எனக்கு அவங்கள பாத்தாலே பிடிக்கல... ஜெய்ர் பால்சொனாரோ

இப்ப முதல் ரவுண்டு பிரேசில் அதிபர் தேர்தல் ரிசல்ட் சொல்லிட்டாங்க அதுல 46 சதவிகித ஓட்டுக்களோட நம்ம ஜெய்ர் பால்சொனாரோ (Jair Bolsonaro)தான் முன்னிலை வகிக்கிறாப்புல. இவர் அப்புடியே நம்ம டொனால்ட் ட்ரம்ப் மாதிரி ஒரு வலது சாரி. சொல்லப்போனா ட்ரம்போட காபி கேட். பிற்போக்கான சிந்தனை கொண்டவர். ஆனா நல்ல பிசினஸ் மேன். காசுன்னு வந்துட்டா மதம், ஜாதி எல்லாம் கடையாது. காசு எங்க இருந்தாலும், எதுல இருந்தாலும் எடுத்துடுவோங்குற மைண்ட் செட் உள்ள ஆளு. Trump of Tropic-ன்னு தான் வாசிங் டன் போஸ்ட், பிபிசி, நியூ யார்க் டைம்ஸ் மாதிரியான வெளிநாட்டு பத்திரிகைங்க இந்த ஜெய்ர் பால்சொனாரோ-வக் கூப்பிடுறாங்க. ஏன்னா நம்ம ஆளோட அரசியல் நிலைப்பாடு அப்புடி. அந்த அளவுக்கு ட்ரம்போட ஒட்டிப் பிறக்காத ரெட்டை பிறவி நம்ம ஜெய்ர் பால்சொனாரோ.

Advertisement

அறிமுகம்

1955-ல பொறந்து Agulhas Negras Military Academy-ங்குற ராணுவப் பள்ளியில படிச்சு பட்டம் வாங்குனவரு. 1971 - 1988- வரைக்கும் பிரேசில் நாட்டு ராணுவத்துல வேல பாத்தாப்புள. 1988ல தான் தலைவரோட அரசியல் பிரவேசம். 1991-ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்ப அதிபர் வேட்பாளரா லீடிங்ல இருக்காரு. 1964 - 1985 வரை பிரேசில் ஒரு சர்வாதிகார ராணுவ ஆட்சியின் கீழ தான் இருந்துச்சு. அந்த காலகட்டத்துல தான் நம் ஜெய்ர் பால்சொனாரோ ராணுவத்துல வேல பாத்தாரு. 1985-ல் ராணுவத்துக்கு எதிரா ராணுவ வீரர்களோட சம்பளம் ரொம்ப கம்மியா இருக்குன்னு ஒரு பத்திரிகைக்கு எழுதி ஜெயிலுக்கு எல்லாம் போன தியாகி சார் நம்ம ஜெய்ர் பால்சொனாரோ. ஆனா பெரிய வலது சாரி. இவருக்கு பெண்ணியம், தனி மனித உரிமை, ஜனநாயகம், கம்யூனிஸம், LGBT... இப்புடி பல விஷயம் பிடிக்காது.

Advertisement
பெண்ணியமா - பொடலங்கா- போங்கடி

"உன்னய எல்லாம் பாத்தா, எனக்கு எந்த மூடும் வரல, உன்னைய ரேப் கூட பண்ண எனக்கு விருப்பமில்ல"ன்னு பொது வெளில ஒரு கூட வேலை பாக்குற பொண்ண கேவலப்படுத்துனவரு நம்ம ஜெய்ர் பால்சொனாரோ. இன்னொரு இடத்தில் "பொம்பலப் புள்ளங்களுக்கு என்னய்யா தெரியும். நாம தான எல்லாத்தையும் பாத்துக்கணும்" என்று வெளிப்படையாக பெண்களை விமர்சித்தார். அதெல்லாம் விட "பொம்பளங்களுக்கு என்னத்துக்கு ஆம்பளங்களுக்கு நிகரா சம்பளம் கொடுக்கணும் சொல்லுங்க" என்று பத்திரிகையாளர்களையே கேட்டவர்.

அபார்ஷன் எல்லாம் தப்பு

பொண்ணுங்களுக்கு விருப்பம் இல்லன்னா கருவை கலக்கிறது தவறுன்னு பல இடங்கள்ள சொல்லி இருக்கார், இந்த சிங்கக் குட்டி ஜெய்ர் பால்சொனாரோ. என்ன ஆச்சர்யம்னா அந்த நாட்டு ஆம்பளங்களுக்கு, இந்த கருத்துல கொஞ்சம் உடன்பாடும் இருக்கு. பொண்ணுங்கள பிடிக்காததால, இவருக்கு பெண்கள் ஓட்டு வங்கி ரொம்பக் குறைவு. மாறா ஆண்களோட ஓட்டு வங்கி குவியுதாம். டியர் பிரேசிலியன்ஸ் நீங்க ஒரு ஆபத்தான மிருகத்துக்கு பால் வாக்குறீங்க.

என் பலவீனம் என்னோட பெண் குழந்தை

ஒரு சபையில "எனக்கு மொத்தம் ஐந்து குழந்தைங்க, அதுல நாலு பேரு பசங்க, சிங்கக் குட்டிங்க. ஒண்ணு மட்டும் பொண்ணு. அது என்னோட பலவீனத்தால வந்தது" என்று தான் பெற்ற பெண் குழந்தையையே சபையில் அசிங்கப்படுத்தும் அளவுக்கு பெண்களை வெறுக்கும் உத்தமர் நம் ஜெய்ர் பால்சொனாரோ.

ராணுவ ஆட்சிக்கு ஓகே

2016-ம் ஆண்டு பிரேசில் பிரதமர் தில்மா ரூசூஃப்-ஐ தண்டிக்க ஒட்டு போடுங்கன்னு கேட்டப்ப , கர்னல் அல்பெர்டோ பில்ஹண்டி உஸ்ட்ரா (Colonel Alberto Brilhante Ustra)-ங்குற ராணுவ அதிகாரிக்கு ஓட்டு போட்டவரு. இந்த கர்னல் பிரேசிலிய ராணுவச் சட்டப்படி கைதி செய்யப்பட்ட கைதிங்கள வரைமுறை இல்லாம டார்ச்சர் பண்ணி பல பேத்த பரலோகமே அனுப்பி இருக்காராம். இவருக்கு தான் அவரோட மதிப்புமிக்க, நாட்டு மக்களோட எண்ணத்த ஈடு ஏத்துற வோட்ட போட்டாரு நம்ம ஜெய்ர் பால்சொனாரோ. பிரேசில் சட்டசபையிலேயே திரும்ப ராணுவ ஆட்சி வரணும்ன்னு குரல் கொடுத்த வீரர் நம் ஜெய்ர் பால்சொனாரோ

செக்ஸ் ரொம்பப் பிடிக்கும்

Folha de S.Paulo-ங்குற பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தப்ப "எனக்கு சின்ன வயசுல கையில காசு கிடைக்காது. அப்புடியே கெடச்சா டக்கரா ஒரு பொண்ணப் பாத்து பேசி கரெக்ட் பண்ணி, நேரா செக்ஸ் வெச்சுப்பேன், அவ்வளவு சந்தோஷமா இருக்கும்"-ன்னு வெளிப்படையா சொன்னவரு ஜெய்ர் பால்சொனாரோ.

கருப்பின வெறுப்பு - நீ எல்லாம்

பிரேசில்ல ஆப்பிரிக்க வம்சாவளியினர்கள் ஒரு இனக் குழுவா வாழ்றாங்க, அந்த இனக்குழுவோட பெயர் quilombolas. அவங்க தங்கி இருக்குற இடத்தோட பேரு quilombo. "நான் சமீபமா ஒரு quilombo-க்கு போனே, அவங்க எல்லாரும் ரொம்ப குண்டா, கருப்பா அசிங்கமா இருக்கானுங்க. அங்க இருக்குறதுலேயே ரொம்ப வெயிட் கம்மியானவன் கூட ஒரு 100 கிலோ இருப்பான் போல, இவங்க எல்லாம் எதுக்கு இனவிருத்தியில ஈடுபடனுங்குறேன். சும்மா தண்டமா வாழ்ந்துகிட்டி இருக்காய்ங்க" என்று நமக்கே கோவம் வரும் ரீதியில் தன் கருத்துக்களை பதிவுச் செய்தவர் நம் ஜெய்ர் பால்சொனாரோ.

LGBT

"இப்ப என்னோட பொண்ண விட்டுடுங்க அது கெடக்குது கழுத. என் பசங்க யாராச்சும் இன்னொரு பையனோட செக்ஸ் வெச்சுக்கிறான்னு வெச்சுக்கங்க, ஒன்னு நானே அவன அடிச்சே கொன்னுடுவேன், இல்ல அவனே ஏதாவது கார்லயோ லாரிலயோ அடிபட்டு சாவட்டுங்குறேன்" என்று டிசம்பர் 2011-ல் ப்ளேபாய் இதழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். "என்னோட பசங்க என்னங்க, உலகத்துல எங்க, இந்த LGBT-ங்க கொடி பிடிச்சிக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தாலும் அடி தான் , உத தான் என் ஸ்டைல்"-ன்னு கிறுக்குத் தனமா ஸ்டேட்மெண்ட் விட்டவரு நம்ம ஜெய்ர் பால்சொனாரோ.

அயல் உறவு

எங்க நாட்டு விஷயத்துல இந்த சீனா காரணுங்க, தேவை இல்லாம நிறைய மூக்கு நுழைக்கிறாங்க. அவங்க இஷ்டத்துக்கு பொய் செய்திகள பரப்பி விடுறாங்க. அவங்களோட வியாபாரம் பண்ணலாம். அதுக்காக எங்க நாட்டையே அவங்க கிட்ட எல்லாம் தர மாட்டோம். அதே மாதிரி இந்த சர்வதேச அமைப்புங்குற பேருல இந்த இங்கிலாந்து எல்லாம் தேவை இல்லாம நொய்நொய்-ங்குது. அத எல்லாம் மொதல்ல நிறுத்துவேன். இது தான் நான் அதிபர் ஆன செய்யுற முதல் வேலை.

Lilia Schwarcz

"If we are to take seriously the things that Bolsonaro has said in the campaign, in my opinion Brazil's democracy is in grave peril," இது தான் பிரேசிலிய வரலாற்று ஆசிரியர் மற்றும் சா பாலோ பல்கலைகழக பேராசிரியர் லிலியா சுவார்க்ஸ்-ன் (Lilia Schwarcz) கருத்து.

தனியார்மயம்

பிரேசில் இந்தியாவைப் போன்ற பெரிய ஜனத் தொகை கொண்ட நாடு. உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. இதற்கு நம் ஜெய்ர் பால்சொனாரோ வைத்திருக்கும் ஒற்றைத் தீர்வு தனியார்மயம். "நல்ல வேலை வாய்ப்பு, குறைந்த பணவீக்கம், நல்ல கூலி என்று வழங்கும் நாடுகள்ள என்ன ஸ்ட்ராட்டஜியோ, அத அப்புடியே இங்க கடைபிடிச்சு அடுத்த சில வருஷத்துல நாட்டோட பொருளாதாரத்தையே தலைகீழா மாத்திருவோம்" இது தான் இவங்களோட பொருளாதாரக் கொள்கையாம்.

நான் யார் தெரியுமா

சார் நீங்க ஒரு நாட்டோட அதிபராகப் போறீங்க என்னங்க இப்புடி மொக்கயா ஒரு பதில் சொல்றீங்க-ன்னு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதுக்கு "நான் ஒரு ராணுவ கேப்டன், நான் எதுக்கு பொருளாதாரத்தப் பத்தி தெரிஞ்சுக்கணும், பேசணும்" என்று பதிலளித்தார். ஐயா இந்த நாட்டுல பென்ஷன், வியாபார முறைகள், வெளிநாட்டு வர்த்தக கொள்கைகள், வரி-ன்னு ஏகப்பட்ட சிக்கலான பிரச்னைங்க இருக்கு. இதை பத்தி நீங்க பேச மாட்டீங்கன்ன வேற யார் பேசுவா...? என்று மேலும் கேட்டதுக்கு "தம்பி அடுத்த கேள்வின்னு சொல்லியாச்சு, திரும்ப திரும்ப இதையே கேட்கக் கூடாது" என்று முறைத்திருக்கிறார்.

Heloísa Starling

1964-ல் பிரேசிலுக்கு ராணுவ ஆட்சி வந்த போது, ஆட்சியப் பிடித்தவர்களுக்கு ஒரு திட்டம் இருந்தது. இப்போது ஆட்சியைப் பிடிக்கப் போகும் ஜெய்ர் பால்சொனாரோ-க்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. இது தான் அந்த ராணுவ ஆட்சிக்கும், வரப் போகும் ராணுவ ஆட்சிக்கும் வித்தியாசம்" என்று Minas Gerais-பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் வரலாற்று ஆசிரியர் Heloísa Starling. வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இங்க ஒருத்தன வெச்சுக்கிட்டே வாழ முடியல, ராக்கெட் வாங்குனா தட விதிபேந்ங்குறான். அவங்கூட பேசுனா தட விதிப்பேந்ங்குறான். இப்ப இன்னொருத்தனும் அதே மாதிரி வந்தா உலகம் என்னத்துக்கு ஆறது.

 

English Summary

I am not interest to rape you, Jair Bolsonaro
Advertisement