சம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா..? அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..! Cuddle up to me

60 நிமிடம் கட்டிபிடிக்க ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வருமானம் பார்க்கும் Cuddle Up To Me ஸ்டார்ட் அப்

நல்லா நெருக்கமா படுங்க... உங்க உடம்போடு சூடு இன்னொருத்தர் உணரணும்... அந்த அளவுக்கு நல்ல இருக்கமா... நெருங்கி... கட்டிப் பிடிச்சிக்கிட்டே படுங்க..! என்கிறார் 34 வயது சமந்தா ஹெஸ். இந்த நான்கு வரியைப் படித்து விட்டு சமந்தாவை தவறாக நினைக்க வேண்டாம். அவர் ஒரு தெரபிஸ்ட். CUDDLE தெரபிஸ்ட். Cuddle Up To Me என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். Cuddle up to me வலைதளத்தை காண: https://cuddleuptome.com/about/#Cora

Advertisement

CUDDLE தெரபி:

CUDDLE - a prolonged and affectionate hug. CUDDLE என்கிற வார்த்தைக்கு ஆங்கில அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம். ஒரு நபரை வெகு நேரமாக, அன்போடு கட்டிப் பிடிப்பதற்குப் பெயர் தான் CUDDLE. அதைத் தான் ஒரு சில அறிவியல் முறையில் சரியாக செய்து, இன்று அன்பில் கம்பீரமாக வளர்ந்து வருகிறார் நம் சமந்தா ஹெஸ்.

Advertisement
வெறுமை

சமந்தா ஹெஸ்-க்கும் வாழ்கை போராகத் தான் போய்க் கொண்டிருந்தது. எதோ உப்புமா செக்யூரிட்டி கம்பெனியில் இன்ஸ்டாலேஷன் மேலாளர். பள்ளித் தோழனையே கல்யாணம் செய்து கை கழுவிய அமெரிக்கப் பெண். செம கடுப்பான வாழ்கை. ஆயிரக் கணக்கான நண்பர்கள் ஆனால் உணர்வைப் பகிர, அன்பை அள்ளிக் கொடுக்க, ஆனந்தத்தைத் தெளிக்க ஆள் இல்லை.

அன்பில் முக்தி

அந்த நேரத்தில் "2 டாலருக்கு ஒரு டீலக்ஸ் ஹக் (கட்டிப் பிடித்தல்) " என ஒரு விளம்பரம். புரிந்து விட்டது. தனக்கு ஏற்பட்ட வெற்றிடம் நிறைய அமெரிக்கர்களுக்கு இருப்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தார். அதே நினைப்பில் இரவு கடுமையாக நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டிப் பிடிக்கிறார். தன்னையும் மீறி அழுகை பீறிடுகிறது. அந்த நோய்வாய்ப்பட்ட பெண்ணின் கண்களிலும் நீர் வழிகிறது. இந்த நொடி உலகமே அன்பு மயமாகத் தெரிகிறது.

நாளை வருவாயா..?

எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும் போது அந்த நோய்வாய்ப்பட்ட பெண் "என்னை இத்தனை அன்போடு கட்டிப் பிடித்த கடைசி நபர் என் கணவர் தான். அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. நாளையும் வருவாயா... என்னை இதே அன்போடு கட்டி அணைப்பாயா..? என முட்டி போட்டு ரோஸ் கொடுக்காத குறையாக கேட்டிருக்கிறார். சமந்தாவுக்கு கண்ணங்கள், காது மடல்கள் எல்லாம் சிவந்து விட்டு. மீண்டும் கண்களில் வைரத் துளிகள் பெருக்கெடுத்து மின்னுகின்றன. நிச்சயம் வருவென் என்கிறார்.

அடுத்த நாள்..!

மிண்டும் அந்த பாட்டி, சமந்தாவின் தோலில் சாய்ந்து அழுகிறார். முந்தைய வாரத்தில் அழுத பாட்டி, இன்று சமந்தாவோடு சிரிக்கிறார். சாப்பிட பீட்ஸா கேட்கிறார். தன் கணவன் கொடுத்த பரிசையே, சமந்தாவுக்குப் பரிசாகத் தருகிறார். சமந்தா ஆசையாக அந்த சுருங்கிய நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்கிறார். "நாளை வரும் போது பரிட்டோஸ் வாங்கி வா" என்கிறார் உடல் தளர்ந்த பாட்டி.

பரிட்டோஸ்

பாட்டி சொன்ன பரிட்டோஸ் கடைக்குச் சென்று ஒன்றை வாங்கி சுவைத்துக் கொண்டே நடக்கிறாள். உலகில் அன்புக்கு இத்தனை பஞ்சமா..? ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு எப்படி அன்பைப் பரிமாறிக் கொள்வது. முத்தம், கட்டிப்பிடித்தல் என எல்லாமே தொடுதலில் தானே இருக்கிறது. ஆனால் இதை எல்லாமே காமத்தின் வெளிப்பாடாகத் தானே நாம் பார்த்திருக்கிறோம். என நினைத்து வெட்கப்படுகிறார். ஆழ்ந்து யோசிக்கிறார்.

இது தான் நான்

அடுத்த நாள் தன் 500 டாலர் பணம் செலுத்தி Cuddle Up To Me நிறுவனத்தை பதிவு செய்கிறார். அன்புக்கு விலை கிடையாது. ஆனால் என்னை நான் தற்காத்துக் கொள்ள இந்த விலை அவசியம். இலவசங்கள் என் மீதான சமூக மதிப்பிட்டை குறைத்துவிடலாம். ஆக என் அன்பை வெளிப்படுத்த, மற்றவர்களின் அனபிப் பெற ஒரு கடை வைத்து, விலை பேசி அன்பு பரிமாறத் தொடங்கினாள் சமந்தா ஹெஸ்.

விளம்பரம்

"நீங்கள் உங்களை உணர வேண்டுமா. அழைப்பீர்" "மனித ஸ்பரிசத்தில் நனைய வேண்டுமா.. அணுகுவீர்" என பல துண்டு பிரசூரங்களை வெளியிடுகிறார். அடுத்த வார இறுதிக்குள் 10,000 மெயில்கள். இந்த 10,000 பேர்ல ஒழுங்கான ஆட்களைத் தேடி புக் பண்ணிப் பாத்தா அடுத்த 60 நாளுக்கு ஓவர் நைட் எல்லாம் ஷிப்ட் போட்டு வேலை பாக்கணும். அதாவது கட்டிப் பிடிச்சிக்கிட்டே இருக்கணும்.

பிரச்னைகள்

புதிய ஐடியாக்கள் எப்போதுமே எளிதில் ஏற்கப்படுவதில்லை தானே. ஆக அமெரிக்காவின் போர்ட்லேண்ட் காவல்துறை "விபச்சாரத்துக்கு இப்படி ஒரு பெரியரில் நடத்துகிறார்கள்" என ஆள் வைத்து விசாரித்தது. "எப்போ வரலாம். ஒன்லி கட்டிப் பிடி மட்டும் தானா..? வேற எதுவும் இல்லையா..? போன்ற தரங்கெட்ட வார்த்தைகளை வேறு எப்போதும் எதிர் கொண்டாள் சமந்தா. இதை எல்லாம் தாண்டி கல்யாண ப்ரொபோசல்கள் வேறு.

இடம்

இப்படி பல பிரச்னைகளைத் தாண்டி ஒரு நல்ல அலுவலக இடத்தை தேர்ந்தெடுக்க, அதுவும் கட்டிப் பிடி தொழில் செய்ய முழுதாக 9 மாதங்கள் அலைந்தாள். ஒருவழியாக தொழிலை ஒழுங்காக செய்யத் தொடங்கினாள். ஒரு மணி நேரத்துக்கு 40 டாலர் என கட்டிப் பிடித்து அன்பைப் பரிமாறினாள்.

காமம்

சமந்தாவுக்கு, அந்த வயதான பாட்டியைக் கட்டிப் பிடிக்கும் போது கிடைத்த அன்பு மிகுதியான ஒரு மன நிலை வெகு சில ஆண் அல்லது பெண்களோடு மட்டும் தான் கிடைத்தது. இதை மாற்ற இன்னும் பிசினஸில் சில மாற்றங்களை கொண்டு வந்தாள்

கன்சல்டிங்

"மணி 11.30, சரிப்பா நீ வா, கட்டிப் பிடி... ஆ 12.30 நீ கெளம்புயா.. உங்க பேர் என்ன விக்னேஷ் சி செல்வராஜ் வாங்க வந்து கட்டிப்பிடிங்க... மணி 01.30 கெளம்புங்க... அடுத்த நீங்க வாங்க" என இயந்திரத் தனமாக கட்டிப் பிடிப்பதற்கு பதில் பேசிப்புரிய வைக்க ஒரு தனி நேரத்தை ஒதுக்கினாள். ஆக ஒரு மணி நேர கட்டிப் பிடி வைத்தியத்துக்கு 30 நிமிட கன்சல்டிங்.

பலன் பிரமாதம்

கன்சல்டிங் போதே, தனி மனித ஒழுக்கத்தையும், எல்லைகளையும் தெளிவாக சொல்ல முடிந்தது. Cuddle தெரபிஸ்டுகளின் எந்த உடல் பாகங்களைத் தொடலாம். என்ன பேசலாம். ஏன் வீடியோ ரெகார்டிங் செய்கிறோம். இந்த தெரபியினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்ன நடக்கும் என அனைத்தையும் விளக்கினாள். ஆக இப்போது வரும் நபர்களில் 70 - 75 சதவிகிதத்தினரிடம் அந்த பாட்டியின் அன்பை உணர்ந்தாள் சமந்தா.

கடைசி கட்டிப் பிடி

வருபவர்களும் சமந்தாவின் அன்புக்குப் பரிசாக... கட்டிலை விட்டு எழுந்து நின்று கண்ணீரோடோ, முகத்தில் நிறைந்த புன்னகையோடோ, வெடித்து அழும் அந்த நிறைவிலோ... ஆழமாக ஒரு முறை கட்டிப் பிடித்துவிட்டோ, அந்த கிழவிக்கு சமந்தா கொடுத்தது போல நெற்றியில் ஒரு முத்தத்தையோ பதித்துவிட்டுச் சென்றனர். கஸ்டமர் ரிவ்யூ புத்தகங்களை வைக்காமலேயே வாடிக்கையாளர்களின் அன்பை மனதில் வாங்கினாள். இப்போது ஒரு மணி நேர கட்டிப் பிடி வைத்தியத்துக்கு 60 டாலர்.

அதையும் தாண்டி

இத்தனை பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கும் போதும் சிலருக்கு காமம் தலை தூக்குவது இயல்பாகவே இருந்தது. அந்த நேரங்களில் இருவரும் ஒரு சின்ன இடைவெளி எடுத்துக் கொள்வது, வேறு சில பொசிஷன்களில் (கட்டிப் பிடிக்க 70 பொசிஷன்களை வைத்திருக்கிறார்கள்) கட்டிப் பிடித்துக் கொள்வது என வந்த வாடிக்கையளர்களின் மனம் நோகாமல் அவர்களை நல்வழிப்படுத்தியும் இருக்கிறாள்.

விரிவாக்கம்

இனியும் ஒற்றை ஆளாக வரும் வாடிக்கையாளர்களை கவனிக்க முடியாது என தன்னைப் போன்ற நிறைய அன்பு கொண்ட ஆண் மற்றும் பெண்களை தேர்வு செய்தாள். நிறைய பயிற்சிக்குப் பின் அவர்களும் சமந்தாவைப் போல அன்பை பரிமாறப் பழகினர். இப்போது ஆறு கட்டிப் பிடி அறைகள் உடன் Cuddle up to me விரிவடைந்திருக்கிறது.

வாடிக்கையாளர் கதை

டெர்பி, 24 வயது பெண். தன் வாழ்கையில் அதிக வெறுமையை உணர்ந்த இவள், அதிலிருந்து விடுபட சமந்தாவிடம் வந்திருக்கிறாள். சில முறை வந்த பின், டெர்பி மனம் திறந்திருக்கிறாள். "இனி மனிதர்களோடு அதிக நெருக்கமாக வாழ விரும்புகிறேன்" என்கிறாள்.

பாலின் எண்ணம்

பால், சுமார் 32 வயது ஆண். இவர் இந்த Cuddle தெரபிக்கு வந்த உடன் கட்டிப் பிடித்து ஒரு சில நிமிடங்களிலேயே காம உணர்வு மேலிட்டு, Cuddler-ஐ முத்தமிடவும், அவரோடு உறவு கொள்ளவும் தோன்றியதாக வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் என்னுடைய 6 அல்லது 7-வது முறை நான் இந்த Cuddle தெரபிக்கு வந்த போது முழுமையான ஒரு மணி நேரத்தில் எனக்கு காம உணர்வே இல்லை. அதையும் தான்டி என்னால் காமம் அற்ற அன்பை உணர முடிந்தது. அதை பால் "I felt that platonic love, with in me" என்கிறார்.

நீங்களும் வாங்களேன்

தன்னைப் போன்ற Cuddler ஆக விரும்பினால் ஆன்லைனில் 300 டாலர் கட்டணம் செலுத்தி பாடங்களைப் படித்துத் தேற வேண்டும். நேரடியாக வந்து பாடம் படிக்க ஒரு நபருக்கு 3200 டாலர். அதன் பின் 250 மணி நேர கட்டிப் பிடித்தல் அவ்வளவு தான் நீங்களும் ஒரு Professional Cuddler.

மீடியா

சமந்தா ஹெஸ்-ன் இந்த பிசினஸை அமெரிக்காஸ் காட் டேலண்ட் தொடங்கி உள்ளூர் பத்திரிகைகள் வரை பலரும் பேட்டி கண்டிருக்கிறார்கள். எல்லா பேட்டிகளிலும் சமந்தா ஒரு பிசினஸ் பெண்ணாக கம்பீரப் பேட்டி கொடுப்பதற்கு பதில்... அன்பில் உயர்ந்த மனிதனாகவே பேட்டி கொடுக்கிறார். பேட்டியாளரையும் அன்போடு 45 நொடிகள் கட்டி அணைக்கிறார்.

வருமானம்

கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் 90,000 டாலர் வரை சம்பாதித்திருக்கிறார். அதை விட ஸ்டார்ட் அப்களில் பெரிய விஷயம் ஐந்து ஆண்டுகளாக பிசினஸ் செய்வது தான். அந்த மைல்கல்லையும் எட்டி இருக்கிறார். ஆனால் ஒரு பெரிய தவறை சமந்தா செய்திருக்கிறார். முதலீடுகள்.

இன்வெஸ்ட்மெண்ட்

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நிறுவும் போது 40,000 டாலரை ஒரு நபரிடம் இருந்து வாங்கினார். இப்போது இந்த நிறுவனத்தின் மொத்த லாபத்தில் ஆண்டுக்கு 40% அந்த முதலீட்டாளருக்குச் சென்றுவிடுகிறதாம். இந்த தவறு நடக்கும் எனக் கணைக்கவில்லை, சொல்லப் போனால் இந்த பிசினஸ் இவ்வளவு வெற்றிகரமாக ஓடும் என்பது கூட எனக்குத் தெரியாது என்று மீண்டும் அந்த டிரேட் மார்க் ஸ்மைலை உதிர்க்கிறார்.

சொல்ல மறந்துட்டோம்

அட, இப்போது நம் சமந்தா ஹெஸ்-க்கு ஒரு புதிய பாய் ப்ரெண்ட் கிடைத்திருக்கிறாராம். அவரும் சமந்தாவின் Cuddle தெரபிக்கு ஓகே சொல்லி காதலிக்கிறாராம். மாப்பிள்ளை கோவப்படும் போது எல்லாம் சமந்தா கட்டிப் பிடித்தே கரெக்ட் செய்து விடுகிறாராம்.

காசு பணம் பிசினஸ் எல்லாம் ஒரு பக்கம் இருக்க... ஒரு உலகத் தலைவர் போல "அன்பில் நனைந்த கரங்களோடு, ஒரணைப்பில் இவ் உலகை மாற்றுவோம்" என்கிறார் இந்த வைத்தியக்காரி. சுருக்கமாக "சமந்தா ஹெஸ், அமெரிக்காவின் அமிர்தானந்தமயி".

பின் குறிப்பு: அன்போடு தினமும் கட்டிப் பிடித்தால், ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு எல்லாம் குறையும் என சம்ஸாரக் கடல் சன்னி லியோன் சொல்லி இருக்கிறார்.

 

English Summary

Cuddle Up To Me charge 80 dollars to hug a girl for 60 minutes
Advertisement