கொரோனாவுக்கு பிறகு உலகில் மிகப்பெரிய தொற்று பாதிப்பாக உருவெடுத்திருக்கிறது எபோலா. காங்கோ நாட்டில் இதுவரையில் எபோலா வைரஸ் தொற்று மூலம் 600 பேர் மரணம் அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது, இதில் அச்சத்திற்குரிய விஷயம் என்னவென்றால் WHO 3 நாட்களுக்கு முன்பு தான் 500 பேர மரணம் அடைந்தாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இந்த நிலையில் வெறும் 3 நாட்களில் 100 பேர் மரணம் அடைந்து மொத்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது, தற்போது காங்கோ நாட்டில் மட்டும் தொற்று பாதிப்பு கொண்டோரின் எண்ணிக்கை 1759 ஆக அதிகரித்துள்ளது.
காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பெரும் தொற்றாக மாறியது என மே மாதத்தின் மத்தியில் தெரிவித்தது, இந்த தொற்று பாதிப்பு அண்டை நாடான உகாண்டாவிலும் பரவியது, ஆனால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே பாதிவாகியுள்ளது. இதுவரையில் உகாண்டா நாட்டில் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டு 17 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
காங்கோ நாட்டில் நாட்டில் இதுவரையில் எபோலா வைரஸ் தொற்றில் இருந்து 285 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர், இதேவேளையில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 600 ஆக இருக்கும் காரணத்தால் fatality rate 34 சதவீதமாக உள்ளது. காங்கோவில் அதிகப்படியான பாதிப்பு வடகிழக்கு பகுதியல் கண்டறியப்பட்டு உள்ளது.
மேலும் அந்நாட்டில் பரவி வரும் வைரஸ் அரிய வகையான எபோலா வைரஸான Bundibugyo வகையை சேர்ந்தது, இதற்கு இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை இல்லாத காரணத்தால் அதிகப்படியான மக்கள் இதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல நாட்கள் ஆய்வுக்கு பின்பு ஜூலை 2ஆம் தேதி 2 வகையிலான சிகிச்சை முறையை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
More Articles
- ஆப்பிரிக்காவில் 5G புரட்சி: களமிறங்கியது அம்பானி-யின் ரிலையன்ஸ் ஜியோ..!!
- சீனாவின் கடன் வலையில் சிக்கி தவிக்கும் நாடுகள்.. அதிக கடன் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?
- ஆப்பிரிக்காவில் அறிமுகமாகும் UPI.. இனி எல்லாமே ஆன்லைன் பேமெண்ட் தான்..!
- ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- இந்தியாவின் UPI இனி துபாயில்.. வாவ் செம..!
- ஆப்பிரிக்காவில் 8.43 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் சீனா.. இந்தியாவுக்கு பாதிப்பா..?!