இயற்கை எரிவாயு முதல் கோழி இறைச்சி வரை.. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த சீனா!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களுக்கு இறக்குமதி விதிக்கச் சீனா முடிவு செய்திருப்பது, உலகச் சரக்கு வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 6 ஆம் தேதி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்குக் கூடுதல் வரிவிகித்த டிரம்ப் அரசு, 16 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரியை அதிகரித்து விதிக்க முடிவு செய்துள்ளது

தகிக்கும் எரிவாயு சந்தை

இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது கைவைக்கத் திட்டமிட்டுள்ள சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் திரவ இறக்கை எரிவாயுவுக்கு 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. 2016 எண்ணெய் ஏற்றுமதியில் அமெரிக்க எரிவாயு உற்பத்தி சந்தை அபரிமிதமான லாபத்தை ஈட்டியிருந்த நிலையில், தற்போதைய சீனாவின் வரி விதிப்பு நெருக்கடியில் சிக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரியில் தப்பாத தாமிரம்

அமெரிக்காவிலிருந்து காப்பர் உள்ளிட்ட அமெரிக்க உலோகப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியை விதிக்கச் சீனா முடிவு செய்துள்ளது என்றாலும், இது அமெரிக்கப் பொருளாதாரச் சந்தையில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் தாமிர இறக்குமதியில் கடந்த ஆண்டு 70 ஆயிரம் டன் சீனா இறக்குமதி செய்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

காயப்போகும் சோயா பீன்ஸ்

வேளாண் பொருட்கள் உற்பத்தியில் ஏற்கனவே சரிவைச் சந்தித்து வரும் அமெரிக்காவுக்கு, சீனாவின் சமீபத்திய அறிவிப்புப் பொருளாதாரக் கவலையை உருவாக்கியுள்ளது. கோழி இறைச்சி, காட்டன், சோயா பீன்ஸ் உள்ளிட்டவதற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான சோயா பீன்ஸ் ஏற்றுமதி வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உரத்தில் பாதிப்பு இல்லை

பொட்டாஷ் உரங்கள் மீதான வரிவிதிப்பு அமெரிக்காவைப் பாதிக்காது என்று தெரிவித்துள்ள வர்த்தக ஆய்வாளர்கள், உரங்கள் அனைத்தும் கனடாவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாவதாகக் கூறினர்.

வரி விழுந்த மரச்சாமான்

வர்த்தக மோதல் காரணமாக மரச்சாமான்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்குப் பெரிய அடி விழுந்துள்ளது.ஏனென்றால் அதிக அளவிலான மரச்சாமான்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாகச் சர்வதேச ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

வரிக்குள் சிக்கிய சூரிய சக்தி

சீனா அமெரிக்காவிடமிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் சூரிய சக்தி மின்கலன்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தித் திறனை கருத்தில் கொண்டு பாலி சிலிக்கான் மீது வரி விதிக்கும் முடிவைச் சீனா கைவிட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு 52 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்க்கு விலக்கு

வரி விதிக்கும் பட்டியலில் இருந்து அமெரிக்காவின் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களுக்குச் சீனா விலக்கு அளித்துள்ளது. இருப்பினும் சுங்க வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

From natural Gas To Chicken Breasts China Retaliated To US In Trade War