பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான கோரிக்கைகளை விரைவாக தீர்க்கும் வகையில் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பிஎஃப் சந்தாதாரர்கள் இதனை தெரிந்து கொள்வது நல்லது.

Advertisement

மத்திய அரசு அண்மையில் புதிய பிஎஃப் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் பல்வேறு புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பிஎஃப் பணம் எடுப்பது, பென்ஷன் மற்றும் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளை EPFO அமைப்பு 20 நாட்களுக்குள் முடித்து தர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிஎஃப் கணக்கு வைத்திருக்கின்றனர். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை மருத்துவ தேவை, திருமணம், வீடு கட்டுவது போன்ற தேவைகளுக்கு பெறலாம். இந்த விண்ணப்பம் செய்தால் உடனே பணம் கிடைக்காது. வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டும். திடீரென விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பம் செய்து பல வாரங்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தில் பிஎஃப் செட்டில்மெண்ட் கிளைம்களுக்கு விரைவில் தீர்வு காண விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

ஒரு உறுப்பினர் முறையான அனைத்து ஆவணங்களுடனும் கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தால் அதனை அடுத்த 20 நாட்களுக்குள் EPFO தீர்த்து வைக்க வேண்டும். ஒருவேளை முறையான காரணமின்றி 20 நாட்களுக்கு மேல் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 12% ஆண்டு வட்டி அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்து வசூலிக்கப்படும் என புதிய விதிகள் கூறுகின்றன.

Advertisement
28% சரிந்த தங்கம் விலை..!! 30 ஆண்டு கால வரலாற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

பிஎஃப் கணக்கு மாற்றம், பணத்தை எடுத்தல் போன்ற சேவைகளை எளிதாக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் அரசு பிஎஃப் சேவைகளை வேகப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதில் தான் இந்த புதிய அம்சம் இடம்பெற்றுள்ளது.

எனவே பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, செட்டில்மெண்ட் அல்லது பென்ஷன் போன்ற கிளைம்களுக்கு விண்ணப்பம் செய்து 20 நாட்களை கடந்தும் உங்கள் கோரிக்கை நிலுவையில் இருந்தால், நீங்கள் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. EPFO-வின் அதிகாரப்பூர்வ குறை தீர்ப்பு போர்ட்டலில் (EPFiGMS) உங்கள் UAN மற்றும் கோரிக்கை எண்ணை பயன்படுத்தி புகார் பதிவு செய்யலாம்.

Advertisement
TCS வேலையை நிராகரித்து அரிசி வியாபாரத்தில் குதித்த இளைஞர்: சாதித்தாரா? சறுக்கினாரா?

இல்லையெனில் 1800 118 005 என்ற கட்டணமில்லா எண் அல்லது 14470 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். 60 நாட்களுக்கு மேலாகியும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், RTI மூலம் உங்கள் கோரிக்கை ஏன் தாமதமாகிறது என்பதற்கான காரணத்தையும், அதற்கு பொறுப்பான அதிகாரி யார் என்பதையும் நீங்கள் கேட்கலாம்.

எப்போதுமே உங்கள் பிஎஃப் கணக்கில் கேஒய்சி , ஆதார் இணைப்பு, வங்கி விவரங்கள் உள்ளிட்டவை அப்டேட்டாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பல சமயம் இதனாலேயே உங்கள் கிளைம் நிராகரிப்படலாம். விரைவில் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் பிஎஃப் பணத்தை ஏடிஎம் அல்லது யுபிஐ மூலமே எடுத்து கொள்ளலாம்.