பங்குச்சந்தையில் இறங்கும் சியோமி.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சவால் விடும் சியோமி ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட விண்ணப்பம் அளித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீது செய்யத் திட்டமிடும் நோக்கத்துடன் பிற நிறுவனங்கள் மீதான முதலீட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதுள்ளனர்.

அப்படி என்ன இந்த நிறுவனம் ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சீனா

உற்பத்தியில் சிறந்து விளங்கும் சீனா தயாரிப்புகளில் தரம் குறைவாக இருந்த காலம் எல்லாம் மலையேறி, தற்போது மலிவான விலையிலேயே உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாகப் பொருட்களைத் தயாரித்து அசத்துகிறது.

ஸ்மார்ட்போன்

இந்தத் தர மேம்பாட்டில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மிகவும் முக்கியமானது. சியோமியின் தயாரிப்புகள் தற்போது சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய போட்டியாக விளங்குவதும் மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான நம்பிக்கையைச் சியோமி பெற்றுள்ளது.

பங்குச்சந்தை

இப்படி ஆசியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் என உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் சியோமி பங்குச்சந்தையில் இறங்குவதால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

100 பில்லியன் டாலர்

ஹாங்காங் பங்குச்சந்தையில் சியோமி விண்ணப்பம் அளித்துள்ளதன் படி சியோமி நிறுவனம் தற்போது 100 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

டெக் நிறுவனங்கள்

கடந்த 4 வருடத்தில் சீன டெக் நிறுவன பிரிவில் பட்டியலிடப்போகும் மிகப்பெரிய நிறுவனம் என்றால் சியோமி தான். 2014ஆம் ஆண்டில் அலிபாபா பங்குச்சந்தையில் இறங்கியதன் வாயிலாகச் சுமார் 21.8 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டியது.

நிறுவனத்தின் நிலை

2017ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 114.62 பில்லியன் யுவான் அதாவது 18 பில்லியன் டாலர், இது 2016ஆம் ஆண்டை விடவும் 67.5 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல் 2016ஆம் ஆண்டில் 491.6 மில்லியன் யுவான் லாபத்தைப் பெற்ற சியோமி 2017இல் 43.89 பில்லியன் யுவான் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

 

முக்கியத் தயாரிப்புகள்

சியோமி ஸ்மார்ட்போன் மற்றும் பிட்ன்ஸ் பேன்ட் போன்றவற்றைத் தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் முன்னோடியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவில் மலிவான விலையில் டிவி தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் சீனாவில் சியோமி ஸ்கூட்டர்ஸ், ஏர் ப்யூரிபையர், ரைஸ் குக்கர் ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறது.

 

முதலீட்டு வாய்ப்பு..

இப்படிப்பட்ட நிறுவனத்தில் ஆரம்பக்கட்டத்திலேயே முதலீடு செய்தால் அடுத்தச் சில வருடங்களிலேயே இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.

ஓடஓட விரட்டும் 'சியோமி'..!

சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை ஓடஓட விரட்டும் 'சியோமி'..!

Read more about: xiaomi china smartphone ipo

Have a great day!
Read more...

English Summary

China's Xiaomi files for mega Hong Kong IPO