1 இலட்சம் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற 4 நிதி நிறுவனங்கள் !

1 இலட்சம் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை முதலீடு செய்வதற்குப் பல் வேறுவகையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், உங்களுடைய முதலீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வேறு வகையில் முதலீடு செய்தால் உங்களுடைய முதலீடு பாதுகாப்பாக இருக்கும்.

மஹிந்திரா பைனான்ஸ் நிலை வைப்பு

ஆன்லைன் மூலமாக மஹிந்திரா பைனான்ஸ் நிலை வைப்பில் முதலீடு செய்தால் 8.75 சதவிகித வட்டி கிடைக்கும். "AAA" தரமதிப்பீட்டைப் பெற்ற வேறு எந்த நிதி நிறுவனமும் இந்த அளவுக்கு உயர்வாக வட்டி வழங்குவதில்லை. இதில் ஆன்லைன் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும். 33 அல்லது 40 மாதங்கள் வரை முதலீடு செய்ய வேண்டும். 33 மாதங்கள் முதலீடு செய்தால் 9.46 சதவிகிதம் அளவுக்கு வருடத்துக்கு வட்டிவிகிதம் உயரும். 36 மாதங்கள் என்றால் 9.71 சதவிகிதம் அளவுக்கு வட்டி விகிதம் அமையும். 30 மாத முதலீடு என்றால், 8.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். வங்கிகள் வழங்குவதை விட 1 சதவிகிதம் அளவுக்கு வட்டி அதிகமாகக் கிடைக்கும்.

பஜாஜ் பைனான்ஸ் நிலை வைப்புகள்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவன நிலை வைப்புகளும் "AAA" தரத்தோடு மிகுந்த பாதுகாப்பான முதலீட்டுக்கு உத்திரவாதம் தருகிறன்றன. இந்நிறுவனம் 8.40 சதவிகிதம் வட்டி தருகிறது. மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவிகித வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஓராண்டுக்கான நிலை வைப்புகளுக்கு 7.85 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இந்த ஓராண்டு சிறப்புத் திட்டத்திற்குக் குறைந்தபட்ச முதலீடு 1 இலட்சம். பிற திட்டங்களுக்குக் குறைந்தபட்ச முதலீடு 25,000 ரூபாயாகும்.

ஆர்பிஎல் வங்கி

மிக வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளுள் RBL வங்கியும் ஒன்று. இவ்வங்கி 12 முதல் 24 மாதங்கள் வரையிலான நிலை வைப்புகளுக்கு 7.75 சதவிகித வட்டி வழங்குகிறது. இரண்டு வருடக் கணக்கின்படி வட்டி விகிதம் 7.98 சதவிகிதம் ஆகிறது. இரண்டு வருடத்திற்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்.

கேடிஎப்சி

கேரளா அரசின் நிதி நிறுவனமான KTFC நிலை வைப்புகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு 8.25 சதவிகித வட்டி வழங்குகின்றது. 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் இது 8 சதவிகிதமாகக் குறைகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.25 சதவிகித கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இது மிகுந்த பாதுகாப்பு தரும் முதலீடாக அமையும்.

நிறைவாக

வட்டி விகிதம் உயரும் என்ற நோக்கில் நீண்ட காலத்துக்குப் பணத்தை முதலீடு செய்வது அவ்வளவு நல்லதல்ல. உங்களுடைய ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்துக்கும் குறைவாக இருந்தால் 15G அல்லது 15H ஆகிய படிவங்களில் உங்களுக்கு எது பொருந்துமோ அவற்றில் வருமானவரித் தகவலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

4 Best Places To Invest Rs 1 to Rs 2 Lakhs Safely