ரயில் பயணங்களில் டிக்கெட் கட்டணத்தில் 25 முதல் 100 சதவீதம் வரை சலுகை பெறுவது எப்படி?

இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் தற்போது 53 வெவ்வேறு பிரிவுகளில் டிக்கெட்களுக்கு 25 முதல் 100 சதவீதம் வரை சலுகையினை வழங்கி வருகிறது என்று indianrail.gov.in இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆப்லைன் ரயில் டிக்கெட் சேவையில் மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மூத்த குடிமக்கள், அரசு விருது பெற்றவர்கள், இராணுவ விதவைகள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதே நேரம் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செயும் போது மூத்த குடிமக்களுக்கு மட்டும் கட்டண சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே யாருக்கெல்லாம் எவ்வளவு வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம்.

வேலை இல்லா இளைஞர்களுக்கு ரயில் டிக்கெட் கட்டண சலுகை

வேலை இல்லா இளைஞர்கள் மத்திய அல்லது மாநில அரசு வேலைக்கான நேர்காணலுக்குச் சென்று வர ஸ்ளீப்பர் கிளாஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகையினைப் பெறலாம். இரண்டாம் வகுப்புப் பயணங்களுக்கு 100 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது.

எலும்பு முறிவு / முதுகெலும்பு உடைந்த நபர்கள்

உதவிக்கு யாரும் இல்லாமல் பயணம் செய்ய முடியாத எலும்பு முறிவு / முதுகெலும்பு உடைந்த நபர்கள், கண் தெரியாதவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் கீளாஸ், முதல் வகுப்பு, 3ஏசி, மற்றும் ஏஸி சார் கார் டிக்கெட்களுக்கு 75 சதவீதம் வரை சலுகைகளை வழங்குகிறது. இதுவே ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் 1ஏசி, 2ஏசி போன்றவற்றில் பயணம் செய்ய 50 சதவீதமும், 3ஏசி மற்றும் ஏசி சேர்கார் போன்றவற்றில் பயணம் செய்ய 25 சதவீதமும் கட்டண சலுகை அளிக்கிறது.

காது கேளாத மற்றும் பேச முடியாதவர்கள்

தனியாகப் பயணம் செய்யும் அல்லது உதவிக்கு ஒருவருடன் பயணம் செய்யும் காது கேளாத மற்றும் பேச முடியாதவர்களுக்கு 2-ம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் முதல் வகுப்பு ரயில் டிக்கெட் கட்டணங்களுக்கு 50 சதவீதம் வரை சலுகைகளை அளிக்கிறது.

கேன்சர் நோயாளிகள்

தனியாக அல்லது துணை ஒருவருடன் ரயில் பயணம்செய்யும் புற்றுநோய் பாதிப்படைந்தவர்கள் இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஏசி சேர்கார் வகுப்புகளில் பயணம் செய்ய 75 சதவீத சலுகையினை அளிக்கிறது.

அதே நேரம் ஸ்லீப்பர் மற்றும் 3ஏசி பெட்டிகளில் 100 சதவீத கட்டண சலுகையினையும் ரயில்வேஸ் வழங்குகிறது. அது மட்டும் இல்லாமல் 1ஏசி மற்றும் 2ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய 50 சதவீத கட்டண சலுகையினை வழங்குகிறது.

 

பிற நோயாளிகள்

தலசீமியா நோயாளிகள் பரிசோதனைக்கு/சிகிச்சை தனியாக அல்லது துணையுடன் செல்ல, இதய நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தனியாக அல்லது துணையுடன் செல்ல இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர், முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, ஏசி சேர் கார் போன்ற பயணங்களின் போது 75 சதவீத கட்டண சலுகையும், 1ஏசி, 2ஏசிகளில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்குகிறது.

மூத்த குடிமக்கள்

60 வயது கடந்த ஆண்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையும், 58 வயது கடந்த பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் அனைத்து வகுப்புகளிலும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில்களிலும் உண்டு.

Have a great day!
Read more...

English Summary

Indian Railways Ticket Concession Rules For Patients, Senior Citizens, Unemployed Youths