டெஸ்லா பப்ளிக் நிறுவனமாகவே இருக்கும்.. எலன் மஸ்க் அறிவிப்பு!

டெஸ்லா நிறுவனரான எலன் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பு டெஸ்லாவை பிரைவேட் லிமிட்டட் நிறுவனமாக மாற்ற இருப்பதாகத் தெரிவித்து இருந்த நிலையில் அந்த முடிவினை திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இனி வருங்காலத்திலும் டெஸ்லா நிறுவனம் பிரைவேட் லிமிட்டட் நிறுவனமாக மாற்றப்படாமல் பப்ளிக் லிமிட்ட நிறுவனமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் என்றால் என்ன?

தனியார் நிறுவனம் என்றால் ஒரு நிறுவனத்தின் பங்குகள் எல்லாம் குறிப்பிட சிலரின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும்.

பப்ளிக் லிமிட்டட் நிறுவனம் என்றால் என்ன?

பப்ளிக் லிமிட்டட் நிறுவனம் என்றால் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டுப் பலரிடம் பங்குகள் இருக்கும். நிறுவனத்தின் லாபத்தினைப் பொருத்து இவர்களுக்குப் பணம் பகிர்ந்தளிக்கப்படும்.

கவனம்

முதலீட்டாளர்களுக்கு இடையிலான கூட்டத்தில் பங்கேற்ற பிறகு எலன் மஸ்கு தனது முடிவில் இருந்து மாறியுள்ளார். மேலும் தனியார் நிறுவனமாக மாற்றுவது வணிகத்தின் மீதான கவனத்தினைச் சிதறடிக்கும் என்று உணர்ந்ததாகவும் இனி மாடல் 3 உற்பத்தி மற்றும் லாபம் மீது மட்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் கார்

டெஸ்லா போட்டியாக எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த AK-47 உற்பத்தியாளர்..!

Have a great day!
Read more...

English Summary

Elon Musk Backed Form Making Tesla As Private Limited