இரண்டு படுக்கை அரை கொண்டு வீடு முதல் 8.3 லட்சம் சதுர அடி கட்டிடம் வரை பிளிப்கார்ட் வளர்ந்தது எப்படி?

அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்குவது உறுதியாகியுள்ளது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு முன்னால் ஐஐடி டெல்லி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பிளிப்கார்ட் இந்தியாவில் அமேசானுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது.

பிளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் தன் வசம் உள்ள மொத்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேற இருப்பதாகக் கூறும் நிலையில் இரண்டு படுக்கை அரைக் கொண்டு வீடு முதல் 8.3 லட்சம் சதுர அடி கட்டிடம் வரை எப்படி இந்த வளர்ச்சியினை இந்த இ-காமர்ஸ் நிறுவனம் எட்டியது என்று இங்குப் பார்க்கலாம்.

ஆன்லைன் புக் ஸ்டோர்

2007-ம் ஆண்டுச் சச்சின் மன்சால் மற்றும் பின்னி பன்சால் இருவரால் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள இரண்டு படுக்கை அரைக் கொண்ட ஒரு வீட்டில் ஆன்லைன் புத்தக ஸ்டோராகத் துவங்கப்பட்டது தான் பிளிப்கார்ட். முதலில் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனமும் புத்தங்களை மட்டுமே விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் அலுவலகம்

2008-ம் ஆண்டு முதன் முறையாகப் பெங்களூருவில் ஒரு அலுவலகமும், பின்னர் டெல்லி மற்றும் மும்பையில் 2009-ம் ஆண்டு அலுவலகங்களையும் திறந்து பிள்ப்கார்ட் வேகமாக வளர துவங்கியது. தற்போது பிளிப்கார்ட் பெங்களூருவில் 8.3 லட்சம் சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமான அலுவலகத்துடன் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டுச் சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் துவங்கிய பின் அசூர வளர்ச்சியினைப் பிளிப்கார்ட் பெற்றது என்று கூறலாம்.

தலைமை மாற்றம்

2007-ம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகரி பதவியினை வகித்து வந்த சச்சின் பன்சாலிடம் இருந்து சிஇஓ பதவி முதன் முறையாக 2016-ம் ஆண்டுப் பின்னி பன்சால் வசம் சென்றது. பின்னர் 2017-ம் ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் நிறுவனமாக இருந்த டைகர் குலோபளில் நிர்வாக இயக்குனர் கல்யான் கிருஷ்ணமூர்த்தி வசம் தலைமை செயல் அதிகாரி பதவி சென்றது. பின்னி பன்சால் மிந்த்ரா, ஜபாங், போன்பே மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான இ-கார்ட் போன்றவற்றுக்குத் தலைமை செயல் அதிகாரி பொருப்பு வகித்து வந்தார்.

பிளிப்கார்ட் வாங்கிய நிறுவனங்கள்

ஆன்லைன் ஆடை இணையதளமான மிந்த்ராவை 2014-ம் ஆண்டு 300 மில்லியன் டாலர் கொடுத்துப் பிளிப்கார்ட் வாங்கியது, அதனை அடுத்து 2016-ம் ஆண்டு 70 மில்லியன் டாலர் கொடுத்து ஜபாங் நிறுவனத்தினைக் கைப்பற்றியது.

2016-ம் ஆண்டு வாலெட் நிறுவனமான போன்பே-ஐ வாங்கியது. அதன் பிறகு 2017-ம் ஆண்டு இ-பே நிறுவனத்தினை 500 மில்லியன் டாலர்கள் கொடுத்துப் பிளிப்கார்ட் வாங்கித் தனது வணிகத்தினைப் பல மடங்கு வளர்த்தது.

 

முதலீட்டாளர்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஜப்பானின் சாப்ட் வங்கிக்கு 23 சதவீத பங்குகள் உள்ளன. இதற்கு அடுத்து தென் ஆப்ரிக்கா ஊடக மற்றும் இணையதள நிறுவனமான நாஸ்பர்ஸ் வசம் 13 சதவீத பங்குகள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் நியூ யார்க்கின் டைகர் குலோபள், அமெரிக்கத் தனியார் ஈக்விட்டி நிறுவனமான அக்செல் பார்ட்னர்ஸ், சீஆவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ், ஈ-பே & மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் பிளிப்கார்ட்டில் முதலீட்டாளர்களாக உள்ளன.

நிதி புள்ளிவிவரங்கள்

நிதியியல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2017-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குப் பிளிப்கார்ட் குழுமத்தின் மொத்த இழப்பு 8,770 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதுவே முந்தைய ஆண்டில் 5,216 கோடி லாபம் பெற்று இருந்தனர். 2017 நிதி ஆண்டில் ரூ.19,855 கோடியாக வருவாய் அதிகரித்து முதலீட்டாளர்களிடம் நற்பெயரை பெற்றது.

Have a great day!
Read more...

English Summary

From 2BHK to 8.3 lakh sq feet: The Flipkart story so far