வாகன காப்பீட்டை ஆன்லைனில் க்ளைம் செய்வது எப்படி?

உங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்த பின்னர், இரண்டு விசயங்களை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். முதலில் வாகனத்தைச் சரிசெய்ய வேண்டும். அடுத்து காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டுப் பணத்தைக் கோர வேண்டும். பொதுவாகக் காகித படிவங்களைப் பயன்படுத்தும் வழிமுறையானது சிக்கலானது மற்றும் நீண்டநெடியது. அதேநேரம் சில பிரபல காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் இணையதளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக இணையவழி காப்பீட்டுப்பனத்தைக் கோரும் செயல்முறையை வைத்துள்ளன. இதில் முழுச் செயல்பாடும் குறைந்த வரியில், சில மணி நேரத்தில் முடிந்துவிடும்.

இணையவழி செயல்முறை

இணையவழியில் காப்பீட்டுப் பணத்தைக் கோரும் வழிமுறையானது தனக்கே உரித்தான நிறை குறைகளுடன் இருந்தாலும் நேரம் குறைவாக இருப்பவர்கள், காப்பீட்டுப் பணம் ரூ50,000ஐ விடக் குறைவாக இருந்து, சிக்கல் ஏதும் இல்லாமல் இருக்கும் போது இம்முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இங்கு வாடிக்கையாளர்கள் காப்பீட்டுப் பணம் கோரப்போவதை காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவித்து, புகைப்படங்களை எடுத்து, நல்ல வெளிச்சத்தில் சம்பந்தப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்து, அவற்றைக் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகாரத்திற்குப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வாகன பதிவு சான்றிதழின் பிரதி மற்றும் ஓட்டுநர் உரிமம் பிரதியும் வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அளித்த தரவுகளை ஆராய்ந்த பின்னர் மதிப்பீடு செய்பவர் அதில் திருப்பியடைந்தால், பாலிசிதாரரின் வங்கிக்கணக்கில் காப்பீட்டுபணம் உடனடியாக வரவு வைக்கப்படும்.

வாகனத்தை முழுமையாகச் சரிசெய்த பின்னர், சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மீண்டும் காப்பீட்டுநிறுவனத்தின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

வாகன காப்பீட்டை திரும்பக் கோரும் இணைவழி வசதியின் பலன்கள்

காப்பீட்டுப் பணத்தைத் திரும்பக் கோருவதைக் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்கும் வகையில் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது. அதே நேரம் பொதுவான வழிமுறையில் காகித படிவங்களை மற்றும் ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும். சாதாரண வழிமுறையில் மதிப்பீடு செய்பவர் வந்து பரிசோதிக்கும் வரை வாகனத்தைச் சரிசெய்ய முடியாது. ஆனால் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது வாகனத்தைச் சுய பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இணைவழியில் உள்ள வரம்புகள்

வாகனத்தின் வெளிப்புற பகுதிகளான சைடுபேனல், கதவுகள் , பம்பர், கண்ணாடி ஆகியவற்றின் சேதங்கள் போன்ற எளிமையான பிரச்சனைகளுக்கு மட்டுமே காப்பீட்டுப் பணத்தைத் திரும்ப
கோரும் விண்ணப்பத்தை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

என்ஜின், கன்டென்சர் போன்ற வாகனத்தின் உள்பகுதியில் ஏற்பட்ட சேதங்களைக் காணொளி வாயிலாக அறிந்துகொள்ள முடியாது என்பதால், மனிதர்கள் பரிசோதிக்க வேண்டியிருக்கும்.

மேலும், பல்வேறு பொதுவான காப்பீட்டு நிறுவனங்கள் இணையவழியில் வாகன காப்பீட்டை திரும்பக் கோரும் போது, வெவ்வேறு விதமான காப்பீட்டுத் தொகை வரம்புகளை அனுமதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐசிஐசிஐ லம்பார்டு மற்றும் ப்யூட்சர் ஜெனரலி ஹனர்-ல் ரூ50,000 வரையிலும், பஜாஜ் அலையன்ஸ்-ல் ரூ20,000 மட்டுமே அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த தேதி, இடம், நேரம், காப்பீட்டு நிறுவனத்திடம் பதிவு செய்த மொபைல் எண் உள்ளிட்ட வாகனம் மற்றும் விபத்துக் குறித்த தகவல்களைச் சரியாகப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓட்டுநர் குறித்த தகவல்களான( உரிமையாளர் தவிர்த்து வேறு ஓட்டுநராக இருந்தால்) பெயர், உறவுமுறை, ஓட்டுநர் உரிம எண், காலாவதியாகும் தேதி, வழங்கிய அலுவலர், அவரின் மொபைல் எண் போன்றவற்றைத் தரவேண்டும்.

 

இணையவழி சேவை வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள்

ஐசிஐசிஐ லம்பார்டு, ப்யூட்சர் ஜெனரலி, பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இன்ஸ்டாஸ்பெக்ட்,ஐ-விஸ் மற்றும் எம்.ஓ.டி.எஸ்(InstaSpect, i-ViSS and MOTS) சேவைகள் வாயிலாக இணையவழியில் காப்பீட்டுப் பணத்தைக் கோரும் வசதியை வழங்குகின்றன.

Have a great day!
Read more...

English Summary

How To Make Online Claims For Damaged Vehicle Against Motor Insurance?