5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்!

அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையின் மீது தான் கவனம் செலுத்துகின்றனர். பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்வதற்குப் பங்குகள் மற்றும் சந்தையை முழுவதுமாகப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வர்த்தக ஏற்ற இறக்கங்களை மிக அதிகமாகச் சகித்துக்கொள்ளும் தன்மையும் வேண்டும்.மற்றொரு புறம், நீண்டகால அடிப்படையில் பணம் சம்பாதிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த முதலீட்டு முறையாகத் திகழ்கிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் பங்கு முதலீட்டில் உள்ள ஆபத்துகளை எதிர்க்கும் சக்தி இல்லாதவையாக இருந்தாலும், நிதி மேலாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டின் தொழின்முறை அறிவை பயன்படுத்துவதால், நேரடி பங்கு முதலீட்டை காட்டிலும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது.

பங்கு பரஸ்பர நிதி முதலீடுகளும் பங்குச்சந்தையைப் போலவே ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வருமானத்தையே தரும் என்பதால், சில நேரங்களில் அதிகமாகவும் சில நேரங்களில் மிகக்குறைவாகவோ இருக்கும். இந்தப் பரஸ்பர நிதி திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவையாக இருக்கும் போது, சராசரியாக 12 முதல் 15% வருமானத்தைத் தரக்கூடியவை. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை 5 முதல் 6 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முடியும் என்பதையே இது குறிக்கிறது. எனவே ஒருவர் எப்படிச் சரியான பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய முடியும்? கார்பஸ், உள்ளடக்கிய சொத்துகள், மூலதனம், விகிதங்கள் போன்ற காரணிகளைக் கண்டிப்பாகக் கருத்தில் கொண்டு சரியான முடிவு எடுக்க வேண்டும்.

5ஆண்டுகளில் உங்களின் பணத்தை இரட்டிப்பாக்க வாய்ப்புள்ள 10 பரஸ்பர நிதி திட்டங்களை இங்கே காணலாம்.

1)ஆதித்யா பிர்லா எஸ்.எல் - டேக்ஸ் ரீளிப் 96 பண்ட்

மூலதனத்தில் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள பங்குகளுடன் இணைந்த சேமிப்பு திட்டமான இதில், 80% பங்குகளிலும் 20% கடன் மற்றும் பணப் பத்திரங்களாகவும் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20ஆண்டுகள் பழமையான நிதி முதலீட்டு திட்டமான இது சீரான சென்று கொண்டுள்ளது. 5 ஆண்டுகளில் 17.87% லாபத்தைக் கொடுத்துள்ளது.

#1 ஆண்டு லாபம் -15.85%
#3 ஆண்டு லாபம் -18.77%
#5 ஆண்டு லாபம் - 17.87%

 

2) ஆக்சிஸ் -லாங் டேர்ம் ஈக்விட்டி

மூலதனத்தை நோக்கமாகக் கொண்ட மற்றொரு பங்குகளுடன் இணைந்த சேமிப்பு திட்டமான இது, வெவ்வேறு பங்கு சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகிறது. நிதி மற்றும் வங்கி, வாகன உற்பத்தி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் போன்றவை அவற்றில் முக்கியமான துறைகள்.

#1 ஆண்டு லாபம் -12.77%
#3 ஆண்டு லாபம் -22.01%
#5 ஆண்டு லாபம் - 21.98%

 

3)எல்&டி இந்தியா வேல்யூ பண்ட்

பரவலாக வகைப்படுத்தப்பட்ட தொகுப்பான இந்தப் பரஸ்பரநிதி பங்கு பத்திரங்களில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக வெளிநாட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. நிதி மற்றும் வங்கி, பெட்ரோலியம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் சிமெண்ட் /கட்டுமானம் போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.

#1 ஆண்டு லாபம் -28.29%
#3 ஆண்டு லாபம் -23.03%
#5 ஆண்டு லாபம் - 22.44%

 

 

4)எஸ்.பி.ஐ - ப்ளு சிப் பண்ட் ரெக்

இது பெரிய மூலதன பங்குகளின் வகைப்படுத்தப்பட்ட தொகுப்பு ஆகும்.இந்த வகை நிதி நிலையான செயல்பட்டு வருகிறது மற்றும் இதில் மூலதனத்தின் அளவு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.

#1 ஆண்டு லாபம் -21.82%
#3 ஆண்டு லாபம் -17.74%
#5 ஆண்டு லாபம் - 18.19%

 

5) மிரேஅசட் எமர்ஜிங் ப்ளூசிப் பண்ட்

பெரிய மற்றும் நடுத்தர மூலதன திட்டமான இது முதலீடு செய்து நல்ல லாபம் பெறுவதில் சிறப்பான தடம்பதித்து வருகிறது. இந்த நிதி அதிக ஆல்பா மற்றும் குறைந்த பீட்டாவுடன் இருக்கிறது.


#1 ஆண்டு லாபம் -33.41%
#3 ஆண்டு லாபம் -28.24%
#5 ஆண்டு லாபம் - 27.65%

 

6)கோடாக் - ஸ்டேன்டேர்டு மல்டிகேப் பண்ட்

அதிக, நடுத்தர மற்றும் குறைந்த மூலதனம் என முதலீடுகள் பலமூலதன திட்டமான இது, பொதுவாக நிதி, வங்கி, பெட்ரோலியம்,சிமெண்ட் ,சாப்ட்வேர், ஆட்டோ எனச் சில துறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

#1 ஆண்டு லாபம் -16.63%
#3 ஆண்டு லாபம் -16.08%
#5 ஆண்டு லாபம் - 21.56%

 

7)ஐசிஐசிஐ ப்ரூ - ஈக்விடி& டெப்ட் பண்ட்

கலப்பு திட்டமான இதில் பங்கு கடன் முதலீடுகள் மாறக்கொண்டே இருக்கும். இந்தச் சமநிலை நிதி நீண்ட கால மூலதனம் மற்றும் நிலையான வருமானம் தரும் பத்திரங்கள் மற்றும் பங்குகளின் கலவை மூலம் வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்தது.


#1 ஆண்டு லாபம் -19.44%
#3 ஆண்டு லாபம் -17.44%
#5 ஆண்டு லாபம் - 17.24%

 

8) டிஎஸ்பி பிஆர் ஈக்விடி ஆபர்சூனிட்டிஸ் ப்ண்ட்

இந்தியாவில் மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் பங்குகளில் இந்தப் பெரிய மற்றும் நடுத்தர மூலதன நிதி முதலீடு செய்யப்படுகிறது. இதில் வங்கி,நிதி, சாப்ட்வேர், ஸ்டீல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.

#1 ஆண்டு லாபம் -21.55%
#3 ஆண்டு லாபம் -16.88%
#5 ஆண்டு லாபம் - 16.57%

 

9) மோதிலால் ஒஸ்வால் - மல்டிகேப் 35 ரெக்

ஒப்பீட்டளவில் மிகவும் புதியதாக இருந்தாலும்,இந்த வகை நிதிகளில் இது தான் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தப் பலமூலதன நிதி அதிகபட்சமாக 35 பங்குகள், பங்குகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் சந்தை மூலதனங்களில் முதலீடு செய்கிறது. நிதி, வங்கி, ஆட்டோ ,பார்மா, பெட்ரோலியம், போக்குவரத்து, எரிவாயு போன்ற துறைகளில் அதிக முதலீடு செய்யப்படுகிறது.

#1 ஆண்டு லாபம் -23.51%
#3 ஆண்டு லாபம் -22.03%

 

10) ஆக்சிஸ் - போகஸ்டு 25

பங்கு திட்டமான இது தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களின் பங்கு தொகுப்புகளில் முதலீடு செய்கிறது. பொதுவாக நிதி, வங்கி, பெட்ரோலியம்,சிமெண்ட் ,சாப்ட்வேர், டெக்ஸ்டைல் எனச் சில துறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

#1 ஆண்டு லாபம் -16.82%
#3 ஆண்டு லாபம் -16.84%
#5 ஆண்டு லாபம் - 18.60%

 

Have a great day!
Read more...

English Summary

Mutual Fund Investment: 10 MFs that can double your wealth in 5 years