குறுகிய காலக் கடன் வாங்க 5 சிறந்த மொபைல் செயலிகள்!

தினமும் நிதி நிறுவனங்களைத் தேடி அலைந்து அங்குக் கால்கடுக்க நின்று, பல்வேறு முறை போன் அழைப்புகளை மேற்கொண்டு கடன் வாங்கிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இன்று மொபைல் செயலி வாயிலாகவே மிகச்சுலபமாக அனைத்தையும் செய்து முடித்துவிடலாம். ஆனால் இந்த நவீன உலகில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் நூற்றுக்கணக்கான செயலிகள் ப்ளே ஸ்டாரில் நிரம்பிக்கிடக்கின்றன. எந்தச் செயலி சிறந்தது? எதை நாம் தேர்ந்தெடுப்பது என்று குழப்பத்தில் உள்ளீர்களா?

இதோ உங்களின் குறுகிய காலக் கடன் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் 5 சிறந்த மொபைல் செயலிகள்..

ஸ்மார்ட்காயின் (SmartCoin) : விண்ணப்பித்த அதே நாளில் கடன்

'ஸ்மார்ட்காயின்' செயலியை பயன்படுத்திக் கடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த உடனேயே, அதே நாளில் உங்களால் தனிநபர் கடன் பெற இயலும். உங்களின் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், செல்பி மற்றும் கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. அவ்வளவு தான்.

எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி, ஸ்மார்ட்காயின் செயலி ரூ1000 முதல் ரூ50,000 வரை கடன் பெற அனுமதிக்கிறது.

 

கேபிடல்பர்ஸ்ட்(CapitalFirst) : அனைத்து கடன் தேவைகளுக்கும் ஒரே தீர்வு

உங்களின் கடன் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் ஒரே இடத்தில் இறக்கி வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்குச் சரியான இடம் ' கேபிடல்பர்ஸ்ட்' செயலி.

தனிநபர் கடன், தொழில் கடன் அல்லது வாகனக்கடன் என எதுவாக இருந்தாலும், இச்செயலி உங்களை உடனடியாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் மற்றும் உங்களின் கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்களையும் வழங்கும்.

மேலும் உங்களுக்கான கடன் சலுகைகளை அறிவிப்புகள் வாயிலாக இச்செயலி தொடர்ந்து தெரியப்படுத்திக்கொண்டே இருக்கும்.

 

கிரீடி(Credy): 1 நிமிடத்தில் உடனடியாகக் கடன்

அடுத்தச் சிறந்த குறுகிய காலக் கடன் வழங்கும் செயலியான 'கிரீடி'ல், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது.

இச்செயலியில் ரூ10,000 முதல் ரூ1,00,000 என்ற வரம்பில் கடன் வழங்கும் நிலையில், மாதம் 1 முதல் 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது.

இந்தச் செயலியில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், மாதச் சம்பளமாகக் குறைந்தபட்சம் ரூ15,000 சம்பாதிக்கும், சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் தனிநபர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

 

கேஷ்இ(CASHe) : 15 நாட்களுக்கு உடனடி கடன்

ஆம் உண்மையில் தான். இந்தக் கேஷ்இ உடனடி கடன் செயலி , 15 நாட்கள் என்ற மிகக் குறுகிய காலத்திற்குக் கடன் வழங்குகிறது.

இங்கு எந்தவொரு காகித ஆவணங்கள் மற்றும் மனித ஊடாடல் இன்றி, சம்பளம் பெறும் இளம் தனிநபர்களுக்கு ரூ10,000 முதல் ரூ2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது.

இதற்காக உங்களின் ஃபான் அட்டை எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் மற்றும் செல்பி போன்ற 5 ஆவணங்களை மட்டுமே போதுமானது.

 

கேஷியா(Cashiya): உடனடி கடன் மற்றும் நிதி மேலாண்மை

நம் சிறந்த குறுகிய காலக் கடன் வழங்கும் செயலிகளின் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது 'கேஷியா'

குறுகிய காலத் தனிநபர் கடனை உடனடியாக வழங்குவது மட்டுமில்லாமல், இச்செயலி உங்களின் பணபரிமாற்ற குறுஞ்செய்திகளை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யும் பயன்படுகிறது.

மேலும் கேஷியா செயலியை பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை வாங்க முடியும். மேலும் உங்களின் முதலீடுகள் மற்றும் பணிஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றைத் திட்டமிடமுடியும்.

ஆபத்துக் காலத்தில் உடனடி கடன் பெற்று வருத்தத்தை விரட்டுங்கள்!

 

Have a great day!
Read more...

English Summary

How To Get Short Term Loan In Min Using This Apps