ஒரு மீன் 2 கோடி ரூபாய்.. போட்டி போட்டு வாங்கிய ஜப்பான் மக்கள்..!

டோக்கியோ: கலை பொருட்கள் அல்லது ஏதேனும் தேசிய தலைவர்கள் பயன்படுத்திய பொருட்கள் தான் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எண்ணத்தினை இன்றோடு மறந்து விடுங்கள்.

ஜப்பானில் சர்வதேச சுஷி ரெஸ்டாரண்டின் உறிமையாளர் வெள்ளிக்கிழமை ப்ளூஃபின் டுனா என்ற மீனை 36.45 மில்லியன் ஜப்பானிய யென் என்ற விலைக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2.04 கோடி ரூபாய் ஆகும்.

இது முதல் முறை அல்ல

ஜப்பானின் மிகவும் பிரபலமான ட்சுக்ஜி மீன் மார்க்கெட்டில் இந்த மீன் 2 கோடி ரூபாயக்கு விற்று இருந்தாலும் இதை விட அதிக விலைக்குச் சென்ற ஆண்டு 72 மில்லியன் யென் மற்றும் 2013-ம் ஆண்டு 155 மில்லியன் யென்னிற்கு எல்லா இங்கு மீன் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ப்ளூஃபின் டுனா

பெசிபிக் கடலில் கிடைத்த இந்த ப்ளூஃபின் டுனா மீன் 405 கிலோ எடை இருந்ததாகவும் இதனை 36.45 மில்லியன் எண் கொடுத்து ஒண்டியார வாங்கியிருப்பது தான் ஜப்பானின் சமுக வலைதளங்களில் டிரெண்டான செய்தியாக உள்ளது.

ஒலிம்பிக்

ஜப்பானின் டோக்கியோவில் மிகவும் பிரபலமான இந்த ட்சுக்ஜி மீன் மார்க்கெட் 2020-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி காரணமாக வேறு இடத்திற்கும் இடம் பெயர உள்ளது.

ஜப்பான் பிரதமர்

மீன் ஏலம் விடுவதை ஜப்பான் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாக மாறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியது மட்டும் இல்லாமல் ஜப்பானிய பொருளாதாரத்தினை இது உயர்த்தும் என்றும் கூறியுள்ளார்.

சடோஷி நக்மோடோ

உலகையே திக்குமுக்காட வைத்த சடோஷி நக்மோடோ.. யார் இவர்..? என்ன செய்தார்..?

 

 

Have a great day!
Read more...

English Summary

Bluefin Tuna sells for RS 2 cr at world's largest fish market