லண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!

லண்டன் மேயர் சாதிக் கான்-இன் IE20 திட்டத்தின் கீழ் லண்டனில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் சுமார் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

3வது வருடமாக India Emerging 20 திட்டத்தை நடத்தி வரும் லண்டன் மேயர் அலுவலகம், இந்தியாவில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்கள் சர்வதேச நிறுவனமாக உயர வேண்டும் என்னும் மிகப்பெரிய நோக்கத்தை மையமாகக் கொண்டு இத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து இத்திட்டத்தில் பங்குபெற சுமார் 300 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்த நிலையில், மும்பை, பெங்களுரூ, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து வந்த 20 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு லண்டனில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் பல தள்ளுபடிகள், நிதியுதவி, விளம்பரம் செய்ய உக்திகள் ஆகியவற்றை இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் பெறும்.

லண்டனில் வர்த்தகத்தைத் துவங்க பல இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய ஆர்வமுடன் இருக்கின்றனர் எனச் சாதிக் கான் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஹக் இன்னோவேஷன்ஸ், ஃப்ருடாடாஸ் ஸ்கூள் ஆஃப் மியூசிக், அப்னோமிக் சிஸ்டம்ஸ், பயோசீன், பிளாக்பெப்பர் டெக்னாலஜிஸ், ச்சாய் பாயின்ட், ஹோப்பி, இன்டெல்லோ லேப்ஸ், இட்சியா டிஜிட்டல் மீடியா சர்வீசஸ், சென்ஸ்போர்த், சார்க் இன்னோவேஷன், டைன்அவுட், போர்க் மீடியா, லூசிடெஸ் டெக், மார்ப்.ஏஐ, வீடியோடெடிக்ஸ் டெக்னாலஜிஸ், விக்டோ டெக்னாலஜிஸ், ஜியா ஸ்மார்ட் சிட்டி, இக்சுலா சர்வீசஸ், சாப்ரான்ஸ்டேஸ் தேர்வாகியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

20 Indian startups selected for business expansion to London