெடுக்க கூடாது. பெரிய அளவிலான முதலீடுகள் அதன் கடந்த காலம் மற்றும் பிரபலத்தை பற்றி சொன்னாலும் நல்ல எதிர்கால செயல்திறனுக்கு உத்திரவாதம் தராது.

கனரா ரெபேக்கோ போர்ஸ் போன்ற சிறிய முதலீட்டு திட்டங்கள் ரூ. 164 கோடி சொத்து மதிப்பில் 5 ஆண்டுகளில் 20.75% லாபம் தரும். அதே வேளையில் மிகப்பெரிய முதலீடுகள் சராசரியாக 16.3% ஆக தான் இருந்தது.

 

 

இனிமேல் இப்படித்தான்

இனிவரும் காலங்களில் லாபத்தின் மீதான முதலீட்டு அளவின் தாக்கம் பயனற்றது என சொல்லிவிட முடியாது. ஏனெனில் லாபம் பரந்ததாக இல்லாத போது அதிக கூட்டுத்தொகைகளை முதலீட்டு மேலாளர் ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினம் மற்றும் அவை சில பங்குகளுக்கானதாக மட்டுமே இருக்கும். மேலும், அதிக செயல்திறனை அடைவதிலும் சிக்கல் இருப்பதாக வலியுறுத்துகின்றனர்.

அதிக அளவிலான முதலீடு வருவதும் போவதுமாக இருந்தால் இடை மற்றும் சிறிய பங்குகள் மிகவும் ஆபத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் குறைந்த முதலீட்டை கொண்டவைகள் அவ்வளவு கடினமல்ல.

 

Have a great day!
Read more...

English Summary

Should Fund Size Matter In Your Mutual Fund Investment Decision? - Tamil Goodreturns | மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் முடிவெடுக்கும் போது முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளவேண்டுமா? - தமிழ் குட்ரிட்டன்ஸ்