அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு நாங்கள் தயார்-அலிபாபா..!

பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனிடையில் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரினை சமாளிக்க நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தகப் போரினை எங்களால் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்றும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருவாய்

அலிபாபா நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிடும் முன்பு தங்களது ஆண்டு மற்றும் தின வருவாய் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டு இருந்தது.

அமெரிக்கப் பொருட்கள்

வரி உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்கப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. எனவே சீன வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பொருட்கள் அல்லது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாறிக்கொள்வது நல்லது என அலிபாபா நிறுவனத்தின் துணை தலைவrஆன ஜோசப் டசால் தெரிவித்துள்ளார்.

ஜாக் மா

அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா அமெரிக்காவின் மிகப் பெரிய பிராண்டுகளுடன் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்புவதாகௌம் தெரிவித்துள்ளார்.

அலிபாபா கிளவுட்

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது அலிபாபாவின் கிளவ்ட் வியாபாரம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, அமெரிக்கா உட்படப் பல வணிகங்களின் இணையப் பக்கங்களை அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது.

விற்பனை

அலிபாபா நிறுவனத்தின் ரீடெயில் வருவாயும் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே வர்த்தகப் போரால் அலிபாபாவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

ஸ்டார் பக்ஸ்

அமெர்க்க காபி கடை நிறுவனமான ஸ்டார் பக்ஸின் இந்திய சந்தையினை டாடா நிறுவனம் கையாண்டு வருவது போன்று சீனாவில் அலிபாபா நிறுவனம் நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Alibaba Is Ready For A Trade War With US