நாங்க பண்ணது தப்பு தாங்க” ஒப்புக் கொண்ட சீனா, Artificial Intelligence-ஆல் ஏற்பட்ட விபரீதம்..?

Gree Electric Appliances Inc. இந்த நிறுவனத்தை இந்தியர்களோ, ஆண்டி இந்தியர்களான தமிழர்களோ கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் இவர்கள் தாய் நாடு சீனா. இவர்கள் தான் உலகிலேயே குடியிருப்புகளுக்கான ஏசி இயந்திரங்களைத் தயாரிக்கும் நம்பர் 1 நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகள் படி 2015-ம் ஆண்டின் நிகர லாபம் 12,200 கோடி ரூபாய். இந்த அம்மா தான் Artificial Intelligence கேமராக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்னை ஆனது.

Advertisement

Dong Mingzhu

டாங் மிங்சூ, இந்த அம்மா தான் க்ரீ எலெக்ட்ரிக் அப்லையன்சஸ் நிறுவனத்தின் தலைவர். இவர் கால் படும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது என்று ஓப்பனாக ஒரு டிவிக்கு, க்ரீ நிறுவனத்தின் போட்டியாளர்கள் பேட்டி கொடுத்தார்கள். அந்த அளவுக்கு இரும்பு மனிஷி. எடுத்த காரியத்தை எதிர்கள் எட்ட இயலாத தூரத்துக்கு கொண்டு சென்று வெற்றியை சுவைக்கு கார்ப்பரேட் சூத்திரதாரி. உலக பொருளாதார அமைப்புகளுக்கு (World Economic Forum) பாடம் எடுக்கும் கார்ப்பரேட் குரு.

Advertisement
சிங்கிள் பேரன்ட்

1984-ல் டாங்கின் கணவர் இறந்துவிட, இவர் மட்டுமே வேலை பார்த்து இவர் மகனை வளர்க்க வேண்டி இருந்தது. அன்று முதல் இன்று வரை மறுமணம் செய்து கொள்ளவில்லை. கணவர் இறந்து வேலைக்கு போகும் போது இவருக்கு கார்ப்பரேட் என்றால் என்ன என்று கூட தெரியாதவர் தான் இன்று உலகின் நம்பர் ஏசி நிறுவனத்தின் தலைவராக வளம் வருகிறார்.

நோ லீவ்

இவருடைய 26 வருட கார்ப்பரேட் வாழ்கையில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. அந்த அளவுக்கு கறாரான தலைவர். ஒரு மிடில் க்ளாஸ் சிங்கிள் பேரன்டாக இருந்து, மாத சம்பளம் வாங்கி வளர்ந்து இன்று ஏசி உலகை ஆள்பவர். இவரைத் தான் சீனாவின் நிங்போ போக்குவரத்துக் காவல் துறை ஒரண்டைக்கு இழுத்திருக்கிறது.

பிரச்னை

சீனாவில் சாலை போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) படைத்த கேமராக்களைப் பொருத்தி இருக்கிறார்கள். இந்த கேமரா சாலை விதிகளை மீறும் நபர்களையும், அவரது விவரங்களையும் குறிப்பிட்டு "இவங்க எல்லாம் இன்னக்கி சாலை விதிகளை மீறி இருக்காங்க" என நடு ரோட்டில் இருக்கும் பெரிய டிவியில் போட்டு அவமானப்படுத்தும்.

இதுவரை

இந்த AI கேமராக்களின் உதவியோடு 7800 சாலை விதி மீறல் வழக்குகளையும், 14000 பேரை சாலை விதி மீறியதற்காக பெரிய டிவியில் போட்டு அசிங்கப்படுத்தியும் இருக்கிறது. இது வெறும் கடந்த 10 மாதத்துக்கு ஒரு சந்திப்பில் மட்டும் நடந்த கணக்கு. அப்போ மொத்த சீனாவில்..?

டாங் அம்மா

இந்த அம்மா தன் நிறுவனத்துக்காக வெளியிட்ட ஒரு விளம்பரத்தை பேருந்துகளில் ஒட்டி இருந்தார்கள். அந்த விளம்பரத்தில் டாங்கின் படமும் பெரிதாக இருந்தது. பேருந்தில் ஒட்டப்பட்ட புகைப்படம் உண்மையாகவே டாங் என நினைத்து அவர் பெயரைக் குறிப்பிட்டு "இந்த அம்மா இன்னக்கி சாலை விதிய மதிக்கல" என நிங்போ நகரத்தில் பெரிய டிவியில் போட்டு அவமானப்படுத்தியது அந்த உணர்வில்லாத AI கேமராக்கள்.

பற்றி எரிந்த மீடியா

சீன ட்விட்டரான வெய்போவில் இந்த விஷயத்தைப் பற்றி தீ பிடிக்க ஆரம்பித்தது. "Who is that person clinging onto the bus? Serious warning!" joked one. "It means the system works - it won't let go of any face," இப்படியாக சீனத்தையே இந்த நிங்போ நகர போக்குவரத்துக் காவல் துறை திரும்பிப் பார்க்க வைத்தது.

மன்னிப்பு

நடந்த தவறை உணர்ந்த நிங்போ போக்குவரத்துக் காவல் துறை உடனடியாக டாங்கை பற்றி பெரிய டிவியில் வரும் விவரங்களை டெலிட் செய்தது. அதோடு "டாங் அவர்களை அவமானப்படுத்தியது தவறு தான். அதற்கு காவல் துறை பகிரங்க மன்னிப்பு கேட்கிறது. எங்கள் Artificial Intelligence கேமராக்கள் செய்த தவறு மீண்டும் நடக்காத வாறு தொழில்நுட்பத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். டாங் அவர்களுக்கு ஏற்பட்ட தவறு இனி எந்த சீனருக்கும் ஏற்படாது" என மன்னிப்பு கேட்டிருக்கிறது.

க்ரீ எலெக்ட்ரிக்

இதை பாசிட்டிவ்வாக பார்த்த டாங் அம்மா "நிங்போ நகர போக்குவரத்து காவல் துறையின் கடின உழைப்பை பாராட்டுகிறோம். சீனர்களை சாலை விதிகளை மதிக்கும் படி சொல்லும் அந்த நல்லெண்ணத்துக்கு நன்றி கூறுகிறோம்" என ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்கள்.

தப்பித்த போலீஸ்

நல்ல வேளை இந்த டாங் அம்மா கோர்ட், கேஸ் என்று போகவில்லை என பெரு மூச்சு விட்டிருக்கிறது நிங்போ போக்குவரத்து காவல்துறை. பெற்ற மகனை விட வேலை தான் முக்கியம் என பக்கா கார்ப்பரேட் மூலை கொண்ட டாங் அம்மா வழக்கு தொடுத்திருந்தால் பலரின் வேலைக்கு உலை வைத்திருக்கும் எனவும் சீனாவில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எப்படியோ காலில் விழாத குறையாக வார்தைகளில் மண்டியிட்டு பிரச்னைகளைத் தவிர்த்துக் கொண்டது சீன அரசு

அதிகரித்த AI

Artificial Intelligence, IHS Markit என்கிற நிறுவனத்தின் கணிப்புகள் படி சீனாவில் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் AI கேமராக்களின் எண்ணிக்கை 170 மில்லியனில் இருந்து 450 மில்லியனாக வரும் 2020-ம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் என கணித்திருக்கிறது.

Artificial Intelligence

சமீபத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு பெரிய வேலையையும் சீனா தான் செய்தது. ஒரு AI ரோபோவை செய்தி வாசிப்பாளராக அமர வைத்து லைவ் போனதும் சீனாவின் சின்ஹுவா (Xinhua) என்கிற செய்தி நிறுவனம் தான்.

எலான் மஸ்க்

இன்னும் இப்படி Artificial Intelligence காரணத்தால் என்ன என்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறதோ தெரியவில்லை. "AI ரோபோக்களை உருவாக்குவது, சங்கை ஊதி சாத்தானை எழுப்புவதற்கு சமம்" என டெஸ்லா நிறுவனத்தின் எலென் மஸ்க் சொன்னது உண்மை தானோ..?

English Summary

due to Artificial Intelligence mistake a case filed on a business tycoon
Advertisement