ஷாருக்கானிடம் இருந்து எங்கு எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்க!

பெரிய அளவில் பொருளாதார ரீதியாக வெற்றிபெற்ற பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். விளையாட்டு, குழந்தைகளுக்கான விளையாட்டு(கிட்ஜானியா) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.

வாழ்வில் சிறப்பான நிகழ்வுகள் அவற்றை இதயப்பூர்வமாகச் செய்தால் மட்டுமே நடக்கும். மூளை எப்போதும் மாறிக்கொண்டே இருந்தாலும், இதயம் எப்போதும் துரோகம் செய்யாது. நிதி முதலீடுகளைச் செய்யும் போது கூட மனம் எப்போதும் உண்மையே சொல்லும். குறிப்பாகப் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுக்கு. இதற்கு எதிராக வாதாடுபவர்களுக்கு, அவர் பல வருடங்களாகக் கோடீசுவரராக உள்ளார் என்பதை நினைவுபடுத்துங்கள்.

மூளையைப் பயன்படுத்திச் செய்யும் முதலீடு

மூளையைப் பயன்படுத்திச் செய்யும் முதலீடுகள் குறுகியகாலத்தில் மட்டுமே பலன்களை வழங்குகின்றன என நம்புகிறார் ஷாருக்கான். ஆனால் அதுவே மனதார செய்யும் போது, பலரின் வாழ்க்கைக்கு உதவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், " மூளையைப் பயன்படுத்திச் செய்யும் எந்தவொரு முதலீடும் குறுகிய காலம் மட்டுமே நல்ல பலன்களைத் தருகின்றன. அதே நேரம், உங்களின் பணி மக்களின் வாழ்க்கைக்கு உதவி அதிகச் சவுகரியமானதாக மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உண்மையாக அக்கறையுடன் மனதில் இருந்து செய்யவேண்டும்"எனத் தெரிவித்தார்.

வல்லுனர்கள்

பொதுவாக மூளையைப் பயன்படுத்தி முதலீடு செய்யுமாறு வல்லுநர்கள் மக்களுக்கு அறிவுறுத்துவர். அதுபோன்ற முதலீட்டுக்கு ஒருவர் எதிர்பார்க்கும் லாப நஷ்டங்கள் ஆபத்துகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் போது, எதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். அங்குத் தான் மனதை பயன்படுத்த வேண்டும்.

தொழில் மேலாண்மை

இவரின் யோசனையை மேலும் விளக்க வேண்டும் என்றால், தொழில் மேலாண்மையின் அடிப்படை என்னவென்றால், ஏற்பாடுடன் இருப்பது என்கிறார் ஷாருக்கான். "ஆனால் நான் முழுவதுமாக ஏற்பாடற்று இருந்தேன் மற்றும் வெற்றியும் பெற்றேன். எனவே தொழிலிலும் மனம் ஏதோ ஒரு வகையில் வேலை செய்கிறது என்பதில் உண்மை உள்ளது".

குழந்தைகள் விளையாட்டு

குழந்தைகள் விளையாடும் விளையாட்டு அவருக்கும் விளையாட பிடிக்கும் என்பதால், கிட்ஜானியா-வில் முதலீடு செய்ததாக அவர் ஒருமுறை கூறினார். அதைப்பற்றி இந்தப் பேட்டியில் கேட்டபோது, " என்னுடைய முதலீடு 3 'சி' (C) க்களில் உள்ளன. குழந்தைகள், சினிமா மற்றும் கிரிக்கெட். உண்மையில் விளையாட்டு என்பது, வெறும் விளையாட்டு அல்ல, அதையும் தாண்டியது." எனத் தெரிவித்தார். சாருக்கான் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக்-ல் கோல்கட்டா க்னைட் ரைடர்ஸ் எனும் அணியை வெற்றிகரமாக வைத்துள்ளார்.

போர்ப்ஸ்

போர்ப்ஸ் 2017 பிரபலங்கள் 100 வருமானத்தின் படி, சாருக்கான் 38மில்லியன் டாலர் சம்பாதித்திருந்தார். "இவர் வெளிப்படையாகச் சம்பளத்தைப் பெறுகிறார் மற்றும் தனது முயற்சிகளுக்காகப் பின்னர் ஒரு பங்கு பெறுகிறார். மேலும் பெரும்பாலான அமெரிக்கர்கள் கேள்விப்பட்டிருக்காத பல்வேறு பிராண்டுகளின் விளம்பரங்களில் கூட நடித்துச் சம்பாதிக்கிறார்" எனக் குறிப்பிடுகிறது போர்ப்ஸ் இதழ்.

2018ல் உலகில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இந்தாண்டு ஷாருக்கான் அப்பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் இதற்கு முன்னர் இப்பட்டியலில் எப்போதும் ஷாருக் இருப்பார்.

 

Have a great day!
Read more...

English Summary

Learn From Shah Rukh Khan: How and where to invest your money