ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் ஜி.எஸ்.டி! விரிவான அலசல்..

இந்தியாவில் இருந்த பல அடுக்கு வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் சொத்துக்கள் வாங்கும் போது முதலில் ஜி.எஸ்.டி வரி விகிதங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் இந்த வரி உங்களின் நிதிநிலைமையின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

சொந்த வீடு

வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முதலீடு மற்றும் மிகவும் விசேசமானதும் கூட. ஆனால் அந்தச் சொத்தின் மதிப்பை தவிர ஏராளமான செலவுகள் இருக்கும் நிலையில், அந்தச் சொத்தை வாங்க திட்டமிடும் போது அவற்றையெல்லாம் மறந்துவிடுவோம். அதில் முக்கியமானது ஜி.எஸ்.டி வரி. ரியல் எஸ்டேட்டில் ஜி.எஸ்.டியை தவிர்ப்பது எப்படி என இங்கே காணலாம்.

ரியல்எஸ்டேட்டில் ஜி.எஸ்.டி ஏற்படுத்தும் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ளும் பொருட்டு, சொத்துக்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வோம்.

1)கட்டுமான நிலையில் உள்ள சொத்து
2)தயார் நிலையில் உள்ள சொத்து
3)வாடகைக்கு விடும் சொத்து

 

கட்டுமான நிலையில் உள்ள சொத்துக்கான ஜி.எஸ்.டி

ஒரு சொத்து கட்டுமான நிலையில் இருந்து, கட்டுமான நிலையில் உள்ளது என வகைப்படுத்தி உள்ளூர் அதிகாரிகளால் 'கட்டிட பயன்பாட்டுச் சான்றிதழ்' (BUC -Building Usage Certificate) வழங்கப்படாமல் இருக்கும் சொத்துக்கள் இந்த வகையில் இடம்பெறும்.

கட்டுமானத்தில் உள்ள சொத்துக்களுக்குச் சரக்கு மற்றும் சேவைகள் தேவைப்படும் என்பதால், இதற்கு ஜி.எஸ்.டி வரி பொருந்தும். இந்த வகைக் கட்டிடங்களுக்கான ஜி.எஸ்.டி அனைத்து வரிப் பலன்களையும் உள்ளடக்கி 12% ஆகும். நீங்கள் ரியல்எஸ்டேட் சொத்தை வாங்க திட்டமிட்டால், அந்தப் பி.யூ.சி சான்றிதழ் பெற்ற சொத்துக்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இதன் மூலம் 12% கூடுதல் ஜி.எஸ்.டி வரியை குறைக்கலாம்.

 

தயார் நிலையில் உள்ள சொத்துக்கான ஜி.எஸ்.டி

தயார் நிலையில் உள்ள சொத்துகளுக்கும், மறுவிற்பனை செய்யும் சொத்துகளுக்கும் ஜி.எஸ்.டி வரி பொருந்தாது. எனவே நீங்கள் சொத்துக்களை வாங்க விரும்பினால் தயார் நிலையில் உள்ள சொத்துக்கள் அல்லது மறுவிற்பனை செய்யும் சொத்துக்களைத் தேர்வு செய்யுங்கள்.

ஆனால், அந்தச் சொத்துக்கள் கட்டுமான நிலையில் உள்ளதா அல்லது தயார்நிலையில் உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் போலப் பத்திர பதிவுக்கு 1% கட்டணமும் மற்றும் முத்திரைத்தாள் கட்டணமாக 4.9% வசூலிக்கப்படும்.

முத்திரைத்தாள் கட்டணம் தவிர்க்க முடியாதது என்றாலும், 1% பதிவு கட்டணத்தைப் பெண்களின் பெயரில் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் தவிர்க்கலாம்.

 

வாடகைக்கு விடும் சொத்துக்கான ஜி.எஸ்.டி

வாடகைக்கு விடும் சொத்துக்களுக்கு, வாடகை பணத்தில் 18% ஜி.எஸ்.டி வரியாக விதிக்கப்படும். ஆனாலும், இது வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். குடியிருப்புகளுக்குப் பொருந்தாது.

அனைத்து மாநிலங்களிலும் உச்சவரம்பு ரூ20 லட்சமாக உள்ளது. அதாவது உரிமையாளரால் ஒரு நிதியாண்டில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் சரக்குகளின் மொத்த மதிப்பு ரூ20 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், உரிமையாளர் ஜி.எஸ்.டி பதிவு எண்ணைப் பெற வேண்டிய அவசியம் இல்லை மற்றும் வாடகை பணத்துடன் ஜி.எஸ்.டி வசூலிப்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும். அப்படி ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் பட்சத்தில், உரிமையாளர் கட்டாயமாகத் துல்லியமான ஜி.எஸ்.டி இரசீதை தயாரிக்க வேண்டும்.

 

Have a great day!
Read more...

English Summary

GST on Real Estate - Tamil Goodreturns | ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் ஜி.எஸ்.டி! விரிவான அலசல்.. - தமிழ் குட்ரிட்டன்ஸ்