ஸ்ட்ராட்அப் உலகை ஆட்சி செய்யும் பிளிப்கார்ட்,மிந்திரா ஊழியர்கள்..!

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ள நிலையில் தற்போது 2014-ம் ஆண்டுப் பிளிப்கார்ட் வாங்கிய மிந்த்ரா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள் 53 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் துவங்கியுள்ளனர் என்றும் இவற்றில் பல முக்கிய நிறுவனங்களில் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இருவரும் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

எனவே பிளிப்கார்ட்/மிந்த்ரா முன்னாள் ஊழியர்கள் துவங்கிய 53 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இங்குப் பார்க்கலாம்.

ஸ்விகி

இந்தியாவின் மிகப் பெரிய உணவு டெலிவரி செய்யும் செயலி நிறுவனமான ஸ்விகியின் இணை நிறுவனரான ராகுல் ஜெய்மினி மிந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.

உதான்

பிஸ்னஸ் 2 பிஸ்னஸ் இ-காமர்ஸ் நிறுவனமான உதானின் இணை நிறுவனர் சுஜித் குமார் பிள்ப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.

ட்ரீபோ ஹோட்டல்ஸ்

ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் நிறுவனமான ட்ரீபோ ஹோட்டல்ஸ்-ன் இணை நிறுவனர் சித்தார்த் குப்தா மிந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.

க்யூர்ஃபிட்

உங்களுடைய உணவு டையட்டை இவர்களுக்குத் தெரிவித்தால் போது அதற்கு ஏற்ற உணவை இவர்கள் டெலிவரி செய்வார்கள். அதுவும் காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு, மாலை நொறுக்கு தீனி, இரவு உணவு என அனைத்தும் கிடைக்கும். இந்த நிறுவனத்தைத் துவங்கியவை மிந்த்ரா நிறுவனரான அங்கித் நாகோரி ஆவார். 2014-ம் ஆண்டு மிந்த்ராவை பிள்ப்கார்ட் வாங்கிய பிறகு, பிளிப்கார்ட்டின் தலைமை பிராண்ட் அதிகாரியாக இருந்தார்.

ஹவுஸ் ஜாய்

பூச்சு மருந்து அடித்தல், தண்ணீர் குழாய் சரி செய்தல், மர சாமணங்கள் சரி செய்தல், துணை துவைத்தல் போன்ற வீட்டிற்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் அளிக்கும் நிறுவனம் ஹவுஸ் ஜாய் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரன் சாட்டர்ஜி பிள்ப்கார்ட்டின் முன்னாள் ஊழியர் ஆவார்.

ஜெஃபோ

பயன்படுத்தப்பட்ட ஃபர்னிச்சர்களை வாங்க விற்க ஜெஃபோ என்று கூறலாம். இதன் இணை நிறுவனர் அர்ஜித் குப்தா பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.

ரெண்ட்மோஜோ

பைக் மற்றும் வீட்டிற்குத் தேவையான சோஃபா, கட்டில் போன்றவற்றை வாடகைக்கு அளிக்கும் நிறுவனம் ரெண்ட்மோஜோ ஆகும். ரெண்ட்மோஜோ நிறுவனர் கீதான்ஷ் பமானியா பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.

ஜம்போடெயில்

மொத்த விலை உணவு மற்றும் மளிகை சாமான விற்பனை இ-காமர்ஸ் நிறுவனமே ஜம்போடெயில் ஆகும். ஜம்போடெயில் நிறுவனர் கார்திக் வேங்கடேசன் முன்னாள் பிள்ப்கார்ட் ஊழியர் ஆவார்.

லோட் ஷேர்

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான லோட் ஷேர் நிறுவனர் ரகுராம் டல்லூரி முன்னாள் மிந்த்ரா ஊழியர் ஆவார்.

Have a great day!
Read more...

English Summary

53 Start up Companies Started by Flipkart & Myntra former employees