பங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் ?

தேவையற்ற ரிஸ்க்கை குறைப்பதற்காகவும், அதிகப்பட்ச இலாபத்தை அடைவதற்காகவும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை ஒரே இடத்தில் குவிக்காமல் பலவகைகளில் பிரித்து முதலீடு செய்கின்றனர். பல்வேறு வகையான முதலீடுகள் வெவ்வேறு வகையில் இலாபத்தைத் தருகின்றன.

பங்குகள், தங்கம், நிலை வைப்பு, மியூச்சுவல் ஃபன்ட் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்கின்ற பொழுது அம் முதலீடு ஒரு வாரம், ஒரு வருடம், மூன்று வருடம், 5 வருடம் ஆகிய கால இடைவெளியில் எவ்வகையான இலாபத்தைத் தருகின்றன என்பதை இங்குக் காண்போம்.

கணக்கீட்டுக் குறிப்புகள் : தங்கத்தின் மதிப்பீடு மும்பை சந்தை நிலவரப்படி கணக்கிடப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் விகிதத்துக்கு ஏற்ப நிலை வைப்புகள் மதிப்பிடப்படுகின்றன. இணையம் வழியான மதிப்பு ஆய்வின்படி மியூச்சுவல் ஃபன்ட்டுகள் மதிப்பிடப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளின் அடிப்படையில் பங்குகள் மதிப்பிடப்படுகின்றன.

பங்குகள் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கான இலாபம் மதிப்பு உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, மேற்கண்ட ஏதாவது ஒன்றின்மீது 1000 ரூபாய் முதலீடு செய்து, அது 1500 ரூபாயாக வளர்ந்தால் முதலீட்டின் மீதான இலாபம் 50% எனக் கணக்கிடப்படுகிறது. நிலை வைப்புகளின் மீதான இலாபம் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நிலை வைப்பின் மீதான முதலீடு மூன்றாண்டுகளில் 21 சதவிகிதம் வளர்ச்சி பெற்றதென்றால் ஒரு ஆண்டுக்கு அதன் வளர்ச்சி 7% எனக் கணக்கிடப்படும். மற்றவற்றின் மீதான முதலீடுகள் அவற்றின் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும். ஆனால் நிலை வைப்புகளின் மீதான இலாபம் எதிர் காலப் போக்கைக் கருத்தில் கொண்டு மதிப்பிடப்படும்.

ஒரு வார மதிப்பீடு

பங்குகள் : -0.05 சதவிகிதம்
மியூச்சுவல் ஃபன்ட்களின் மீதான சராசரி இலாபம் : 0.13 சதவிகிதம்
நிலைவைப்புகள் : 4 முதல் 5.75 சதவிகிதம் (சிறு நிதியியல் வங்கிகள், SBI உட்படப் பல வணிக வங்கிகள் 7 நாட்கள் வரையிலான நிலை வைப்பு வசதியை வழங்குகின்றன.)
தங்கம் : -0.17 சதவிகிதம் ( மும்மை தங்கச் சந்தை மதிப்பின்படி)

ஒரு ஆண்டுவரையிலான முதலீடுகள்

பங்குகள் : 19.91 சதவிகிதம்
மியூச்சுவல் ஃபன்ட்களின் மீதான சராசரி இலாபம் : 6.84 சதவிகிதம்
நிலைவைப்புகள் : 6.70 முதல் 8.50 சதவிகிதம் (SBI 6.70 சதவிகிதம் / சூர்யோதய் வங்கி 8.50 சதவிகிதம் )
தங்கம் : 1.57 சதவிகிதம் ( மும்மை தங்கச் சந்தை மதிப்பின்படி)

மூன்றாண்டுகள் வரையிலான முதலீடுகள்

பங்குகள் : 34.29 சதவிகிதம்
மியூச்சுவல் ஃபன்ட்களின் மீதான சராசரி இலாபம் : 7.11 சதவிகிதம்
நிலைவைப்புகள் : 6.80 முதல் (SBI) 8.75 சதவிகிதம் வரை (சூர்யோதய் வங்கி )
தங்கம் : 10.80 சதவிகிதம் ( மும்மை தங்கச் சந்தை மதிப்பின்படி)

5 ஆண்டுகள் வரையிலான முதலீடுகள் :

பங்குகள் : 102.8 சதவிகிதம்
மியூச்சுவல் ஃபன்ட்களின் மீதான சராசரி இலாபம் : 7.94 சதவிகிதம்
நிலைவைப்புகள் : 6.85 முதல் (SBI) 7.75 சதவிகிதம் வரை (சூர்யோதய் வங்கி )
தங்கம் : -6.94 சதவிகிதம் ( மும்மை தங்கச் சந்தை மதிப்பின்படி)

Have a great day!
Read more...

English Summary

How Much Would You Have Gained if You Invested in Stocks/Gold/FD/MF?