S-400 வாங்குனா பொருளாதாரத் தடை போடுவேன், மிரட்டும் ட்ரம்ப். அப்படி என்ன ஸ்பெஷல் S400-ல். !

இது ஏதோ கத்திரிக்காய் வியாபாரம் இல்லை. பில்லியன் டாலர்களின் பணம் புரள இருக்கும் மெகா வியாபாரம். அதோடு ரஷ்யா தன்னால் கூடுமான வரை பயன்படுத்திவிட்டு பழைய ஈயம் பித்தளைகளையோ, பழைய ஸ்டாக்கையோ கொடுக்க வில்லை. சூடாகத் தயாரித்த தன் சுத்த பத்தமான பத்திர மாதத் தங்கத்தை இந்தியாவுக்குத் தர முன் வந்திருக்கிறது.

Advertisement

இண்ட்ரோ

ஒரு செட் S400-ன் விலை மட்டும் சுமார் 400 மில்லியன் டாலர். ஒரு செட்டில் 112 ராக்கெட் ஏவுகணைகள் இருக்கும். இதைத் தரையில் இருந்தே இயக்கலாம். ஒரு செட்டில் எட்டு லாஞ்சர்களும், ஒரு கமாண்ட் போஸ்டும் வழங்கப்படும். கமாண்ட் போஸ்டில் இருந்து தான் ஆயுதங்கள் தாக்குதலுக்கான கட்டளைகள், ரேடார் கண்காணிப்புகள் எல்லாம் இருக்கும். இதுவரை உலகில் 320 - 350 செட்டுகள் மட்டுமே தயாரித்திருக்கிறது ரஷ்யா. இந்த ரக ஏவுகணைகளுக்கு போட்டியான ஏவுகணைகள் இன்று வரை உலகில் இல்லை. அப்படிப் பட்ட பெரிய தவுளத் தான் இந்த S400. குறிப்பாக க்ரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் விமானங்களைத் தாக்கும் ஏவுகனைகளில் இதை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. இதை வைத்து அதிக உயரத்தில் பறக்கும் உளவு விமானத்தைக் கூட காலி செய்து விடலாம்.

Advertisement
ரக்கெட் ஸ்பெசிஃபிகேஷன்

தாக்குதல் தூரம்: 40 முதல் 400 கிலோமீட்டர்
பறக்கும் வேகம்: ஒரு நொடியில் 11,000 மைல்கள் (Target Velocity). ஒலியை விட 10 மடங்கு வேகமாக பயணிக்கக் கூடியது
எல்லை: வானில் 185 கிலோமீட்டர் உயரம் வரை சென்று இலக்கைத் தாக்க வல்லது.
எதை எல்லாம் தாக்கும்: க்ரூஸ் மிசைல் என்றழைக்கப்படும் ரேடாரில் தென்படாத ஏவுகணைகள், க்ரூஸ் ஏர் க்ராஃப்ட் என்றழைக்கப்படும் ரேடாரில் தென்படாத விமானங்கள் என்று வானில் பறக்கும் அனைத்தையும் தாக்கும்.
எத்தனை டார்கெட்: ஒரே நேரத்தில் 80 இலக்குகளைக் குறிவைக்கலாம்.
சக்சஸ் ரேஷியோ: இதுவரையான தாக்குதல்களில் 83.3 சதவிகிதம் இலக்குகளை முழுமையாக அழித்திருக்கிறது.
சிஸ்டம் ரெஸ்பான்ஸ் நேரம்: 9 - 10 நொடியில் தாக்கச் சொன்னால் வானில் பறக்கத் தொடங்கிவிடும்.

ஸ்பெஷலிஸ்ட்

இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் பார்டரில் விமான தாக்குதல்களை பெரிய அளவில் தடுக்கலாம். இந்த ஏவுகணைகளை இயக்க கொடுக்கப்பட்டுள்ள லாஞ்சர்கள் மற்றும் கமாண்ட் போஸ்டிலேயே ஒரு வலுவான ரேடாரும் கொடுக்கப்படும். இந்த ரேடாரை பயன்படுத்தி 500 - 600 கிலோமீட்டருக்கு முன்பே வரும் எதிரி விமானங்களை அடையாளம் கண்டு தாக்குதலைத் தொடங்கலாம். இந்த ரக ஏவுகணைகள் 40 முதல் 400 கிலோமீட்டர் வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கும். ஏவுகணைகளின் நீளம் மற்றும் எடையைப் பொறுத்து வெடி பொருட்கள் நிரப்பலாம். அதிகபட்சமாக 180 கிலோ வரை வெடி பொருட்களை நிரப்பலாம்.

போர் பங்கெடுப்பு

ரஷ்யாவின் தலை நகரான மாஸ்கோவை இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் தான் பாதுகாக்கின்றன. அதுவும் 2006 - 2007 காலத்தில் இருந்து. சிரிய யுத்தத்தில் இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. தன்னுடைய சுகோய் 24 ஜெட்டை தாக்கியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த S400 ரக ஏவுகணைகளை இறக்கி தன் வான் எல்லைகளை ஈ காக்கா கூட அண்டாத அளவுக்கு பத்திரப்படுத்திக் கொண்டது.

சமீபத்தைய கஷ்டமர்

நம் நட்பு நாடான சீனா மார்ச் 2014 வாக்கில் பல பில்லியன் டாலருக்கு வாங்கியது. பல செட்டுக்களை வாங்கியது. எத்தனைச் செட்டுக்களை வாங்கிப் போட்டிருக்கிறது. எங்கு எல்லாம் இந்த S 400-ஐ நிறுத்தி இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை. இவர்களே வாங்கி இருக்கும் போது இந்தியா வாங்காமல் இருந்தால் எப்படி.

இந்திய விமானப் படை தளபதி

ஏர் சீப் மார்ஷல் பி.எஸ். தனாவ் "இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் இந்திய விமானப் படைக்கான பூஸ்டர் ஷாட்களாக விளங்கும். பாகிஸ்தானிடம் 20-க்கும் மேற்பட்ட ஃபைட்டிங் ஸ்குவாட்ரான்கள் (போர் விமானப் படைகள்) புதிய ரக போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களோடு தயாராக இருக்கின்றன. சீனாவிடம் 1700 போர் விமானங்களே இருக்கின்றன. இந்தியாவிடம் அவ்வளவு போர் விமானங்கள் இல்லை. இந்தப் போர் விமானங்களைச் சமாளிக்க நம் இந்திய விமானப் படைக்கு கட்டாயம் S400 ரக ராக்கெட் ஏவுகணைகள் தேவை" என்று வெளிப்படையாக விவரிக்கிறார்.

English Summary

If you buy s400, i will announce sanction on you, trump is threating india. what is so special in S400
Advertisement