ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கதவை திறந்த மும்பை பங்குச்சந்தை..!

நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அதன் முதலீட்டிற்கும் முக்கியப் பங்காற்றுபவை பங்குச்சந்தைகள். பங்குச்சந்தை மூலம் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்று அதன் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு வர்த்தக மேம்படுத்தல்களைச் செய்துவருகின்றன நிறுவனங்கள்.

அதன் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட வேண்டுமெனில் ஏராளமான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழைய நிறையத் தடைக்கற்கள் உள்ளன.

ஜூலை 9 முதல்

ஜூலை 9 முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட இருக்கின்றன. மும்பை பங்குச்சந்தையில் இணைய விரும்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ1 கோடி பங்கு மூலதனத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் பங்குச்சந்தையில் இணைய விண்ணப்பிக்கும் போது அந்நிறுவனம் துவங்கி குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

ஸ்டார்ட்அப் தளம்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மும்பை பங்குச்சந்தை, தனது "சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் "பிரிவில், "ஸ்டார்ட்அப் தளத்தை" இணைக்கப்பட உள்ளது. இந்தத் தளம் ஜூலை9 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது என்கிறார் அலுவலர் ஒருவர்.

புதிய தலைமுறை நிறுவனங்கள்

ஜூலை 9ம் தேதி செயல்பாட்டிற்கு வரும் இந்தப் புதிய தளத்தின் நோக்கம் என்னவெனில், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி அறிவியல், முப்பரிமாண அச்சிடல், வான்வெளி தொழில்நுட்பம், இணைய வர்த்தம் போன்ற பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் புதிய தலைமுறை நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு ஸ்டார்ட்அப் துறையை ஊக்குவிப்பதாகும்.

மேலும் நானோ தொழில்நுட்பம், ஹைடெக் பாதுகாப்புத் துறை, டிரான்கள் போன்ற துறைகளின் நிறுவனங்களும் இதில் பட்டியலிட அனுமதிக்கப்படுகிறது.

 

மொத்த மதிப்பு

இது பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், பங்குச்சந்தையில் இணைய விரும்பும் நிறுவனங்கள் கண்டிப்பாக நேர்மறையான மொத்த மதிப்பைக் கொண்டிருக்கவேண்டும். மேலும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதலீடு மற்றும் குறைந்தபட்சம் ரூ1கோடி மொத்த முதலீடு இருக்க வேண்டும் என்பதால் க்யூ.ஐ.பி அல்லது ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மோசடி

மேலும் ஒரு நிபந்தனையாக, மும்பை பங்குச்சந்தையில் இணைய விரும்பும் நிறுவனங்கள் மோசடி பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடாது மற்றும் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தினால் அந்நிறுவனத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கக்கூடாது.

Have a great day!
Read more...

English Summary

BSE To List Startups From July 9