ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..!

இந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா 2018-ம் அண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தில் தனது சேவையினை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஓலா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய டாக்ஸி சேவையினை ஆஸ்திரேலேயாவில் துவங்கியது மட்டும் இல்லாமல் அமெரிக்க நிறுவனமான உபருக்கு மிகப் பெரிய போட்டியாகவும் உள்ளது.

சாப்ட்பாங்க்

ஒலா நிறுவனத்தினில் முதலீடு செய்துள்ள சாப்ட்பாங் குழுமம் சவுத் வேல்ஸில் செப்டம்பர் மாதம் முதல் டாக்ஸி சேவையினை வழங்குவதற்கான உரிமையினைப் பெற்றுள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் மற்றும் பிற நகரங்களில் சேவையினை விரிவு படுத்தவும் முடிவு செய்துள்ளது.

டாக்ஸி சேவை

டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா இங்கிலாந்தில் தனியார் வாகனங்களை வாடகைக்கு அளிக்க உள்ளது மட்டும் இல்லாமல் பிரபலமான கருப்பு கேப் சேவையினை அளிக்கும் என்றும் பிற போக்குவரத்துச் சேவைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஓலா இந்தியா

ஓலா இந்தியாவானது டாக்ஸி சேவை மட்டும் இல்லாமல் ஆன்லைன் ஆட்டோ சேவையினையும் இந்தியாவில் வழங்கி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் உணவு டெலிவரி நிறுவனங்களையும் கைபற்றி வருகிறது.

உபர்

ஓலா நிறுவனம் உபரின் இந்திய சேவையினை வாங்கும் முடிவிலும் உள்ளது. இதே போன்று தான் சிங்கப்பூரில் கிராப் நிறுவனம் உபரின் சேவையினை வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

After Australia Soon Ola To Drive into UK