பாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..!

சீன வங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் பாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானதால் அதனைக் கலைக்க வேண்டும் அல்லது தண்டனையை ஏற்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அந்த வங்கி நிர்வாகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முன்கூடியே தாங்கள் வேலை செய்யும் பாஸிடன் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற்ற பிறகே கற்பமாக வேண்டுமாம்.

Advertisement

கருக்கலைப்பு மற்றும் அபராதம்

இந்த விதியை ஏற்காத பெண் ஊழியர்களை அழைத்து அவர்களைக் கருக்கலைப்பு செய் அல்லது அபராதம் செலுத்து என்று அந்த வங்கி நிர்வாகம் மோசமாக நடந்துகொண்டது ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது.

எதிர்பாராமல் நடந்துவிட்டது?

இப்படி அனுமதி இல்லாமல் கற்பமாகி சிக்கிய பெண் வங்கி ஊழியர் தான் எதிர்பாராமல் நிறுனத்தில் இருந்து அனுமதி பெறாமல் கற்பமாகிவிட்டதாவும் அதனால் நிறுவன அளிக்கும் அபராதத்தினை ஏற்க உள்ளதாகவும் கூறுகிறார்.

தொடர்கதை

மேலும் இவருக்கு முன்பு இதே போன்று அந்த வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் கற்பமாகி அபராதங்களைச் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் என்ன தண்டனை என்று கூறவில்லை, பெரும்பாலும் அது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

சீன ஊழியர்கள் விதிமுறைகள்

சீனாவின் நிறுவன சட்டங்களின் படி வேலை செய்யும் பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. நிறுவனங்கள் சம்பளம் ஏதும் பிடித்தம் செய்யக் கூடாது. விடுமுறை அளிக்க வேண்டும். ஆனால் சீனாஇல் நடைபெற்ற சர்வேயில் 33 சதவீத பெண்களுக்குச் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது என்று கூறுகிறது.

விதியை நீக்க ஒப்புதல்

இந்தச் செய்தி சமுக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரவ உடனே அந்த வங்கி நிர்வாகம் அந்த விதியை நீக்க ஒப்புக்கொண்டுள்ளது.

English Summary

Get approval for pregnancy or abort: Chinese bank to female staff
Advertisement