ஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி?

ஹெச்டிஎஃப்சி வங்கி மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடியாக கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதைப் பெறுவதற்கு நீங்கள் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளராக இருக்க வேண்டும் மேலும் சிஏஎம்எஸ் லாகின் வசதியை பெற்றிருக்க வேண்டும்.

தற்சமயம் சிஏஎம்எஸ் சேவையை வழங்கும் 10 மியூட்சுவல் கம்பெனிகளுக்கு அவர்கள் இந்த வசதியை வழங்குகிறார்கள். தமிழ் குட் ரிட்டர்ன்ஸ் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக கடன் பெறுவதற்கான சில வழிமுறைகளை உங்களுக்கு விளக்குகிறது.

# ஹெச்டிஎஃப்சி வங்கியின் முகப்புப் பக்கத்திற்கு சென்று, பத்திரங்களுக்கு எதிரான கடன் என்கிற இணைப்பை க்ளிக் செய்யுங்கள். https://www.hdfcbank.com/

# இதற்கு அடுத்த செயல்முறை இன்டர்நெட் பேங்கிங் வசதிக்கு லாக் இன் செய்து அதன் பிறகு உங்கள் சிஏஎம்எஸ் கணக்கிற்குள் நுழைவதாகும்.

# சிஏஎம்எஸ் போர்ட்டலில் நீங்கள் லோன் வாங்க விரும்பும் நிதித் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

# அதன் பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி யை பெறுவீர்கள்.

# ஒருமுறை ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தால் அதன் பிறகு நீங்கள் பெறக்கூடிய லோன் தொகையை நீங்கள் பார்க்கலாம்.

# அதன் பிறகு ஓடி தேவைப்படுடம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிளை விவரங்களை உள்ளிடுங்கள்.

# அதன் பிறகு வங்கி லோன் விண்ணப்பத்தை உறுதி செய்ய மற்றுமொரு ஓடிபி யை அனுப்பும். ஒருமுறை இந்த சரிபார்ப்பு நிறைவடைந்து விட்டால், நீங்கள் லோன் பெறும் செயல்முறை நிறைவடைந்த நிலையை பற்றிய தகவலைப் பெறுவீர்கள். மேலும் லோன் தொகை உங்கள் சேமிப்புக் கணக்கில் பார்க்கக் கிடைக்கும்.

கீழ்காணும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வீடியோவை சரிபார்ப்பதன் மூலம் நீங்கள் முழுமையான செயல்முறையை பார்வையிடலாம்.

Have a great day!
Read more...

English Summary

How to avail loan against Mutual Funds instantly in HDFC Bank? - Tamil Goodreturns | ஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடிக் கடன் பெறுவது எப்படி? - தமிழ் குட்ரிட்டன்ஸ்