இந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..!

ஜப்பானின் சாப்ட்பாங்க் குழுமம் இந்தியாவின் முக்கியமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களான பிளிப்கார்ட், ஓலா, பேடிஎம், க்ரோஃபர்ஸ் மற்றும் ஓயோ உள்ளிட்ட நிறுவனங்களில் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளது.

மேலும் அடுத்த 10 வருடத்தில் 10 பில்லியன் டாலர் வரை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில் சாப்ட்பாங்க் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மசயோஷி சன் கடந்த 4 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களில் 7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளார்.

மசயோஷி சன்

மசயோஷி சன் உலகின் மிகப் பெரிய தனியார் ஈக்விட்டி நிதியாக 100 பில்லியன் டாலரினை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறார். இதற்கான முக்கியப் பங்களிப்பினை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அளிக்கும் என்று இவர் நம்புகிறார்.

முதலீடுகள்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் சாப்ட்பாங்கிற்குக் குறைந்த அளவிலான பங்குகள் இருந்தாலும் வால்மார்ட் வந்துள்ளதால் அதில் இருந்து வெளியேறிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் பேடிஎம் மாலில் 2020-ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பேடிஎம் மாலில் சாப்ட் வங்கிக்கு 21 சதவீத பங்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

உணவு நிறுவனங்கள்

ஸ்விகி நிறுவனத்தில் 6 மாதத்திற்கு முன்பு 250 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ள சாப்ட்பாங்க் ஜோமாட்டோ நிறுவனத்திலும் 400 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மேக் மை டிரிப்

ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தில் சாப்ட்பாங்க் முதலீடு செய்துள்ள நிலையில் அதன் போட்டி நிறுவனமான மேக் மை டிரிப் நிறுவனமும் முதலீடுகளைப் பெறுவதற்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

சாப்ட்பாங்க் ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்களான உபர், லிராப், டிடி சக்சிங் போன்ற வற்றிலும் முதலீடு செய்துள்ளது. பல நிறுவனங்களில் சாப்ட்பாங்க் முதலீடு செய்து இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது சாப்ட்பாங்கிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனவே இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சூரியனாக இன்னும் பல ஆண்டுகளுக்கு மசயோஷி சன் இருப்பார்.

Have a great day!
Read more...

English Summary

SoftBank Masayoshi Son is the new sun for India's internet startups