பேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்!

சாப்ட்பாங்க் குழுமம் விரைவில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை ஜப்பானில் அறிமுகம் செய்ய உள்ளதாக மசயோசி சன்னுக்கு நெறுக்கமானவர்களிடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்தச் சேவைக்காகப் பேடிஎம் நிறுவனத்துடன் இணைய உள்ளதாகவும், இந்தியா போன்றே பிற பரிவர்த்தனை சேவைகளும் அதில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

பேடிஎம் ஊழியர்கள்

சாப்ட்பாங்க் சார்பாக டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யப் பேடிஎம் ஊழியர்கள் ஜப்பானில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான்

ஜப்பானின் மிகப் பெரிய உள்ளூர் தகவல் பரிமாற்ற சேவை வழங்கும் லைன் கார்ப் மற்றும் மெர்காரி இங்க் உளிட்ட நிறுவனங்களும் டிஜிட்டல் வாலெட் சேவை வணிகத்தில் இறங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சாம்சங் மற்றும் ஆப்பிள்

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் டிஜிட்டல் வாலெட் சேவையினைச் சர்வதேச அளவில் அளிக்க முயன்று தோல்வியைச் சந்தித்து நிலையில் பேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைச் சாப்ட்பாங்க் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது.

பேடிஎம்

பேடிஎம் நிறுவனம் ஜப்பானின் சாப்ட்பாங்கிடம் இருந்து பில்லியன் டாலர் முதலீட்டினை செய்து சதவீத பங்குகளைத் தங்கள் வசம் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாப்ட்பாங்க்

டிஜிட்டல் வாலெட் சேவையினை முதலில் ஜப்பானில் அறிமுகம் செய்த பிறகு அதனைச் சர்வதேச சேவையாக விரிவாக்கம் செய்யவும் சாப்ட்பாங்க் திட்டமிட்டுள்ளது.

பேடிஎம் மற்றும் சாப்ட்பாங்க் என இரு நிறுவனங்களும் இது குறித்த மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

 

Have a great day!
Read more...

English Summary

SoftBank to launch mobile digital payments services in Japan by collaborate with Paytm