டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..!

குர்காமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான க்ரோபர்ஸ் டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி மற்றும் பழம் வகைகளை டெலிவரி செய்வதை நிறுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தக் காய்கறி மற்றும் பழம் டெலிவரி சேவையினை இடைக்காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனைத் தற்போது முழுமையாக நிறுத்துவதாக க்ரோபர்ஸ் தெரிவித்துள்ளது.

ஏன்?

2016-ம் ஆண்டு முதல் காய்கறி மற்றும் பழம் வகைகளை க்ரோபர்ஸ் டெலிவரி செய்யத் துவங்கி இருந்தாலும் அது பெரியதாகப் பயன் அளிக்கவில்லை. 90 நிமிட டெலிவரி சேவை இருப்பினும் அது பிரெஷான உணவு பொருட்கள், மீன் போன்றவற்றை டெலிவரி செய்யத் தேவையான ஒன்றாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் காய்கறி வாங்க பெரியதாக வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.

ஒரு நாள் டெலிவரி

க்ரோபர்ஸின் நெக்ஸ்ட் டே லிவரிக்கு இருக்கும் ஆதரவு பிரெஷான பொருட்களை டெலிவரி செய்யக் கிடைக்கவில்லை. எனவே காய்கறி மற்றும் பழ வகைகளை எக்ஸ்பிரஸ் சேவையில் டெலிவை செய்யவதை க்ரோப்பர்ஸ் நிறுத்தியதாகத் தலைமை செயல் அதிகாரியான அல்பிந்தர் திண்ட்ஸா தெரிவித்துள்ளார்.

பிராண்டட் பொருட்கள்

க்ரோபர்ஸ் நிறுவனம் தங்களது லேபிள் மட்டும் இல்லாமல் பிற எப்எம்சிஜி லேபிள் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. க்ரோபர்ஸின் வருவாயில் 35 சதவீதம் குளிர்பானங்கள், சோப்பு வகைகள், நூடல்ஸ், பாஸ்தா போன்ற தனியார் லேபிள் பொருட்களில் இருந்து தான் கிடைக்கிறது.

டெலிவரி மற்றும் வருவாய்

தற்போது க்ரோபர்ஸ் தினமும் 35,000 ஆர்டர்களைத் தினமும் டெலிவரி செய்து வரும் நிலையில் ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டி வருகிறது.

போட்டி நிறுவனங்கள்

க்ரோபர்ஸ் நிறுவனம் பிரெஷான பொருட்களை டெலிவரி செய்வதில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் பிக்பாஸ்கட், சாட்வாகார்ட், மில்க்பேஸ்கட், டெய்லி நிஞ்சா போன்ற மிக்ரோ டெலிவரி நிறுவனங்கள் இந்தச் சேவையினைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.

பிக்பாஸ்கட் நிறுவனத்தில் மீண்டும் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அன்மையில் பிக்பேகட் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மார்னிங் கார்ட் மற்றும் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெயின்கேன் நிறுவனங்களை வங்கியுள்ளது.

 

Have a great day!
Read more...

English Summary

Grofers shuts down vegetables, fruits delivery in Delhi, Bengaluru