குழந்தையின்மையால் சரிந்த ஜப்பான் கதை தெரியுமா..? குழந்தைகள் இல்லைன்னா பொருளாதாரம் என்ன ஆகும்?

ஒரு கருத்தை தீவிரமாக பின்பற்ருபவர்களை தீவிரவாதிகள் எனச் சொல்வோம். ஆனால் கருத்தே ரொம்பத் தீவிரமானதாக இருந்தால்..?

Advertisement

அப்படிப்பட்ட கருத்தைத்தான் ஒரு சிறு குழுவினர் உலகத்துக்கு உரக்கப் பேசி வருகிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்ளாதீர்கள் "Stop Making Babies" என்பது தான் அந்த இயக்கத்தின் பெயர். அவர்கள் இயக்கத்தின் பெயர் தான் அவர்கள் கருத்து கூட.

Advertisement

ஆம். சமீபத்தில் ரஃபேல் சாமுவேல் என்கிற 27 வயது இளைஞர் தன் பெற்றோர்கள் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகச் சொன்னார். "என்னைக் கேட்காமல் என் பெற்றோர்கள் என்னை எப்படி பெற்றுக் கொள்ளலாம்..?" என்கிற கொஞ்சம் விதண்டாவாதமான கேள்வியை எழுப்பித் தான் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறார்..?

அது தான் இந்த அமைப்பு

மேலே ரஃபேல் சாமுவேல் கடுமையாக தன் பெறோர்களைப் பார்த்துக் கேட்கப் போவதைத் தான் இந்த Stop Making Babies அமைப்பினர், பெற்றோர்களையும், இந்த சமூகக் கட்டமைப்புகளையும் பார்த்துக் கேட்கிறார்கள். சொல்லப் போனால் இந்தியாவிலேயே Stop Making Babies அமைப்பு தான் குழந்தை பெறுதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கு முறையான முதல் அமைப்பாம்.

சாமுவேல் தலைமை

பெற்றோர்கள் மீது வழக்கு தொடுக்க இருக்கிறேன் என்கிற ரஃபேல் சாமுவேல் தான் இந்த அமைப்பின் நிர்வாகியாம். இதை ஒரு சமூக இயக்கமாகத் இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பார்க்கிறார்களாம். இப்போதைக்கு கிறுக்குத்தனமாகத் தோன்றும் இந்த யோசனையை ஆதரித்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே மக்கள் ஆதரிக்கிறார்களாம். ஆனால் இனி வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை மடங்குகளில் கூடும் என்கிறார் சாமுவேல்.

பெங்களூரில்

சென்ற வாரம் பெங்களூரில் நடந்த Stop Making Babies அமைப்பினரின் கூட்டத்தில் பேசிய பலரும் தங்கள் கருத்துக்களை மிக அழுத்தமாக ஆராய்ந்து முன் வைத்திருக்கிறார்கள். குழந்தை இருந்தால் தான் சமூகம் ஒரு கணவன் மற்றும் மனைவியை மதிக்கிறது, ஏன்..? குழந்தை இல்லை என்றால் நம்மால் வேலையில் எத்தனை சிறப்பாக செயல்பட முடியும்..? பொருளாதார ரீதியாக ஒரு குழந்தைக்கு எத்தனை விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது..? என ஆளுக்கு ஒரு தலைப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.

மொஹ்சின் நைக்வாடி

Mohsin Naikwadi ஒரு இன்ஷூரன்ஸ் ஆலோசகராக இருக்கிறார். தன் அளவில் நல்ல வாழ்கையை வாழ்ந்து வருகிறார். "இன்றைய வாழ்கை ஒரு பிரச்னைக்குரிய போரடிக்கக் கூடிய சுழற்சிகளாகத்தான் இருக்கிறது. இதில் வேதனைகள், எதார்த்தமான கஷ்டங்கள் தான் அதிகமாக இருக்கிறது. இதை எல்லாம் தெரிந்து கொண்டு, இத்தனை மோசமான உலகத்துக்கு அந்தக் குழந்தையின் அனுமதி இல்லாமல், அவர்களை இந்த உலகுக்கு கொண்டு வருவது, மிகப் பெரிய சமூகத் தவறு. அதனால் தான் நான் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை" என்கிறார்.

எதார்த்தம்

இந்த கூட்டத்தில் குழந்தை பெறுவதை எதிர்க்கிறார்களே ஒழிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால் ஆதரிக்கிறார்கள். அதுவும் உணர்வுப் பூர்வமாக இல்லை. எதார்த்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு ஆதரிக்கிறார்கள். ஒரு சில ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்வது, முழு பெற்றோர்களாக ஒரு குழந்தையை வளர்க்காமல், ஒரு குழந்தையின் பாதுகாவலன் அளவில் பாசம் காட்டி அவர்களை வழி நடத்துவது வளர்ப்பதை ஆதரிக்கிறார்கள்.

அவள் பேச்சு..?

"இன்று ஒரு குழந்தை பிறந்த அடுத்த நாளில் இருந்து பள்ளிக் கூடம் எனும் சிறைச்சாலைக்கு அனுப்பி, அவனை முதல் ரேங்க் எடுக்கச் சொல்லி விரட்டி, லட்சக் கணக்கில் செலவழித்து பொறியியல் அல்லது மருத்துவ படிப்புகளைப் படிக்கச் சொல்லி, மீண்டும் கோடி கணக்கில் சம்பாதிக்கச் சொல்வது என அந்தக்குழந்தையின் வாழ்கையை வாழ விடாமல் விரட்டிக் கொண்டிருக்க நான் ஏன் அந்தக் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்..?" என்கிறார் ஒரு பெண்.

வலேரியன் கருத்து

பெங்களூரைச் சேர்ந்த வலேரியன் என்பவர் தனியார் நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றுகிறார் A child is equal to three saturns என்றே தொடங்குகிறார். கொஞ்சம் கடுமையான விமர்சனம் தான். அந்த சனி இல்லை என்றால் தங்கள் வாழ்கை சொர்கமாக இருக்கிறதோ இல்லையோ மேற்கொண்டு நரகமாகாது என ஆணித்தரமாக நம்புகிறார். "ஒரு குழந்தையை பெற்று வலர்த்து நல்ல மனிதராக இந்த சமூகத்தில் கொண்டு வர குறைந்தது 20 வருடங்கள் ஆகும். ஒரு பெண்ணின் வாழ்கையில் ஒரு குழந்தை வந்துவிட்டால் அந்தக் குழந்தைக்காக ஒரு பெண்ணின் முழு நேரத்தையும் ஒதுக்க வேண்டும். அந்தக் குழந்தையைத் தாண்டி எந்த ஒரு வேலையையும் முழுமையாக செய்ய முடியாது. அதனால் தான் என் மனைவியின் கெரியரை கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்கிறார்.

பல்லவி கருத்து

வெலரியனின் மனைவி பல்லவி ஒரு வன விலங்கு பாதுகாவலராக இருக்கிறார் "என் கணவர் சொன்னது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் நம் வாழ்கையை ஒரு பாதுகாப்பான வளையத்துக்குள்ளேயே வாழ வேண்டி இருக்கும். ஒரு நல்ல நிரந்தர வருமானம் தேவை, சமூக அந்தஸ்துகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், ஒரு நல்ல வீடு வேண்டும் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இப்படி வாழத் தேவையான எல்லாவற்றையும் தேடிக் கொண்டே வாழ மறந்து விடுகிறோம். இருக்கும் ஒரு வாழ்கையைக் கூட வாழவில்லை என்றால் பிறகு எதற்கு இந்த வாழ்கை" என வெறுப்படைகிறார் பல்லவி. அதற்காகத் தான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லையாம்.

இது என்ன முட்டாள் தனம்

ஆராய்ச்சிப் படிப்புகளில் மூழ்கி இருக்கும் சாந்தினி பாம்பானி மற்றொரு ஆக்கப் பூர்வமான கருத்தை முன் வைக்கிறார் "சமூகத்தில், குறிப்பாக இந்திய சமூகத்தில் திருமணம் எப்படி ஒரு வலிமையான கட்டமைக்கப்பட்ட சடங்கு போல் இருக்கிறதோ... அப்படி குழந்தைகளை பெற்றெடுப்பதும் ஒரு சடங்கு போலவே இருக்கிறது. இதில் கணவன் மனைவி கருத்துக்களைத் தாண்டி சமூகத்தின் அழுத்தம், பெற்ரோர்களின் அழுத்தம், அவ்வளவு ஏன் நண்பர்களின் அழுத்தம் கூட குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் பெரிய பங்கு வகிக்கிறது. ஆமாம் எனக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லை என தைரியமாக சமூகத்தில் சொல்ல முடியவில்லை. அந்த நிலை மாற வேண்டும்" என்கிறார்

பொருளாதாரக் கணக்கு

குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் அதீத சத்தான உணவுகளை கர்ப காலங்களில் சாப்பிட வேண்டும், மருத்துவமனை செலவுகள், குழந்தை பிறந்த உடன் ஏகப்பட்ட உடல் உழைப்பு, குழந்தைகளுக்கான பால் உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், டயாப்பர்கள், தோலில் குழந்தைகளை எடுத்துச் செல்லும் பைகள், கார்களில் குழந்தைகளை உட்கார வைக்க ஸ்டாண்டுகள் என குழந்தைகளுக்கு தனி சூப்பர் மார்கெட்டுகளே இருக்கின்றன. அத்தனை செலவுகளை இன்று செய்து என் குழந்தையை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என காட்ட வேண்டி இருக்கிறது.

தேவை தானா..?

இப்படி நாம் நினைத்த வாழ்கையையும் வாழ முடியாமல், குழந்தைக்கு தேவையானவைகளையும் முழுமையாக தர முடியாமல் தடுமாறி வாழும் வாழ்கை தேவை தானா..? இப்படி சமூக கட்டமைப்புகளின் அழுத்தம், பொருளாதார அழுத்தத்தில் வாழ்வதற்கு பதிலாக நிம்மதியாக குழந்தையகளைப் பெற்றுக் கொள்ளாமல் ஜாலியாக வாழலாமே..? என நம்மிடமே மடைமாற்றுகிறார்கள். Stop making babies அமைப்பினர். குழந்தைகளை பெற்றுக் கொள்ளாத தம்பதிகளை கண்களாலேயே கொடுமைப்படுத்தும் அதே இந்திய சமூகத்தில் இப்படி ஒரு முற்போக்கு பேச்சு வந்ததை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை ஜப்பானைப் போன்று இந்திய சந்ததிகள் அழிந்து விடும் என பயப்படுவதா..? மக்கள் தொகையினால் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளை பார்பப்தா..? எனத் தெரியவில்லை.

பொருளாதாரப் பிரச்னைகள்..?

ஒரு நாட்டின் பொருளாதாரப் பிரச்னைக்கும் மக்கள் தொகைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாட்டில் போதுமான மக்கள் தொகை இருந்தால் தான் அந்நாட்டில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு அர்த்தம் இருக்கும். ஒரு நாட்டில் போதுமான மக்கள் தொகை இருந்தால் தான் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறைந்தவிலைக்கு உள்நாட்டிலேயே கிடைக்கும், இல்லை என்றால் முழுக்க முழுக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகவே இருக்க வேண்டி இருக்கும். சரி இதற்கு ஜப்பான் பிரச்னையை விளக்கினால் சரியாக இருக்கும்.

சமீபத்திய அறிவிப்பு

இரண்டாம் உலகப் போரில் அணு குண்டு வாங்கிய நாடு, பூகம்பங்களின் தாய் பூமி ஆனால் உலகின் டாப் பொருளாதாரங்களில் ஒன்று. அறிவியல், தொழில்நுட்பங்களிலும் டாப். இவ்வளவு ஏன் தக்குநூண்டு ஜப்பான் உலகின் வளர்ந்த ஜி8 நாடுகளில் ஒன்று. ஆனால் இன்று வெளிநாட்டில் இருந்து பணியாட்களை வேலைக்கு அமர்த்த japan அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை வேறு எந்த நாடுகளை விடவும் வேகமாக சரிந்து வருகிறது.

ஜப்பானிய முகம்

ஜப்பானுக்கு எப்படி ஒரு சர்வதேச தொழில் முகம் இருக்கிறதோ அதே போல், அங்கு பார்ன் தொழில்களுக்கு என்று ஒரு சர்வதேச முகம் இருக்கிறது. அதே ஜப்பானில் இன்று ஜப்பானிய இளைஞர்களுக்கு மத்தியில் உடல் உறவு கொள்வது ஏதோ ஒரு அந்நியமான செயலாக, வெட்கப்படக் கூடிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.

வேண்டாமே

ano matsui, அனொ மத்ஸுயி, japan, 26 வயது இளைஞர். "நான் முதன் முதலில் ஒரு பெண்ணிடம் பேசி வெளியே அழைத்த போது அவள் மறுத்துவிட்டாள். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அந்த ஒரு விஷயம் என்னைப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. அதனால் எனக்கு பெண்களிடம் பேசுவதற்கான தன் நம்பிக்கை பெரிய அளவில் குறைந்துவிட்டது, அதை மீண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றவில்லை. விட்டு விடுங்களேன்" என பேட்டி எடுப்பவரிடம் கெஞ்சுகிறார்.

நோ நோ தான்

சரி காதல் வாழ்கை மற்றும் திருமண வாழ்கைக்குத் தான் ஜப்பானியர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் வேறு ஒரு புள்ளி விவரம் இனி ஜப்பானியர்கள் இனம் இருக்குமா..? என்கிற கேள்வியை நன் முன் வீசுகிறது. ஜப்பானில் தற்போது 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் இளம் வயது ஆண் பெண்களில் 43 சதவிகிதத்தினர் தங்கள் வாழ் நாளில் ஒரு முறை கூட உடல் உறவு வைத்துக் கொண்டதில்லை என ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

எப்போதும் நோ தான்

ஒரு இளமை வேகத்தில் பொருளாதார ரீதியாக செட்டில் ஆக வேண்டும் என்கிற ஆசையில் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள் என நினைத்தோம். வயதானால் கல்யாணம் செய்து குடும்பம் குட்டிகளை பெற்றெடுப்பார்கள் என நினைத்தால் அதுவும் இல்லையாம். அதே 18 முதல் 35 வயதுக்குள்ளான ஆண் மற்றும் பெண்களிடம் ஏதாவது உறவில் (living to gether, marriage of convenience, love) இருக்கிறீர்களா என்கிற கேள்விக்கும் 64 சதவிகிதத்தினர் நோ சொல்லி இருக்கிறார்கள்.

ஜப்பானிய பெண்கள்

அனா, Anna, 24 வயது japan பெண், கணக்காளராக பணியாற்றுகிறார் "உடல் உறவு என்பது எனக்கு ஒரு தேவை இல்லாத வேலையாகவே தெரிகிறது. எங்கள் கலாச்சாரத்தில் கல்யாணம் செய்து கொண்ட பின் பெண்கள் அத்தனை சுதந்திரமாக இருக்க முடியாது. என்னுடைய விருப்பமான உணவை உண்பது, எனக்கு பிடித்த நேரத்தில் தூங்கி எழுவது கூட நான் திருமணம் செய்து கொண்டால் முடியாதது ஆகிவிடும். இந்த இரண்டு விஷயங்களே என்னை உடல் உறவில் இருந்து என்னை பிரித்து வைக்கிறது அல்லது எனக்கு தேவை இல்லை என்று நினைக்க வைக்கிறது. உண்மையைச் சொன்னால் எனக்கு உடல் உறவு கொள்ள விருப்பமே இல்லை. உடல் உறவு கொண்டே ஆக வேண்டும் என தலை எழுத்தா என்ன" என்கிறார் அனா.

முதியவர்கள்

இப்போது ஜப்பான் முன் முதியவர்களை சமாளிப்பது பெரிய சிக்கலாக இருக்கிறது. முதியவர்கள் உழைக்கும் வயதைக் கடந்துவிட்டார்கள். அப்படி இருப்பவர்களால் இளைஞர்களுக்கு இணையாக உழைக்க முடியாது. அதுவும் ஜப்பானின் வேகத்தைச் சொல்லத் தேவை இல்லை. ஆக ஜப்பானிய தொழில் துறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான இளைஞர்கள் ஜப்பானில் இல்லை. அதனால் தான் ஜப்பான் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து உழைப்பாளிகளை வேலையில் அமர்த்த அந்நாட்டு அரசு சம்மதித்திருக்கிறது.

ஜப்பான் பொருளாதாரம்

இப்படி பொருளாதாரச் சங்கிலிகளில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாத தாலும், சந்ததிகளை வளர்க்காததாலும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது. அதனைத் தொடர்ந்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடைசியில் ஜப்பானிய இனமே கூட காணாமல் போகலாம் என சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் சிலரால் தான் வாழ முடியும். அப்படி ஜப்பானியர்களால் தான் நில நடுக்க பூமிகளில் அசால்டாக ஜப்பானில் வாழ முடியும். இன்று வரை ஜப்பானில் 98% பேர் ஜப்பானியர்கள் தான். ஆனால் அடுத்த ஐம்பது வருடங்களில் ஜப்பான் பொருளாதாரம் சுமார் 30% வெளிநாட்டு இளைஞர்களை நம்பி இருக்கும் என எச்சரிக்கிறது ஐநா சபை.

English Summary

how stop making babies plan affected the japanese economy heavily
Advertisement