பணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..!

நேபாளம், இலங்கை, வங்கதேசம், மலேசியா மற்றும் பிரேசில் நாட்டு நாணயங்களை(பணம்) அச்சிட்டு வழங்கி வரும் சீனா, நேபாளத்தின் உயர் மதிப்புடைய 1000, 500 மற்றும் 5 ரூபாயை அச்சிடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வணிக ரீதியாக அந்நிய நாட்டுப்பணத்தை அச்சிட்டு வழங்குவதாகவும், நேபாளம் தான் தனது முதல் வாடிக்கையாளர் என்றும் சைனா பேங்க் நோட் பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேசனின் தலைவர் லியூ குய்செங் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகளுடன் ஒப்பந்தம்

நேபாளத்தைத் தொடர்ந்து தாய்லாந்து, வங்கதேசம், மலேசியா, போலந்து, பிரேசில், இலங்கை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, வெற்றிகரமாக நாணயங்களை அச்சிட்டு வழங்கி வருவதாக லியூ கூறினார்.

முழு வீச்சில் உற்பத்தி

நடப்பு ஆண்டில் அதிக அளவிலான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, நாடு முழுவதும் பணம் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக பேங்க் நோட் பிரிண்டிங் கார்ப்பரேசன் உறுதிப்படுத்தியுள்ளது.

18,000 ஊழியர்கள்

உலகின் மிகப்பெரிய பணத்தாள் அச்சுக்கூடமாக வளர்ந்துள்ள சீனாவின் பேங்க் நோட் பிரிண்டிங் கார்ப்பரேசனில், 18000 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பணத்தாள் மற்றும் நாணயங்களை தயாரிப்பதற்கு 10 க்கும் மேற்பட்ட பாதுகாப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

காகித தொழிற்சாலைகள்

சீனாவின் மிகப்பெரிய பேப்பர் மில்கள் போடிங், ஹெபல் மாகாணங்களில் இயங்கி வருகிறது. பணத்தாள் தயாரிப்பதற்கான பெரிய ஒப்பந்தங்கள் கிடைத்தவுடன் 603 தொழிற்சாலைகளும் இயங்கத் தொடங்குகின்றன.

அண்மையில் இந்தியப் பணமும் சீனாவில் அச்சிட முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

 

Have a great day!
Read more...

English Summary

China printing currencies for countries like Nepal, Sri Lanka and Bangladesh