வீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி?

வீட்டிலிருந்தபடியே தொழிலை நடத்துவது என்பது வர்த்தக இடத்திற்காகப் பணம் செலுத்த தேவையில்லை என்பதையே குறிக்கிறது. ஆனால் நீங்கள் சட்டரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். தொழிலைத் துவங்கும் முன்பு , இங்கே குறிப்பிட்டுள்ள டிப்ஸை கவனியுங்கள்.

சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்தல்

வீட்டுத் தொழிலின் முதல் அடியை எடுத்துவைக்கும் முன்பு உங்கள் வீட்டில் தொழில் துவங்க வீட்டுவசதி ஆணையத்தின் அனுமதி உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் துவங்க விரும்பும் தொழிலின் வகையைப் பொறுத்து அதற்கு அனுமதி வழங்குவதில் மாற்றங்கள் நேரலாம். தொழிலைத் துவங்கினால் உங்கள் வீட்டிற்கு ஏராளமான நபர்கள் வந்து செல்வார்கள், இது கேட்டெட் கம்யூனிட்டி, அப்பார்ட்மென்ட்-களில் இருப்பவர்களுக்குப் பல சிக்கலை உருவாக்கும் ஆகவே இணையவழி தொழிலைத் துவங்கினால் எளிதாக அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் துவங்க விரும்பும் தொழிலின் வகையைப் பொறுத்து, நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டு முகவரியைப் பயன்படுத்துவதாக அவர்களிடம் தெரிவித்து, எதிர்காலத்தில் நிறுவனத்தை விரிவாக்க நினைத்தால் வர்த்தக இடத்திற்கு மாற்றலாம்.

 

கடையை நிர்மாணித்தல்

வீடு மற்றும் தொழிலை வேறுபடுத்த, உங்கள் வீட்டின் குறிப்பிட்ட பகுதியைத் தொழிலுக்காக ஒதுக்கவும். ஆனால் உங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ற இடமாக அந்த இடத்தை உருவாக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதேனும் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலைச் செய்தால், அவற்றைத் தயாரித்துச் சேமிப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். இதுவே கணினி சம்பந்தப்பட்ட தொழில் என்றால், உங்கள் லேப்டாப்பை வைப்பதற்கு மட்டுமே இடம் தேவைப்படும்.

பணி மற்றும் வீட்டைச் சமமாகப் பார்த்தல்

நீங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் போது ஏகப்பட்ட நிறைகள் உள்ளன. அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் மற்றும் பணியிடத்திற்குப் பயணிக்க ஆகும் செலவுகளைப் பற்றிய கவலையில்லை.

குடும்பத்திற்குத் தேவையான நேரத்தை எளிதில் திட்டமிடலாம். அதே நேரத்தில் தொழில் மற்றும் வீட்டு வேலைகளை ஒரே சமயத்தில் செய்யமுடியும். துணிதுவைத்துக் கொண்டே அலுவலக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குழந்தையைக் கவனித்துக்கொண்டே கணக்குகள் பார்க்கலாம். எனவே வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் ஏராளமான செயல்களை எளிதாகச் செய்யலாம்.

 

சவால்கள்

இவ்வளவு நிறைகளுக்கு மத்தியிலும் , வீட்டிலிருந்து வேலை செய்யும் போதும் நிறையச் சவால்களும் நிறைந்துள்ளன. எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்பதால் சமநிலைப்படுத்துவது கடினம். எனவே வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் தனியாகக் கால அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள். சில நபர்களுக்கு 8 மணி நேரம் தொழிலுக்கும், 16 மணி நேரம் தனிப்பட்ட வேலைக்கும் பயன்படுத்தலாம். வேறு சிலருக்கோ, 12 மணி நேரத்தில் 45 நிமிடம் தொழிலுக்கும் அதைத்தொடர்ந்து 15 நிமிடம் தனிப்பட்ட வேலைக்கும் என மாறிமாறி ஒதுக்கலாம். உங்களுக்கு எந்தத் திட்டம் சரிப்பட்டு வருகிறது என்பதை விதவிதமாகச் சோதித்துப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.

வீட்டிலிருந்தபடியே தொழில்

வீட்டிலிருந்தபடியே தொழில் செய்வது தொழில் தொடக்கச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இதனால் வாடிக்கையாளர் அடித்தளத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தலாம். எனவே மேலே குறிப்பிட்டுள்ள இந்த டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொண்டு உங்களின் புதிய சாம்ராஜ்யத்தை நிறுவுங்கள்.

Have a great day!
Read more...

English Summary

Simple Steps to Run a Business From Home