துருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..!

2018ஆம் ஆண்டில் மட்டும் துருக்கி நாட்டின் நாணயமான லிரா-வின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகச் சுமார் 80 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

லிராவின் சரிவு தற்போது பல நாடுகளின் நாணய மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதமாக அமெரிக்க டாலருக்கு எதிராக 70.09 ரூபாயாகச் சரிந்து இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அளவிற்கு அதிகமாகக் கடன்

துருக்கியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அதிகளவிலான கடனில் உள்ளது. சொல்லப்போனால் துருக்கி நாட்டின் மொத்த வங்கித்துறையும் அன்னிய முதலீட்டு வாயிலாகவே இயங்கி வருகிறது.

உலகில் எந்தொரு வளரும் நாடுகளைக் காட்டிலும் துருக்கியின் கடன் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.

 

பணவீக்கம்

ஜூலை மாதத்தில் இந்நாட்டின் பணவீக்கத்தின் அளவு 15.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வட்டி விகிதம்

துருக்கி நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்நாட்டின் மத்திய வங்கி கண்டிப்பாக வட்டி விகிதத்தை உயர்த்தியாக வேண்டும். ஆனால் அதிபர் ரெசிப் தலைமையிலான அரசு அதிக வட்டி விகிதம் விதிப்பது தவறான செயல் எனக் கூறி வட்டியை உயர்த்தாமல் உள்ளார்.

நிதிப் பற்றாக்குறை

இந்நாட்டில் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சனை இருக்கும் காரணத்தால் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதன் எதிரொலியாகத் தற்போது அன்னிய முதலீட்டு அளவு 130 பில்லியன் டாலராகவும், குறுகிய கால வெளிநாட்டு நாணய கடன் அளவு 180 பில்லியன் டாலராக உள்ளது.

மேலும் இந்நாட்டின் மொத்த கடன் அளவான 460 பில்லியன் டாலர் தொகையில் 70 சதவீதம் வெளிநாட்டு நாணய கடன் தான்.

 

காரணம் 5: அமெரிக்கா

இந்த மோசமான சூழ்நிலையில், துருக்கி நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் நட்புறவும் சரியாக இல்லை எனக் கூறி, தற்போது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கான வரி 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

இதன் மூலம் அலுமினியத்திற்கு 20 சதவீத வரியும், ஸ்டீல் மீது 50 சதவீத வரியும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

 

ஒரு வாரம்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராகத் துருக்கி லிராவின் மதிப்பு 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இனி வரும் காலத்திலும் அதிகளவிலான சரிவை சந்திக்கும் எனவும் தெரிகிறது.

Read more about: turkey global economy us dollar

Have a great day!
Read more...

English Summary

5 reasons why the Turkish lira is falling