டிம் குக் தூங்கி எழுந்த உடன் என்ன செய்வார் தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது அதிகரித்தது முதல் பலர் தூங்கி எழுந்த உடன் அதனைத் திறந்து வாட்ஸ்ஆப் தகவல்களைப் படித்த உடனே தங்களது நாட்களைத் தொடங்குகின்றனர்.

Advertisement

இந்திய அரசியல் தலைவர்கள் காலையில் எழுந்து உடன் முதல் வேலையாக நாளிதழ்கள் படிப்பதை தங்களது கடமையாக வைத்துள்ளனர். அப்படி உலகின் மிகப் பெரிய ஆடம்பர போன் நிறுவனமான ஆப்பிளின் தலைவரான டிம் குக் காலையில் எழுந்த உடன் என்ன செய்வார் தெரியுமா?

Advertisement

வாடிக்கையாளர்கள்

உலகின் மிகப் பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரால் தினமும் தங்களது வாடிக்கையாளர்களைச் சந்தித்து எல்லாம் பேச முடியாது. ஆனால் இவர் அதனைச் சற்று வித்தியாசமாகக் காலை 4 மணிக்கு எழுந்த உடன் தங்களது தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு அளித்த விமர்சனங்கள் மற்றும் கருத்துகளைப் படிப்பாராம்.

பேட்டி

இது குறித்து அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த டிம் குக் காலை எழுந்த உடன் ஜிம் சென்று உடற் பயிற்சி செய்வதும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் படிப்பது தான் காலையில் தான் செய்யும் பணிகள் என்று தெரிவித்துள்ளார்.

எதற்கு ஜிம்

ஜிம் சென்று உடற் பயிற்சி செய்வதால் அது வேலை செய்யும் போது தனக்கு உள்ள மன அழுத்தங்களி குறைக்க உதவுவதாகவும் டிக் குக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

டிம் குக் செய்யும் வணிகத்திற்கு அவர்களது தயாரிப்புகளின் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கருத்துக்களைப் பெற்று தெரிந்துகொள்வார் என்றாலும் இது போன்று நம்மாலும் நாம் செய்யும் சிறு வணிகங்களின் கருத்துக்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வணிகத்தினை எப்படி மேம்படுத்துவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

ஹோட்டல் வணிகம்

நீங்கள் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெற முடியவில்லை என்றாலும் ஜஸ்ட் டயல் போன்ற விளம்பர தளங்கள் மற்றும் உணவு டெலிவரி தளங்களில் நீங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும் போது அதில் வாடிக்கையாளர்கள் உங்கள் ஹோட்டல் பற்றி என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று படித்து அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை நிவர்த்திச் செய்யலாம். இப்படி நாம் செய்யும் வணிகத்தினைப் பொருத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்றுப் பின்பற்றுவதன் மூலம் பல குறைகளைத் தீர்க்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

English Summary

How Tim Cook spends the first hours of his workday
Advertisement