உணவு விநியோகச் சந்தையில் வர்த்தக யுத்தம்.. ஸ்விக்கியிடம் மல்லுக்கட்டும் ஜொமாட்டோ!

இந்தியாவின் உணவு விநியோகச் சந்தையில் ஸ்விக்கி மற்றும் ஷூமோட்டோ நிறுவனங்கள் வர்த்தக யுத்தத்தைத் தொடங்கியுள்ளன. முக்கிய நகரங்களில் சந்தையைக் கைப்பற்ற நடக்கும் இந்தப் போட்டியில் மாதம் 200 கோடி ரூபாய் வரை செலவிடுகின்றன.

நிறுவனங்களின் செலவினங்கள்

ஜொமாட்டோ நிறுவனம் மாதம் 125 கோடி ரூபாயை வர்த்தக விரிவாக்கத்துக்காகச் செலவிடுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஸ்விக்கி நிறுவனம் 110 முதல் 125 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டியது. கடந்த 3 மாதங்களில் 5 முறைக்கு மேல் 3 மில்லியன் டாலரிலிருற்து 4 மில்லியன் டாலர் வரை இந்த நிறுவனங்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

நம்பகத்தன்மையைக் கைப்பற்றப் போட்டி

ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, தில்லி போன்ற நகரங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், நம்பகத்தன்மையை நிலைநாட்டவும் மிகப்பெரிய தொகையைச் செலவிட்டு வருகின்றன. தள்ளுபடி, சலுகைகள் நீங்கலாக, விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரெஸ்டாரண்டுகளில் உணவுக் கொள்முதலை அதிகரிக்கவும் பெரும் தொகையை வாரியிறைக்கின்றன. இதன் தாக்கம் ரெஸ்டாரண்டுகளில் பெறப்படும் கமிஷன் 20 லிருந்து 24 விழுக்காடாகக் குறைந்தது. இது பரந்த விநியோக விருப்பத்துக்கு உதவும் என்று அந்த நிறுவனங்கள் கருதுகின்றன,

ஆதிக்கப் போட்டி

பெங்களூரு, ஹைதராபாத் சந்தைகளில் ஸ்விக்கி ஆதிக்கம் செலுத்தி வருவதால், அதனைக் கைப்பற்ற ஜொமாட்டோ கடுமையாகப் போராடுகிறது. டெல்லி, குர்கான் சந்தைளில் இருந்து ஷூமோட்டோவை விரட்ட, ஸ்விக்கி கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக என்.சி.ஆர் பகுதியில் ஷூமோட்டோ நிறுவனம் செல்வாக்கு செலுத்தி வருவதை ஸ்விக்கி விரும்பவில்லை.

விநியோகப் பிரதிநிதி சம்பளம் ரூ.50,000

போட்டி அதிகரித்துள்ள நகரங்களில் விநியோகத்தைப் பரவலாக்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைச் சமன் செய்யவும் புதிய தந்திரங்களை மேற்கொண்டுள்ளது. விநியோகப் பிரதிநிதிகளின் ஊதியத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது. 18 ஆயிரத்திலிருற்து 20 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்ட சம்பளம், கடந்த ஜூலை மாதம் முதல் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

பகீரத முயற்சி

ஸ்விக்கி நிறுவனம் ஒரு பரந்த நம்பகத்தன்மையைப் பெற்ற ஹைதராபாத் சந்தையைக் கைப்பற்ற ஜொமாட்டோ கடும் போராட்டங்களைச் செய்து வருகிறது. இதேபோல் கப்பல்களிலும் உணவு விநியோகத்தைத் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஜொமாட்டோ 25 லிருந்து 27 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

வர்த்தக மல்லுக்கட்டு

ஸ்விக்கி, ஜொமாட்டோ தவிர உபெர் ஈட், புட் பேண்டா போன்ற நிறுவனங்களும் மல்லுக்கு நிற்கின்றன. மாதம் 4.5 மில்லியன் டாலரை செலவு செய்யும் இந்த நிறுவனங்கள், ரெஸ்டாரண்ட் கமிஷன் தொகையை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

நிபுணர்களின் கருத்து

சந்தையில் ஆதிக்கம் செய்வதற்காகச் செலவுகள் அதிகரிப்பது இயற்கையானது என்றாலும், செயல்பாட்டுத் திறனே வெற்றியைத் தீர்மானிக்கும் என்கிறார் ரெட்சீல் கன்சல்டிங் மேலாளர் உஜ்ஜல் சௌத்ரி. விரைவான விநியோகமும், உணவகங்களின் பிரத்தியேகமான தயாரிப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பும் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருக்கும் என்கிறார்.

வணிக உத்தியின் பிரதிபலிப்பு

மின்னணு வணிகத்தின் பிரதிபலிப்பு உணவு விநியோகச் சந்தையில் தற்போது எதிரொலிக்கிறது. 2014- 15 ஆண்டில் அமேசான், பிளிப்கார்ட், ஓலா, உபெர் நிறுவனங்களிடையே இதேபோன்ற போட்டி நிலவியது. 2014 ஆம் ஆண்டில் சந்தையைக் கைப்பற்ற பிளிப்கார்ட் நிறுவனம் மாதம் 80 லிருந்து 100 மில்லியன் டாலர் வரை செலவு செய்தது. ஓலா நிறுவனம் 15 மில்லியன் டாலரிலிருந்து 18 மில்லியன் வரை செலவு செய்ய நேர்ந்தது.

Have a great day!
Read more...

English Summary

Zomato, Swiggy footing Rs 100 crore bill for top spot