ஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி!

காலையில் பால் டெலிவசி செய்யும் வணிகத்தில் பிக்பாஸ்கட் மற்றும் ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கவனத்தினைத் திருப்பியுள்ளனர். அலிபாபா நிறுவனம் புனே மைக்ரோ டெலிவரி நிறுவனமான ரெயின்கேன் நிறுவனத்தினை வாங்க முயற்சி செய்து வரும் நிலையில் ஸ்விகி நிறுவனம் ஸ்பர்டெய்லி-ஐ கையகப்படுத்த உள்ளது.

ஸ்விகி நிறுவனம் ஸ்பர் டெயிலி நிறுவனத்தினை வாங்க முயற்சி செய்யும் நிலையில் பிக் பாஸ்கட் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

ஸ்பர்டெயிலி

ஸ்பர்டெயிலி நிறுவனத்தில் பல வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீடு செய்து இருந்தாலும் ஸ்விகி நிறுவனத்துடன் இணைய வாய்ப்புள்ளது.

ஸ்விகி

ஸ்விகி நிறுவனம் ஸ்பர்டெயிலி நிறுவனத்தினை வாங்கிய பிறகு பால் மற்றும் மளிகை சாமணங்கள் மட்டும் இல்லாமல் செய்தி தாள், மருந்துகள் போன்றவற்றையும் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.

டெயிலி நிஞ்சா

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்விகி நிறுவனம் டெயிலி நிஞ்சா நிறுவனத்தினை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் டெயிலி நிஞ்சா நிறுவனம் தனிப்பட்டுச் செயல்பட முடிவு செய்துள்ளதால் ஸ்விகி ஸ்பர் டெயிலி மீது தனது கவனத்தினைத் திருப்பியுள்ளது.

உணவு டெலிவரி

உணவு டெலிவரி சந்தையில் ஸ்விகி நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து முதல் இடத்தினைப் பிடித்துள்ள நிலையில் விரைவில் மைக்ரோ டெலிவரியான பால், மருந்து, மளிகை சாமானங்கள் விற்பனையிலும் மிகப் பெரிய வளர்ச்சி கிடைக்கும் என்று கூறுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Soon Swiggy To Acquire Micro Delivery Startup SuprDaily