ராசியாவது மண்ணாவது, எல்லா ராசிகாரணும், ஜாதிகாரணும் Billionaire ஆகலாம், ஆதாரத்தோடு சொல்லும் சீனா.!

இந்தியாவைப் போன்றே சீனாவிலும் வானியல் சாஸ்திரம், ஜோதிடம் போன்றவைகள் இன்னும் பார்க்கப்பட்டும், நம்பப்பட்டும் வருகின்றன. இந்தியாவில் இருக்கும் நல்ல நாள், நாள் கிழமை, வேளைகள் எல்லாம் சீனாவிலும் உண்டு. இந்தியாவிலும் 12 ராசிகள் தான், சீனாவிலும் 12 ராசிகள் தான். இந்தியாவுக்கு தீபாவளி போல சீனர்களுக்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடும் ஒரு விழா இருக்கிறது. அத்தனை ஒற்றுமைகள். அவ்வளவு ஏன் ஹூரன் ரிச் லிஸ்ட் 2018 (Hurun Rich List) என்கிற பணக்காரர்கள் பட்டியலில் கூட எந்த ராசிக்காரருக்கு யோகம் அடித்திருக்கிறது. எந்த ராசிக் காரர்கள் எல்லாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள் என தனிக் கட்டம் போட்டு காட்டி இருக்கிறார்கள் நம் பக்கத்து நாட்டு சிங் மங் சங் சீனர்கள். நமக்கு தான் ராசி பலன் என்றால் மிகவும் பிடிக்குமா... இதோ billionaire-கள் ராசி உடன் உங்களுக்காக.

Advertisement

மைக்கேல் டெல்

ராசி: பாம்பு
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 39-வது இடம்
2017 டெக்னாலஜி உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 10-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 27.6 பில்லியன் டாலர்
நிறுவனம்: டெல் டெக்னாலஜீஸ்
பதவி: சிஇஓ
தர்ம காரியங்கள்: குழந்தைகளின் வறுமையைப் போக்க 1.5 பில்லியன் டாலர் நன்கொடையாக கொடுத்திருக்கிறார்
தாரக மந்திரம்: I'm guilty of doing too much, and I'm guilty of not seeing mistakes coming. What I'm not guilty of is making the same mistake twice.

Advertisement
லாரி எலிசன்

ராசி: குரங்கு
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 10-வது இடம்
2017 டெக்னாலஜி உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 04-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 58.4 பில்லியன் டாலர்
நிறுவனம்: ஒரேக்கில்
பதவி: தலைவர்
தர்ம காரியங்கள்: மே 2016-ல் 200 மில்லியன் டாலரை தெற்கு கரோலின பல்கலைக் கழகத்தின் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு கொடுத்தார். அதோடு ஹவாய் தீவுகளில் மண் இல்லாமல் விவசாயம் செய்யும் Hydroponic farming திட்டங்களில் ஸ்டார்ட் அப் தொடங்கி முதலீடு செய்து வருகிறார்.
தாரக மந்திரம்: When people start telling you that you're crazy, you just might be on to the most important innovation in your life.

ஜெஃப் பிசாஸ்

ராசி: முயல்
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 1-வது இடம்
2017 டெக்னாலஜி உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 2-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 159.8 பில்லியன் டாலர்
நிறுவனம்: அமேஸான், ப்ளூ ஆரிஜின், வாசிங்டன் போஸ்ட் 
பதவி: சிஇஓ மற்றும் நிறுவனர்
தர்ம காரியங்கள்: டே ஒன் ஃபண்ட் என்கிற பெயரில் 2 பில்லியன் டாலருக்கு வீடற்ற குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு ப்ரீ ஸ்கூல்களையும் கட்டிக் கொடுக்க நிதி அளித்திருக்கிறார். 
தாரக மந்திரம்: I didn't think I'd regret trying and failing. And I suspected I would always be haunted by a decision to not try at all.

டேவிட் கோச்

ராசி: ட்ராகன்
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 8-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 53.5 பில்லியன் டாலர்
நிறுவனம்: கோச் இண்டஸ்ட்ரீஸ்
பதவி: கெளரவ இயக்குநர்
தர்ம காரியங்கள்: நியூயார்க் நகரில் உள்ள லிங்கன் சென்டர் மற்றும் ஸ்லோன் நினைவு புற்றுநோய் மையத்துக்கு நிறைய நன்கொடை வழங்கி இருக்கிறார்.
தாரக மந்திரம்: The way I look at it is, cancer research is absolutely nonpartisan. Cancer is very democratic in the sense that it attacks people regardless of their race, their gender, their national background, or their political persuasions.

வாரன் பஃபெட்

ராசி: குதிரை
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 3-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 88.3 பில்லியன் டாலர்
நிறுவனம்: பெர்க்‌ஷிர் ஹதவே, உலகின் நம்பர் 1 முதலீட்டாளர்
பதவி: சிஇஓ
தர்ம காரியங்கள்: தன்னுடைய 99% சொத்துக்களை நன்கொடையாக வழங்க இருக்கிறார். ஏற்கனவே 35 பில்லியன் டாலரை பில் & மெலிண்டாவின் அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்
தாரக மந்திரம்: The babies being born in America today are the luckiest crop in history... For 240 years it's been a terrible mistake to bet against America, and now is no time to start.

பில் கேட்ஸ்

ராசி: ஆடு
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 2-வது இடம்
2017 டெக்னாலஜி உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 1-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 96.9 பில்லியன் டாலர்
நிறுவனம்: மைக்ரோசாஃப்ட்
பதவி: இணை நிறுவனர் மற்றும் ஆலோசகர்
தர்ம காரியங்கள்: பில் & மெலிண்டா கேட்ஸ் அமைப்பு, இவர் தர்ம காரியங்களுக்கு பெயர் போனவர், சற்று கூகுளிடம் கேட்டால் போதுமே.
தாரக மந்திரம்: Money has no utility to me beyond a certain point. Its utility is entirely in building an organization and getting the resources out to the poorest in the world.

யான் ஹாவ்

ராசி: புலி
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: கிடைக்கவில்லை
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு:சுமார் 14 பில்லியன் டாலர். 

நிறுவனம்: சீனா பசிபிப் கன்ஸ்ட்ரக்‌ஷன், ரியல் எஸ்டேட் பிசினஸ்
பதவி: கிடைக்கவில்லை
இவருடைய ஃபோர்ப்ஸ் விவரங்கள் கிடைக்கவில்லை. புலி ராசிக்கு இவரைத் தவிர வேறு ஆட்கள் இருக்கிறார்களா.. எனவும் தெரியவில்லை.

பெர்னார்ட் அர்னால்ட்

ராசி: காளை
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 4-வது இடம்
மார்ச் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 71.9 பில்லியன் டாலர்
நிறுவனம்: LVMH Moet Hennessy Louis Vuitton
பதவி: சிஇஓ மற்றும் தலைவர்
தர்ம காரியங்கள்: கிடைக்கவில்லை
தாரக மந்திரம்: I see myself as an ambassador of French heritage and French culture. What we create is emblematic. It's linked to Versailles, to Marie Antoinette.

முகேஷ் அம்பானி

ராசி: சேவல்
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 19-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 40.1பில்லியன் டாலர்
நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பதவி: நிறுவனர் மற்றும் தலைவர்
தர்ம காரியங்கள்: நிறுவனத்துக்கு உள்ளேயே சிறு சிறு உதவிகள் செய்யப்படுகிறது. பெரிய அளவில் விவரங்கள் கிடைக்கவில்லை.
தாரக மந்திரம்: Anything and everything that can go digital is going digital. India cannot afford to be left behind.

ஜீ ஜியாயின்

ராசி: நாய்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 33.2 பில்லியன் டாலர்
நிறுவனம்: எவர் க்ராண்டே ரியல் எஸ்டேட் குழுமம்
பதவி: நிறுவனர் மற்றும் தலைவர்
இவருடைய ஃபோர்ப்ஸ் விவரங்கள் கிடைக்கவில்லை. நாய் ராசிக்கு இவரைத் தவிர வேறு ஆட்கள் இருக்கிறார்களா.. எனவும் தெரியவில்லை. ஆகையால் இவர் ஒரு பில்லியனர் என்பதை மட்டும் இங்கு உறுதிபடுத்தி இருக்கிறோம்.

சார்லஸ் கோச்

ராசி: பன்றி
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 8-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 53.5 பில்லியன் டாலர்
நிறுவனம்: கோச் இண்டஸ்ட்ரீஸ்
பதவி: சிஇஓ
தர்ம காரியங்கள்: கோச் நிறுவனமாக நிறைய செய்திருக்கிறார்கள். இவரின் மொத்த சொத்தில் 2%-த்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்.
தாரக மந்திரம்: For business to survive over a long period, it needs to be contributing to society and people's well-being. Otherwise, who's going to want it?

மார்க் ஸுக்கர்பெர்க்

ராசி: எலி
2018 ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 5-வது இடம்
2017 டெக்னாலஜி உலகப் பணக்காரர்கள் பட்டியலில்: 3-வது இடம்
அக்டோபர் 2018-படி மொத்த சொத்து மதிப்பு: 60.9 பில்லியன் டாலர்
நிறுவனம்: ஃபேஸ்புக்
பதவி: இணை நிறுவனர், தலைவர் மற்றும் சிஇஓ
தர்ம காரியங்கள்: தன்னுடைய 99% ஃபேஸ்புக் பங்குகளை நன்கொடையாக வழங்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
தாரக மந்திரம்: We may not have the power to create the world we want immediately, but we can all start working on the long term today.

ஆக சீனாவின் 12 ராசிக் காரர்களும் உலகின் டாப் பணக்காரகளில் இருக்கும் போது, இந்தியாவின் 12 ராசிக்கார்களும் ஏதோ ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருக்க மாட்டார்களா என்ன...? பிறகு நீங்கள் மட்டும் ஏன் ஜோசியம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்..? நீங்களும் நல்ல பிசினஸை சிறப்பாக செய்தால்... உங்களைப் பற்றியும் எழுத எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமே...? எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன் ப்ளீஸ்..?

 

English Summary

billionaire chinese star signs revelaing that any one can become billionaire
Advertisement