சிறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுமா - 6 வாரத்தில் அமைச்சர்கள் குழு அறிக்கை..!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, நிதித்துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையிலான குழுவை அமைக்க ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

Advertisement

சட்டப்பிரச்சினையில் ஆய்வு

நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும நடுத்தர தொழில்கள் மீதான 18 சதவீத வரியை 5 ஆக குறைக்க வேண்டும் என்று மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் உள்ள சட்டப்பிரச்சினைகள் குறித்து சட்டக்குழு விவாதித்து ஆலோசனை வழங்கும் என்றும் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

Advertisement
6 வாரத்தில் அறிக்கை

செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதல், வரிக்குறைப்பு தொடர்பாக 6 வாரத்தில் அறிக்கை அளிக்கும் என கூறியுள்ளது.

ஆட்சேபனைகள்

உள்மாநிலத்துக்குள் வருடாந்திர விற்றுமுதல் 20 லட்சம் ரூபாய் இருந்தால் ஜி.எஸ்.டியில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. 1.5 கோடி வருவாயும் வரி செலுத்தும் வணிகர்களுக்கு திரும்ப் செலுத்தும் மத்திய அரசின் தொகை குறித்தும் ஆட்சேபனை எழுந்துள்ளது.

பாகுபாடு கூடாது

நாட்டில் பெரிய வணிகர்கள் செலுத்தும் வரிக்கு நிகராக, சிறிய வணிகர்களும் வரி செலுத்துவதால் பாகுபாடு இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள தெரிவித்த மணீஷ் சிசோடியா, சிறு மற்றும் குறுந்தொழில்களில் அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக கூறினார்.

கேஷ்பேக் சலுகை

ரூபே கார்டு, பீம் செயலி மூலம் பணம் செலுத்துவோருக்கு மொத்த ஜி.எஸ்.டி தொகையில் 20 விழுக்காடோ அதிகபட்சமாக 100 ரூபாயாகவோ வழங்கப்படும் என அறிவித்த பியூஸ் கோயல், அனைத்து மாநிலங்களும் தானாக முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்றார்ர.

அடுத்த கவுன்சில் கூட்டம்

அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் கோவாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

English Summary

GST Council Meeting: Ministerial Panel To Look Into Issues Facing MSME Sector
Advertisement