கோயமுத்தூர் நிறுவனத்துடன் டாடா கூட்டணி.. கொங்கு மண்டலத்தில் புதிய புரட்சி..!

டாடா மற்றும் ஓலா நிறுவனங்கள் இரண்டும் கைகோர்த்து இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனச் சந்தையினை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல உள்ளன. இதற்காகத் தமிழ் நாட்டின் ஜெயம் நியோ உடன் டாடா மோட்டார்ஸின் நேனோ பிரிவு இணைந்துள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

டாடா நேனோ எலக்ட்ரிக் கார் ஆனது ஜெயம் ஆட்டோமோட்டிஸ் உடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக 400 நேனோ எலக்ட்ரிக் கார்கள் ஓலா நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2021-ம் ஆண்டுக்கு 1 மில்லியன் நேனோ எலக்ட்ரிக் காரினை நாடு முழுவதும் விற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நியோ

டாடா நேனோ போன்றே இருக்கும் நியோ காரின் எஞ்சின், கியர் பாஅக்ஸ், கட்டமைப்பு போன்றவற்றை நேனோவும், ஜெயம் நிறுவனம் தனது கோயமுத்தூர் ஆலையில் அதனை அசம்பிள் செய்து எலக்ட்ரிக் கார் அமைப்பைச் சேர்க்கும்.

ஆனால் இந்தக் கார்களில் டாடா பிராண்டு லோகோ இல்லாமல் ஜெயம் நிறுவனத்தின் லோகோ இடம்பெறும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

 

ஓலா

ஒலா முதலில் நாக்பூரில் 200 எலக்ட்ரிக் கார் இ-ரிக்‌ஷா சேவைகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த ஜெயம் நியோ காரினை ஹைதராபாத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் யூனிட் போன்றவற்றை நிறுவும் பனியிலும் ஈடுபட்டு வருகிறது.

உபர்

ஒலாவின் போட்டி நிறுவனமான உபர் மகேந்திரா உடன் இணைந்து எலக்ட்ரிக் வாகச் சேவையினைப் புகுத்தியுள்ள நிலையில் டாடா மற்றும் ஓலா இணைந்து இருப்பது ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் மகேந்திரா எலக்ட்ரிக் கார்களைத் தான் ஓலா பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நேனோ காரினை ஜெயம் ஆட்டோமொபைல் உடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனமாக மாற்றுவது மட்டும் இல்லாமல் டைகர் மற்றும் டியாகோ சீடான் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

கோயமுத்தூர்

கோயமுத்தூர் தென் இந்தியாவில் அதிகளவில் பருத்தி அடைகள் உற்பத்தி செய்யும் இடமாகவும், இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும் இருந்து வரும் நிலையில் புதிதாக எலக்ட்ரிக் பைக் மற்றும் கார் போன்றவற்றை உற்பத்தி செய்யும் இடமாகவும் மாற உள்ளது.

இந்தியா

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரிக்காக மாற்ற வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக வைத்துள்ள நிலையில் டாடா, மகேந்திரா, மாருதி, ஹீரோ, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு என அனைத்து முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன.

Read more about: டாடா ஓலா tata ola

Have a great day!
Read more...

English Summary

Tata, Jayem Neo & Ola Join Hands TO Boost Electric Vehicles In India