உங்கள் குழந்தையின் 17 வயதுக்குள் 42 லட்சம் ரூபாய் சேமிக்க முடியுமா? எப்படி?

குழந்தைகளின் எதிர்காலம்தான் பெற்றோர்களின் கனவாக இருக்க முடியும். முதன் முறையாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது நிலவும் ஆனந்தப் பெருக்கை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சின்னஞ்சிறிய விரல்கள், முதல் முத்தங்கள், முதல் புன்னகை, முதல் வார்த்தை என இப்படியான தருணங்கள் விலை மதிப்பற்றவை. அந்தக் குழந்தை வளரும் போது தேவைகளும் அதிகரிக்கிறது. கல்விக்கட்டணம், உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பிறந்த வளர்ந்து 17 வயது ஆகும்போது அதன் பெயரில் 42 லட்சம் ரூபாயைத் திரட்டும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குழந்தை வளர்வதைப் போலவே, அதற்கான முதலீட்டுத் தொகையும் வளர்ந்து வளர்ந்து வருகிறது.

பணமே இலக்கு

இந்தத் தொகை உங்கள் குடும்பத்தின் கண்களைத் திறப்பதாக மட்டும் கருதக்கூடாது. ஒட்டுமொத்த குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் இது பூர்த்திச் செய்யவல்லதாக உள்ளது. குடும்பத்தின் அல்லது தனிநபரின் இலக்கைகளை அடைய பணம் மட்டும்தான் அவசியமான ஒன்றாக இருக்க முடியும். தம்பதிகள் ஒற்றுமையாக இருக்கும்போதே இதற்கான திட்டமிடலில் இறங்கிவிடுங்கள். ஒருவேளை போராடித்துப் போய் மனமுறிவு ஏற்பட்டு விட்டால் மிகப்பெரிய திண்டாட்டம் உருவாகிவிடும். இப்போது குழந்தைகள் வளரும்போது எதிர்கொள்ளும் பல்வேறு செலவினச் சவால்களைப் பற்றிப் பார்ப்போம்

கர்ப்பம் மற்றும் பிரசவகாலச் செலவுகள்

பெண் கர்ப்பமடைவதில் இருந்து பிரசவம் முடியும் வரையிலான காலக் கட்டங்களில் ஏற்படும் செலவுகளை விட, குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் செலவுகளுக்கு ஒரு குடும்பம் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான ஆடைகள் உட்பட டயாப்பர், பொம்மைகள், ஊட்டச்சத்து உள்ளிட்ட பொருட்களை வாங்க அதிகமாகச் செலவாகும். இதனைக் குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டும் ஏற்க முடியாது. குழந்தைகளுக்கு, கல்வி, திருமணத்தை இலக்காக வைத்து சேமிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் எஸ்.ஐ.பி எனப்படும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் மூலம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இந்த முதலீடுகள் உங்கள் குழந்தைகளின் கல்விக்கட்டணம் மற்றும் திருமணம் போன்ற செலவுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்

பள்ளிப் படிப்புச் செலவினங்கள்

பள்ளிப் படிப்புக்கான செலவினங்கள் தற்போது பலமடங்கு உயர்ந்து விட்டது. பெருநகரங்களில் ஆண்டுக்கட்டணம் 1 லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுதவிரக் கலை வகுப்புகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, சுற்றுலா, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றுக்கான செலவுகளும் உள்ளன.

ஓய்வூதியத்தில் முதலீடு

குழந்தைகளின் இலக்குகளைக் குறிக்கோளாக வைத்து சேமிப்புகளையும், முதலீடுகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகச் சேமிக்கும் பழக்கத்தினைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வு பெறும் வயதில் குழந்தைகளுக்கான முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். பண வீக்க காரணிகளை முன் உணர்ந்து ஓய்வூதியத்தைக் குழந்தைகளுக்கான முதலீடாகச் செலுத்த வேண்டும்.

உயர்கல்வி மற்றும் திருமணச் செலவினம்

உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கான செலவுகள் இப்போதைய காலகட்டத்தில் அபரிமிதமாக அதிகரித்து விட்டது. 50 லட்சமும் அதற்கு மேல் ஆகக்கூடிய செலவுகள் நமக்கு மலைப்பாகத் தோன்றலாம். ஆதலால் சமரசமில்லாத ஒரு திட்டத்தில் முதலீட்டைத் தொடங்க வேண்டும்.எதிர்காலத்தில் ஒரு திட்டமிட்ட தொகையை ஈட்ட அந்த முதலீடு உதவும்.

நிலையான முதலீட்டுத் திட்டம்

குழந்தைகளின் இலக்குகளை அடைய ஒரு நிலையான முதலீட்டுத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து பாருங்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை இது பிரகாசமாக்குவதாக இருக்கும்.

Read more about: savings investment child age

Have a great day!
Read more...

English Summary

Can you save 42 lakh rupees by your child's 17 years old? How?