பிரஷ்ஷர்கள் வேலை செய்ய விரும்பும் 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்!

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஊழியர்கள் நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்வது என்பது மிகப் பெரிய சிக்கலாக நிறுவனஞ்களுக்கு உள்ளது. எனவே பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இலவச சப்பாடு, எப்போது வேண்டும் என்றாலும் வேலைக்கு வரலாம், குறிப்பிட்ட நேரம் என்று இல்லை, வீட்டில் இருந்து வேலை செய்யலாம், அலுவலகத்தில் வேலை நேரம் போக விளையாட எனப் பல வசதிகளை வழங்கி வருகின்றன.

எனவே படிப்பை முடித்த உடன் பிரஷ்ஷர்கள் வேலை செய்ய விரும்பும் 5 நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அர்பன்கிளாப்
அர்பன்கிளாப்

அர்பன்கிளாப் ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை அளிக்கிறது. இதனால் அவர்களின் ஊழியர்களுக்கு மேலும் ஈடுபாட்டுடன் வேலையைச் செய்ய ஆர்வம் கூடுவது மட்டும் இல்லாமல் நிறுவனத்தில் முடிவுகளை எடுக்கும் உரிமையும் கிடைப்பதால் அவர்களின் சொந்த நிறுவனம் போன்று செயல்படுகிறார்கள் என்கிறார்கள்.

ஹப்ஸ்பாட்
ஹப்ஸ்பாட்

ஹப்ஸ்பாட் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் எந்த ஒரு குறைபாட்டையும் வைப்பதில்லை. நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிந்து விட்டால் ஆண்டுக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறையினையும் அளிக்கிறது. மேலும் கிடன்ல் புத்தங்களை இலவசமாகப் படிக்கும் சந்தாவையும் அளிக்கிறது.

சேல்பாய்.காம்
சேல்பாய்.காம்

இ-காமர்ஸ் நிறுவனமான Salebhai.com அதிகளவில் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பணிக்கு எடுக்கிறது. இங்கு வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு அவர்கள் கணவர்கள் பணிபுரியும் நகரங்களில் இருந்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி அளிக்கிறது.

கோவொர்க்
கோவொர்க்

கோவொர்க் நிறுவனத்தில் ஊழியர்கள் தங்களது வீட்டு விலங்குகளான நாய், பூனை போன்றவற்றைக் கொண்டு வரவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஊழியர்களுக்கு அரபிக்கா காபி, மூலிகை தண்ணீர், சைவ சாப்பாடு, ஜிம், ஸ்பா, விளையாட்டு மைதானம், வாழும் கலை, டிவி, ஊழியர்களை வீடு வாசல் வரை சென்று விடுதல் போன்ற பல நன்மைகளைப் பெற முடியும்.

அப்லோட்ஃபுடி
அப்லோட்ஃபுடி

அப்லோட்ஃபுடி பயணத் திட்டமிடுபவர்களுடன் இணைந்து ஊழியர்களைக் குடும்பத்துடன் சுற்றுலா அனுப்புதல், தங்கள் விருப்பமானவர்களுடன் நேரத்தினைச் செலவிட அனுமதி அளித்தல், தங்களது குழந்தைகளுடன் அலுவலகத்தில் நேரத்தினைச் செலவிடுதல், வேலை மற்றும் வாழ்க்கை இரண்டுக்கு நேரத்தினைச் சிறப்பாக ஒதுக்க உதவுதல் போன்ற நன்மைகளை அளிக்கிறது.

 

Have a great day!
Read more...

English Summary

5 startups fresher's aspire to work with