வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்து 5000 ரூபாய் சேமிக்கலாம்.. எப்படி?

2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரித் தக்கலினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற குழப்பத்தில் தான் உள்ளீர்களா? நமது வருமான வரி செலுத்தும் வரம்பில் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது என்பது நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

ஏன் வருமான வரி செலுத்த வேண்டும்?

அது மட்டும் இல்லாமல் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் சான்றிதழ்களை நம்மிடம் கேட்கின்றன. வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் நமது வருவாய் எல்லாம் நியாயமான முறையில் வரி செலுத்துவதன் கீழ் கிடைத்தது என்பதற்கான ஒரு சான்றாகவும் உள்ளது. நமது வரிப் பணம் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படும்.

வருமான வரி உச்ச வரம்பிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும்.

 

நட்டம்

வருவாய் இல்லாமல் நட்டம் அடைந்து இருந்தாலும் வருமான வரி தாக்கல் செய்தல் நன்மையினை அளிக்கும். அதன் மூலம் அடுத்த வருட வருவாயில் லாபம் பெறும் போது நட்டத்தினை அதனுடன் ஈடுகட்டி வரியினைக் குறைக்கவும் அனுமதிகள் அளிக்கப்படுகிறது.

காலக்கெடு

2017-2018 நிதி ஆண்டு அல்லது 2018-2019 மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரியினைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 2018 ஆகஸ்ட் 31-ம் தேதியாகும்.

முன்பு வருமான வரியினைத் தாக்கல் செய்ய 2018 ஜூலை 31 கடைசித் தேதி என்று இருந்த நிலையில் மத்திய நேரடி ஆணையம் அதனை 2018 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

அபராதம்

வருமான வரியினைக் காலதாமதமாகத் தாக்கல் செய்தால் நடப்பு ஆண்டு முதல் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். தாமதமாக வரி செலுத்துவது அனுமதிக்கப்பட்டாலும் வருமான வரி சட்டப் பிரிவு 234F கீழ் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Have a great day!
Read more...

English Summary

File Income Tax Returns on Right Time And Save Rs 5000