அணுகுண்டு போட்டால்தானே தப்பு.. இப்படியும் அடுத்த நாடுகளை ஒடுக்கலாம்.. அமெரிக்காவின் செம மூவ்!

உலக நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைப்பதில் வெற்றி கண்டுள்ள அமெரிக்கா, தாக்குதல் உத்திகளை மாற்றிக் கொள்வதன் மூலம் சட்டாம்பிள்ளைத்தனத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் யுத்தத்தைத் தொடரவும் தயங்குவதில்லை.

உலகப் பொருளாதாரச் சந்தைகள் டாலர்களை வைத்தே தீர்மானிக்கப்படுவதால், உலக நாணய இருப்புகளில் 20 சதவீதம் அமெரிக்க டாலர்களே உள்ளன. நாணய விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1944 ல் கொண்டு வரப்பட்ட பிரட்டன்வுட்ஸ் உடன்படிக்கை இதற்கு உதவி செய்தது.

டாலர் முக்கியத்துவம்

1965 இல் பிரான்சில் நிதியமைச்சராக வால்ரி ஜிஸ்கார்ட் இருந்தபோது அசாதாரணச் சலுகைகளால் டாலர் முக்கியத்துவம் பெற்றது. வர்த்தகம் மற்றும் நிதிப்பற்றாக்குறைகளுக்கு எளிதில் கடன் அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. நிதியிழப்பு ஏற்பட்டபோது உருவான நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றியது.

பொருளாதாரத் தடைகள்

பொருளாரத்தடைகள்தான் அமெரிக்காவின் முக்கியமான ஆற்றலாகக் கருதப்படுகிறது.சர்வதேச அவசர பொருளாதார அதிகாரங்கள் சட்டம் மற்றும் எரிசக்தி சட்டங்கள் மூலம் வர்த்தகத்துக்கு வேட்டு வைக்கிறது. தேசபக்த சட்டம் மூலம் நாட்டின் கட்டண வருவாயை அனுமதிக்கப்படுகிறது ரெட்லைன்ஸ் சட்டம் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் கிரம்ளின் ஊடுருவல் சட்டங்களையும் வைத்துப் பயமுறுத்துகிறது.

நாணய சந்தை சிதைப்பு

உலகளாவிய இண்டர்பேங்க் பைனான்சியல் டெலி கம்யூனிகேஷனின் உலகத் தகவல் நடுவத்தில் இருந்து தரவுகளைப் பெறும் அமெரிக்கா, பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்பாடின்றிக் கண்காணிக்கிறது. நிறுவனங்கள், அரசுகள், அமைப்புகள், ஒட்டுமொத்த நாடு ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. இது நாணயச் சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

வங்கிகளுக்குத் தண்டம்

ஈரான், சூடான் மற்றும் கியூபாவுடன் தொடர்பில் இருந்த பி.என்.பி பரிபாஸ் வங்கிக்கு 9 பில்லியன் டாலரை அபராதமாக விதித்த அமெரிக்கா, டாலரை கையாள ஓராண்டு தடை விதித்தது. இதே குற்றச்சாட்டுக்காக எச்.எஸ்.பி.சி ஹோல்டிங், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, காமர்ஸ் பேங்க் மற்றும் கிளீயர்ஸ்டிரீம் வங்கிகளையும் பழிவாங்கியது.

சிக்கல்

சீனா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தடையிலிருந்து தப்ப முடியவில்லை. அமெரிக்க வங்கிகள் பரிவர்த்தனைகளை மறுத்ததால் இழப்பைச் சந்தித்தன. சீனாவும், ரஷ்யாவும் மாற்று நாணய இருப்பை அதிகரிக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்துமாறு ஐரோப்பாவை கேட்டுக்கொண்டது. ஆனால் அதை உடனடியாகச் செய்யக் கடினமாக இருந்தது.

டாலர் மதிப்புக்குக் காரணிகள்

யூரோ, யென், யான் மற்றும ரூபே ஆகிய நாணயங்கள் உலகச்சந்தையில் ஒரு மாற்றாக இல்லை. யூரோவின் எதிர்காலம், ஸ்திரத்தன்மை குறித்து உறுதி செய்யப்படவில்லை. ஜப்பான் நாணய மதிப்பு 20 ஆண்டுகளாகச் சிக்கலில் உள்ளது.சீனா மற்றும் ரஷ்யாவின் நாணயங்களை முழுமையாக மாற்றும் அளவுக்கு மதிப்பு இல்லை.

ஆலோசனை

சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தகக் கொள்கைகளின் அடிப்படையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எழுத்தாளர் ராபர்ட் ட்ரிபின், அந்நிய செலாவணிச் சந்தை மறு சீரமைக்கப்படவேண்டும் என்கிறார்.

Have a great day!
Read more...

English Summary

How the US Made Dollar As Weapon